Saturday, January 22, 2011
ஊருக்குள்ள 10,15 பிரண்ட் வச்சிருக்குறவன்
நன்றாக இருந்தால் ஒரு ஒட்டு போடலாமே!
Saturday, January 15, 2011
இப்படியெல்லாம் இருந்தால் யாரைத்தான் நம்புவது...?
சமீபத்தில் நேற்று நடந்த ஒரு கொடுமையான நிகழ்ச்சி. இது உங்களுக்கு தெரியாதது அல்ல.
அதான் சபரி மலையில் அய்யப்ப பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி 102 பக்தர்கள் உயிர் இழந்தனர். நான் நேற்று இரவு சன் டிவி யில் பார்த்தேன். அதில் என்ன தெரிவித்தார்கள் என்றால் கூட்ட நெரிசலில் வாகனம் புகுந்ததால் ஐம்பது பேர் அதில் சிக்கி உயிர் இழந்ததாக கூறி இருந்தனர். ஆனால் பிறகு காலையில் பதிவில் படித்தபோது கூட்ட நெரிசலில் சிக்கி பலர் இழந்ததாக இருந்தது. எதை நம்புவது என்றே தெரியவில்லை.
இதெல்லாம் பரவாயில்லை. நேற்று நான் அதோடு இன்னொரு விஷயத்தையும் பரவலாக கேள்விப்பட்டேன்.
அது என்னவென்றால் போன வருடம் சபரி மலை ஐயப்பன் கடவுளுக்காக 1 கோடி மக்களுக்கு மேலாக மாலை அணிந்து உள்ளனர். ஆனால் இதில் சோழி என்னும் ஒரு ஜோசியம் மக்கள் மத்தியில் மிக பிரபலமாக இருந்தது. அதன் மூலம் சோழி போட்டு பார்த்ததில் உண்மையிலேயே மனம் முவந்து ஐயப்ப கடவுளுக்காக மனமுருக கடுமையான தவம் இருந்தவர்கள் வெறும் 11 மட்டுமே.. அப்படியென்றால் அந்த ஒரு கோடி மக்களில் வெறும் இவர்கள் மட்டும்தான் உண்மையானவர்களா??
இதற்கு எடுத்துகாட்டாக நான் நேரில் கண்ட சில உண்மைகளை தங்களிடம் கூறுகிறேன்.
நான் ஒரு நான் மார்க்கெட்டிற்கு சென்று காய்கறி வாங்குவதற்காக சென்று இருந்தேன். நான் அனைத்தையும் வாங்கி விட்டு பேருந்துக்காக காத்திருந்தபோது எனக்கு முன்னால் இருந்த ஒருவர் வாயில் சிகரெட் வைத்து புகையை வெளியேற்றினார். அவரை கூர்ந்து நோக்கியபோது அவர் ஒரு ஐயப்பனுக்காக விரதமேற்று மாலை அணிவித்து இருந்தார். எந்த விரதமாவது விரதம் இருக்கும்போது சிகரெட் பிடிக்கலாம் என்று கூறி இருக்கிறதா.?
இதுதான் உண்மையான விரதமா? அல்லது உண்மையிலேயே அவர் மாலை அணிந்த ஐயப்ப பக்தரா.?? அதற்கு அவர் மாலை அணியாமலேயே இருக்கலாமே. இவ்வாறு செய்து மற்ற உண்மையான ஐயப்ப பக்தரை அசிங்க படுத்துவதாக உள்ளது.
இன்னொரு சம்பவத்தை கூறுகிறேன்.
மற்றொரு நாள் ஒரு ஐயப்ப பக்தர்கள் தன் நண்பர்கள் மது அடித்து கொண்டு இருந்ததை கண்டு தானும் குடிப்பதற்காக தான் அணிந்த மாலையை கழட்டி வைத்து விட்டு அந்த மதுவை குடித்து விட்டு பிறகு மாலையை பழையபடி திரும்பி அணிந்து உள்ளார். இதுதான் உண்மையான பக்தியா...
உண்மையாக எவர் தவமிருந்து மாலை அணிந்து வருங்கின்றனரோ அவர்களுக்கு ஒரு தீமையும் அணுகாது ஐயப்ப கடவுள் காத்து வருகிறார்..
இதில் இன்னொரு கொடுமை என்னவெனில் மாலை அணிந்து விட்டு மலைக்கு செல்லும்போது கூடவே வண்டியில் மதுபானத்தையும் எடுத்து செல்கின்றனர். ஏனென்றால் மாலையை மலையில் கழட்டி வைத்தவுடன் உடனே மதுவை பருக வேண்டுமாம். அதை பருகி விட்டு வண்டி ஓட்டுகையில் சாலையில் விபத்து ஏற்படுகிறது. ஏன் அதை வீட்டிற்கு வந்து குடித்தால் என்ன குறைந்தா போய் விடுவார்கள்.
இன்னும் இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்.
இப்படியெல்லாம் இருந்தால் யாரைத்தான் நம்புவது...
உண்மையிலேயே முழு மனதோடு மாலை அணிந்து விரதமிருங்கள். உங்களை அந்த ஐயப்பன் காத்தருள்வார்.
பதிவு பிடித்திருந்தால் நீங்களே கூறுங்கள்.
Tuesday, January 11, 2011
தகவல் தொழில்நுட்பதுறையில் தற்போது படங்களை தயாரித்தால்???
* GMail s/o Email
* விண்டோஸ் தாண்டி வருவாயா..
* RAM தேடிய மதர்போர்டு.
* 7GB கூகிள் காலனி.
* எனக்கு 20 MB உனக்கு 18 MB
* ப்ரோக்ராம் ஆயிரம்.
* ஒரு மௌஸ் இன் கதை.
* மானிடருக்குள் மழை.
* எல்லாம் பிராசசர் செயல்.
* "C" manasula "C++"..
உங்களுக்கு தோன்றினால் நீங்களும் கூறலாமே..
Wednesday, January 5, 2011
முடிவு பண்ணிக்கங்க. உசுரா... ரீஷேரா.?
VIJAY stands for:
V = வெற்றி நாயகன்
I = இதயங்களின் வேட்டைக்காரன்
J = ஜெட் ஸ்பீட் டான்சர்
A = ஆக்க்ஷன் ஹீரோ
Y = யங்கர் ஆல் டைம்
.
.
.
புரிஞ்சுதா
(இந்த மெயிலை ப்ளாக்'ல போடலைனா
"காவலன்" படத்தைப் போட்டுக் காட்டுவேன்னு மிரட்டுறாங்கப்பா..!
அ
பாத்துட்
கெக்கெபிக்கேனு கமெண்ட் போடறது, பிடிச்சிருக்குன்னு லைக் பட்டனை அமுத்தறது...
எல்லோருக்
முடிவு பண்ணிக்கங்க.
ரீஷேரா..
Monday, January 3, 2011
மனிதனிடம் சிங்கம் கொண்ட பாசம்.
நான் படித்ததில் என்னை கவர்ந்த இந்த வரியினை உங்களுக்கு தெரிவிக்கிறேன். இதோ நீங்களும் படித்து மகிழுங்கள்.
நான் என் மகன் வீட்டில் ஒரு வீடியோ க்லிப் பார்த்தேன். ஒரு மிருகக்காட்சி
சாலையில் கூண்டிற்குள்ளிருந்த சிங்கம் வேடிக்கை பார்க்க வந்த வாலிபனை
கட்டித்தழுவி கொஞ்சிக்கொண்டிருந்தது. அந்த சிங்கத்தின் உயிரை 6
வருடங்களுக்கு முன் காப்பற்றியிருக்கிறான் அந்த வாலிபன். 6
வருடங்களுக்குப் பிறகு இப்பொழுதுதான் சந்திப்பு ஏற்பட்டிருக்கிறது.
அந்தச் சிங்கம் அவனை அடையாளம் கண்டு கொண்டு தன் நன்றியை அவ்விதம்
வெளிப்படுத்தியுள்ளது.
இதைப் பார்த்ததும் என் குடும்பத்தில் நடந்த இரண்டு சம்பவங்கள்
ஞாபகத்திற்கு வந்தது.
எங்கள் வீட்டில் ஒரு நாய் வளர்த்து வந்தோம். அதன் பெயர் ஜிம்மி.
அரக்கோணத்தில் என் தகப்பனார் பணியாற்றிய பொழுது ஜிம்மி தொலைந்துவிட்டது.
அதன் பின் மாற்றலாகி வேறு ஊருக்குச் சென்று விட்டோம். மூன்று
வருடங்களுக்குப் பிறகு மறுபடியும் அரக்கோணத்திற்கே மாற்றலாகி வந்தோம்.
ஒருநாள், எங்கள் வீட்டில் வேலை பார்த்து வந்த அம்மாளுடன் காஞ்சீபுரம்
சென்றேன். நான் முதலில் திரும்பிவிட்டேன். அந்த அம்மாள் இரண்டு நாட்கள்
கழித்து வந்தார்கள்.அவர் கூட ஒரு நாயும் வந்தது. வீட்டிற்குச் சற்று
தூரத்தில் வரும்பொழுதே அவர்களை என் தாயார் பார்த்துவிட்டார்கள். அந்த
அம்மாளுடன் வரும் நாய் தொலைந்துபோன ஜிம்மி மாதிரி உள்ளதே என்று நினைத்து
"ஜிம்மி" என்று குரல் கொடுக்க, அது பாய்ந்து ஒடிவந்து என் தாயார் மீது
தாவி முகமெல்லாம் நக்கி சுற்றிச் சுற்றி வந்து தாவி தாவி தன்
சந்தோஷத்தைக் காண்பித்தது என் கண் முன் வந்து நின்றது. அந்த அம்மாள்
கூறியது இன்னும் வியப்பாக இருந்தது. காஞ்சீபுரத்தில் வண்டி ஏறியதும் இந்த
நாயும் பக்கத்தில் வந்து காலடியில் படுத்துக்கொண்டதாம். அரக்கோணத்தில்
இறங்கியதும் அந்த நாயும் கூடவே வந்ததாம். என்னை அந்த அம்மாளுடன்
காஞ்சீபுரத்தில் பார்த்திருக்கவேண்டும். என்னைத் தவற விட்டு விட்டது.
அந்த அம்மாளுடன் வந்திருக்கிறது. இப்படித்தான் நடந்திருக்க வேண்டும்
என்று நாங்கள் ஊகித்தோம். அதன் பிறகு கடைசி காலம் வரை எங்களுடன்
இருந்தது.
மற்று மொரு சம்பவம்
வீட்டில் ஒரு குரங்கு குட்டி வளர்த்து வந்தார் என் தாயார். அது கொஞ்சம்
வளர்ந்ததும் அதை வளர்ப்பது சிரமம் என்று பலர் சொல்ல அதை ஒரு
குரங்காட்டிக்குக் கொடுத்து விட்டார். இது நடந்து ஒரு வருடம்
சென்றிருக்கும். சென்னையிலிருந்து ரெயிலில் ஓங்கோலுக்குச் சென்று
கொண்டிருந்தார்( அச்சமயம் என் தகப்பனாருக்கு ஓங்கோலில் வேலை). ஒரு
ஸ்டேஷனில் வண்டி நின்று கொண்டிருக்கும்பொழுது, ஒரு குரங்கு வண்டி ஜன்னல்
மீது தாவி கீச் கீச் என்று கத்திக்கொண்டு (சந்தோஷத்தில்) ஜன்னல் ஓரம்
உட்கார்ந்திருந்த என் தாயாரின் கன்னத்தைத் தடவிற்று. என் தாயார் பயந்து
நகர்ந்து கொண்டார். அப்பொழுது, குரங்காட்டி ஓடி வந்து என் தாயாரை
அடையாளங் கண்டு, "அம்மா! இது நீங்கள் எனக்குக் கொடுத்த குரங்குதான்
அம்மா! உங்களைப் பார்த்ததும் ஒடி வந்துவிட்டது என்றான். அதன் பிறகு
தைரியமாய் அதை அன்பாகத் தடவிக் கொடுத்தாள்.
எத்தனை வருடங்கள் கழிந்தாலும் தன்னை வளர்த்தவர்களை மறப்பதில்லை..
கமெண்ட் இருந்தால் தெரிவிக்கவும்.