Sunday, July 4, 2010

உஷாரய்யா உஷாரு

பிரபல ஓட்டலின் பார்ட்டி அறையில் ஆண்களும் பெண்களும் சிறிய அளவில் கூட்டம். அவர்கள் நடுவே நடுநாயகமாய் ஒரு இளம்பெண். அதிகபட்சம் முப்பது வயது இருக்கும். அந்த பெண் உள்ளிட்ட அனைவரது முகத்திலும் மகிழ்ச்சி.

அந்த அறைக்குள் வந்த பெண்கள் அத்தனை பேரும் அவளை கட்டி பிடித்து வாழ்த்து சொன்னார்கள். " நீ செய்தது சரிதான்." என்றார்கள். வந்திருந்த ஆண் நண்பர்களும் கைகுலுக்கி வாழ்த்தினார்கள். ஆண்களில் சிலர் அந்தப் பெண்ணின் கன்னத்தில் முத்தம் இட்டும் தங்கள் அன்பை வெளிப்படுத்தினார்கள்.
பார்ட்டியில் வித வித உணவுகள். கூடவே மதுவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால் வந்திருந்தவர்களில் பாதிப்பேர் பாட்டிலை திறக்க போய் விட்டார்கள். அந்தபெண்ணோ எதையோ சாதித்த திருப்தியில் வந்திருந்தவர்களை வரவேற்று சாப்பிட அனுப்பி கொண்டிருந்தாள்.
விஷயம் இது தான். அன்று தன் அந்தப் பெண்ணுக்கு கணவரிடம் இருந்து விவாகரத்து கிடைத்திருந்தது. அதை கொண்டாடத்தான் இந்த பார்ட்டி.
இத்தனைக்கும் விவாகரத்து வரை அந்தப் பெண்ணின் வாழ்க்கை போயிருக்க வேண்டியதில்லை. கணவன்-மனைவி இருவருமே வேலைக்கு போகிறவர்கள்.
நாலைந்து வருடமாகியும் குழந்தை இல்லை என்பதில் கூட தம்பதிகளுக்குள் கருத்து வேறுபாடு வந்தது இல்லை. அலுவலகத்தில் நான்கு முக்கிய தோழிகள் இருந்தார்கள். அவர்கள் எங்காவது முக்கிய நிகழ்சிக்கு என்று அழைத்தால் இந்தப்பெண் தவிர்க்காமல் சென்று வருவாள். இதனால் சில நாட்களில் நேரம் கழித்து அந்தப்பெண் வீட்டுக்கு வரத்தொடகினாள். கணவன் இதுபற்றி கேட்க போய் பிரச்சனை தொடங்கியது. இந்த நான்கு தோழிகளில் இருவர் விவாகரத்து பெற்றவர்கள். மற்ற இருவரது கணவர்கள் வெளி நாட்டில் சம்பாதித்து கொண்டிருக்கிறார்கள்.
இதற்கிடையே, தோழிகளின் நண்பர்கள் அழைக்கிற நிகழ்சிகளுக்கும் போய் வந்தாள். இதனால் ஒரு கட்டத்தில் கணவன்-மனைவி இருவருக்குமே முட்டிக் கொள்ள, ஒரு ராத்திரியில் வீட்டைவிட்டு வெளியேறினாள். அன்றுமுதல் விவாகரத்தான அலுவலக தோழிகளின் அறையிலேயே தங்கி அலுவலகம் போய் வந்தவளை கணவனும் போய் பார்த்து பேசினான். "நடந்தது நடந்ததாகாவே இருக்கட்டும். வீட்டுக்கு வந்துவிடு" என்று அழைத்து பார்த்தான். அனால் சொந்தமாக முடிவெடுக்க வேண்டிய அவளோ இதுவிஷயத்தில் தோழிகளிடம் ஆலோசனை கேட்டாள். "ராத்திரி என்றும் பாராமல் உன்னை வீட்டில் இருந்து துரத்தியர் தானே உன் கணவர். மறுபடியும் உன்னை திரும்ப துரத்த மாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம்?" என்று கூறி அவளது மனதை மாற்றினார்கள். அடுத்ததாக விவாகரத்து நோட்டீஸ் அனுப்புவது வரை தோழிகளே முன்னின்று உதவினர்.இதோ அதோ என்று இரண்டு வருடம் ஓடியது பிறகு விவாகரத்து தீர்ப்பும் வந்து விட்டது.
இதெல்லாமே இருக்கட்டும். "இந்த கொண்டாட்டம் முடிந்த பின் அந்த பெண்ணின் அடுத்த கட்ட நிலை என்ன? சமுதாயம் அவளை இனி பார்கபோகும் பார்வை எத்தகையது? அவள் மறுபடியும் ஒரு வாழ்வுக்கு தயாராகும் சூழல் அமையுமா? அப்படி அமைந்தாலும் அது அவளின் எதிர்காலத்துக்கு உகந்ததாக இருக்குமா?
நிஜத்தை தொலைத்து விட்டு நிழலை ஆராதிக்கும் இதுபோன்ற பெண்கள், தங்கள் நட்பு வட்டத்தில் உள்ள போலி ஆண்களின் போதைப் பொருளாகி விடும் அபாயமும் இருக்கவே இருக்கிறது.
எது எதற்கோ பார்ட்டி. இப்போது இதற்கும் பார்ட்டி.
பார்ட்டி மகிழ்ச்சிக்காக வாழ்க்கைக்கு உலை வைத்துவிட வேண்டாமே.

உஷாரு தொடரும்....

No comments:

Post a Comment