Monday, July 25, 2016

சாஃப்ட் ட்ரிங்க்ஸ் (கலர் குளிர் பானங்கள்) எனப்படும் நச்சு தன்மையுள்ள விஷம்

தற்போது சென்னையில் அதிக இடங்களில் சாஃப்ட் ட்ரிங்க்ஸ் எனப்படும் ரசாயன கலர் குளிர் பணம் விறகப்படுகிறது. இந்த கலர் குளிர் பாணங்களால் உடலுக்கு ஏதேனும் நன்மை கிடைக்கிறதா என்றால் நிச்சயமாக இல்லை. அது மற்றும் இல்லாமல் அவற்றினுள் அடங்கியுள்ள தீங்கு விளைவிக்கும் பொருட்கள் உடலுக்கு கேடு செய்கின்றன என்ற எச்சரிக்கையாவது இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை.


இதனால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன என்பதை பார்ப்போம்
பற்களுக்கு தீங்கு விளைவிக்கின்றன.

சொல்லப்போனால் அனைத்து விதமான குளிர் பானங்களும் அமிலச்சுவையுடன் இருக்கின்றன. இதில் கலந்துள்ள அமிலங்கள் பற்களின் எனாமலைப் பதம் பார்த்து கரைத்து விடுகின்றன. அதுமட்டுமில்லாமல் அதிலுள்ள சருக்கரை சத்து, பற்களை தாக்கும் பாக்டீரியாவை வளர்க்க உதவுகிறது.

சிலவற்றை தவிர அனைத்து விதமான குளிர் பானங்களும் குறிப்பிடப்பட்ட அளவை விட நச்சு கலந்த  தீங்கு பொருட்கள் அதிகம்  இருக்கின்றன என 2003-ம்  ஆண்டு அறிவியல் சுற்று சூழல் மையம் அறிக்கை வெளியிட்டது. இதை பற்றி யாரும் கவலை கொள்ளாமல் அலட்சியப் படுத்த பட்டு இன்றும் சுத்தமான பொருளாக விளம்பரமாகவும் சந்தையிலும் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.  குளிர்பானங்களால் எந்த விதமான ஊட்டச்சத்தும் இல்லை என்பதே உண்மை. அளவுக்கு மீறிய ரசாயனமும், உடலுக்கு தீங்கு ஏற்படும் நச்சு பொருளும்தான் அதிகம் உள்ளது என்பதே உண்மை. தேவைக்கு அதிகமான சர்க்க்கரை இரத்தத்தில் கலந்தால் அது கொலஸ்ட்ராலை அதிகரிக்க செய்யும். அதன் பிறகு, நீரிழிவு நோய், இரத்த அழுத்தம் , இதய நோய், பக்க வாதம் எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக நம் உடலில் வந்து தங்கும்.

குளிர்பானங்களில் சேர்க்க படும் ஆபத்தான ரசாயனங்கள்

Aspartame:
 "Light:" அல்லது "Diat"  குளிர்பானங்களில்  சர்க்கரைக்கு பதிலாக  aspartame  எனப்படும் செயற்கை இனிப்பூட்டி ரசாயனம் சேர்க்கப்பட்டுகிறது. இது கலோரி தருவதல்ல ஆனாலும் இது தாகத்தை தணிப்பதற்கு பதில் பசியையும்  தாகத்தையும் அதிகரிக்க செய்யும்.  2010ல் நடைபெற்ற ஆய்வில்  இது ஈரல், நுரையீரல் மற்றும் மூளையில் ட்யூமர் கட்டிகள் உருவாக்க கூடும் என கண்டறியப்பட்டது.

 இந்த aspartame  சிதைவுற்று மெத்தனால் ஆக மாறுகிறது. இது சுற்று சூழலுக்கு கேடு விளவிக்கும் ஒரு காரணியாகும்.
 மனித உடலில் இந்த மெத்தனால் மேலும் சிதைவுற்று formic acid மற்றும் formaldehyde ஆக மாறுகிறது.இது நரம்பு மண்டலத்தை தாக்கும் ஒரு விஷப்பொருள். இதனால் மைக்ரேன் எனும் ஒற்றைத் தலைவலி, மந்தம் ,பார்வைக்குறைபாடு மற்றும் மறதியை இந்த செயற்கை ரசாயனம் உருவாக்கும்.

Caramel:
         கோலா பானங்களின் பிரவுன் நிறத்திற்காக இந்த ரசாயனப் பொருள் சேர்க்கப்படுகிறது.இதில் உள்ள  ammonia மற்றும் sulphite  ஈரல் மற்றும் நுரையீரல் புற்று நோயை உருவாக்குகிறது.  மேலும் தைராய்ட், லூக்கேமியா போன்ற நோய்க்கு காரணமாவதாக CSPI U.S. research institute தெரிவிக்கிறது.

Phosphoric acid:
       சிட்ரிக் ஆசிட்டுக்கு பதிலாக கோலா பானங்களில் சேர்க்கப்படும் இந்த ரசாயனம் சிறுநீரக செயலிழப்பு மற்றும் Osteoporosis எலும்பு உடைதல் நோய்க்குக் காரணமாக இருக்கிறது.

Benzoic acid:
குளிர் பானங்கள் நெடு நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்க இந்த அமிலம் பயன்படுத்தப்படுகிறது. இது ஆஸ்துமா, பரு, தோலில் கட்டி, வெடிப்பு முதலியவற்றை உண்டாக்குகிறது. கூடவே எதிலும் குற்றம் கண்டுபிடிக்கும் மனப்பான்மையையும் உண்டாக்குகிறது.

Sulphur Dioxide
       எலுமிச்சை பானங்கள் கருப்பு நிறமாக மாறி விடாமல் இருக்க சல்ஃபர் டையாக்ஸைடு சேர்க்கப்படுகிறது. இது பானங்களில் உள்ள நறுமணம் போய்விடாமல் பாதுகாக்கிறது. இந்த  சல்ஃபர் டையாக்ஸைடு, ஒரு நச்சு முறிவு மருந்துதான். நலமாக உள்ள ஒருவர் தொடர்ந்து கலர் அருந்தியதும் மந்தநிலை, தெளிவற்ற பார்வை, தோலில் வெடிப்பு, வீக்கம், சோர்வு, இதயத்தில் ஓருவித இறுக்கம், அதிர்ச்சி, திடீர்க் கோபம், அதிர்ச்சியில் இறப்பு போன்றவை ஏற்படுகின்றன. அப்படி இருந்தால் ஆரோக்கியமான உடலில் கலர்  மூலம் சேர்ந்த  சல்பர் டையாக்ஸைடே காரணம்.

Caffine
         பானங்கள் நறுமணமாக இருக்க, இவை சேர்க்கப்படுகிறது. காஃபைன், உண்மையில் போதை தரும் ஒரு மருந்து. இது அதிகமானால் மத்திய நரம்பு மண்டலம் அடிக்கடி ஊக்குவிக்கப் படுவதால் விரைவில் தளர்ச்சியும் வந்துவிடுகிறது. இதனால் தூக்கமின்மை, நரம்புக் கோளாறு, எரிச்சல், வயிற்றுப் பொருமல், மனக்குழப்பம், இதயம் வேக வேகமாகத் துடித்து ஒரு விதப் பதட்டம் முதலியன ஏற்படுகின்றன. சிறுநீர்ப் பைகள், வயிறு முதலியவற்றில் புற்றுநோய், இரத்தக்கொதிப்பு, மேலும் ஆறு விதமான புற்றுநோய்கள் அடிக்கடி கலர் அருந்துகிறவர்களுக்கு வருகிறது. அடிக்கடி இளவயதில் கலர் அருந்தும் தம்பதிகளுக்கு பிறவியிலேயே குறைபாடு உள்ள குழந்தைகள் பிறந்துள்ளன.
இத்தகைய ஊக்க பானங்களை மதுவுடன் சேர்த்து அருந்துவது உடலுக்கு மிகவும் கேடு செய்யும். ஏனெனில் இவை தற்காலிகமாக மூளையை தூண்டுகின்றன. அதேசமயம் மது மூளையை மந்தப்ப்படுத்துகிறது. இந்த முரண்பட்ட தன்மையால் மனிதனின் நரம்பு மண்டல கட்டுபாடு சீர்குலைகிறது. மயக்கம் வாந்தி, இதயத் துடிப்பில் சீரின்மை உண்டாகிறது.

Tartrazine
       ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறத்திலும் கலர் பானங்கள் தயாரிக்கப் படுகின்றன. இந்த டார்ட்ராஜைன் Tartrazine என்ற கலரை நார்வே, பின்லாந்து ஆகிய நாடுகள் தடை செய்துள்ளன. இந்த வண்ணச் சாயம் தோலிற்கு அலர்ஜியைத் தந்து, உடலில் வீக்கம், கடுமையான ஜலதோஷம், கண்கள் சிவப்பாக மாறுதல், பார்வைக் குறைபாடு, நரம்புக்கோளாறு ஆகிய விளைவுகளை ஏற்படுத்துகின்றன. குளிர் பானங்களின் நிறத்துக்கு சேர்க்கப்படும் சிவப்புச் சாயம் புற்றுநோய், ஒவ்வாமை, சாப்பிட்ட உணவை அல்லது தயாரித்த உணவை நஞ்சாக மாற்றிவிடுகிறது.

carboxymethylcellulose
       ஐஸ்க்ரீமில் உள்ள carboxymethylcellulose எலிகளிடம் செய்த சோதனையில் 80% புற்று நோய் உரு்வாக்குவது கண்டு பிடிக்கப் பட்டது.

Aluminium
அலுமினிய கேன்களில் அடைக்கப்பட்டு வரும் குளிர்பானங்களில் அதன் அமிலத் தன்மையால் அலுமினியத்தோடு வினைபுரிந்து அலுமினியம் சிறு அளவாவது குளிர்பானத்தில் கலக்கும் வாய்ப்புள்ளது.மேலும் இந்த கேன்கள் பெட்டி பெட்டியாக கடைகளிலும் குடோன்களிலும் வைக்கப்பட்டிருக்கும் வேளையில் எலிகள் போன்ற பிராணிகளால்  கேன்களில் வாய் வைத்து குடிக்கும் பகுதியில் கிருமிதொற்று ஏற்படும் அபாயம் உள்ளது


பாக்கெட்டுகளில் அடைத்து வரும் பழச்சாறுகள் பலதும் உண்மையில் பழச்சாறுகள் அல்ல. சர்க்கரை, தண்ணீர், அராபிக் கம் எனப்படும் கோந்து மற்றும் சில ரசாயன வண்ணங்களும் எஸ்சென்சும் தான். பல சாஃப்ட் ட்ரிங்க் பொடிகளும் ஆபத்தான வெறும் ரசாயனக்கலவைகளே.எனவே, அடுத்த முறை கலர் அருந்த நினைக்கும் போது அந்த எண்ணத்தைக் கைவிட்டு, மோர், லெமன்ஜூஸ், காரட் ஜூஸ், இயற்கையான பழச்சாறுகள், இளநீர் போன்றவற்றை அருந்துங்கள். அதுவே நல்லது.

தாகம் ஏற்பட்டல் தயவு செய்து தண்ணீர் மட்டுமே அருந்துங்கள்.. ஜூஸ் அதற்கு தீர்வாகாது.சுத்தமான தண்ணீர் என்ற பிரமையை உருவாக்கி வரும் மினரல் வாட்டர்களிலும் எந்த விதமான சத்துப் பொருளும் இல்லை பதிலுக்கு ரசாயனங்களே சேர்க்கபடுகிறது.

பூமியிலிருந்து கிடைக்கும் இயற்கையான குடிநீரையும் பரிசோதித்து  நல்ல குடி நீராக மாற்றி உபயோகப் படுத்துவதே நல்லது.

என் பதிவை படித்ததற்கு நன்றி .