Saturday, January 15, 2011

இப்படியெல்லாம் இருந்தால் யாரைத்தான் நம்புவது...?

உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா..

சமீபத்தில் நேற்று நடந்த ஒரு கொடுமையான நிகழ்ச்சி. இது உங்களுக்கு தெரியாதது அல்ல.

அதான் சபரி மலையில் அய்யப்ப பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி 102 பக்தர்கள் உயிர் இழந்தனர். நான் நேற்று இரவு சன் டிவி யில் பார்த்தேன். அதில் என்ன தெரிவித்தார்கள் என்றால் கூட்ட நெரிசலில் வாகனம் புகுந்ததால் ஐம்பது பேர் அதில் சிக்கி உயிர் இழந்ததாக கூறி இருந்தனர். ஆனால் பிறகு காலையில் பதிவில் படித்தபோது கூட்ட நெரிசலில் சிக்கி பலர் இழந்ததாக இருந்தது. எதை நம்புவது என்றே தெரியவில்லை.

இதெல்லாம் பரவாயில்லை. நேற்று நான் அதோடு இன்னொரு விஷயத்தையும் பரவலாக கேள்விப்பட்டேன்.

அது என்னவென்றால் போன வருடம் சபரி மலை ஐயப்பன் கடவுளுக்காக 1 கோடி மக்களுக்கு மேலாக மாலை அணிந்து உள்ளனர். ஆனால் இதில் சோழி என்னும் ஒரு ஜோசியம் மக்கள் மத்தியில் மிக பிரபலமாக இருந்தது. அதன் மூலம் சோழி போட்டு பார்த்ததில் உண்மையிலேயே மனம் முவந்து ஐயப்ப கடவுளுக்காக மனமுருக கடுமையான தவம் இருந்தவர்கள் வெறும் 11 மட்டுமே.. அப்படியென்றால் அந்த ஒரு கோடி மக்களில் வெறும் இவர்கள் மட்டும்தான் உண்மையானவர்களா??

இதற்கு எடுத்துகாட்டாக நான் நேரில் கண்ட சில உண்மைகளை தங்களிடம் கூறுகிறேன்.

நான் ஒரு நான் மார்க்கெட்டிற்கு சென்று காய்கறி வாங்குவதற்காக சென்று இருந்தேன். நான் அனைத்தையும் வாங்கி விட்டு பேருந்துக்காக காத்திருந்தபோது எனக்கு முன்னால் இருந்த ஒருவர் வாயில் சிகரெட் வைத்து புகையை வெளியேற்றினார். அவரை கூர்ந்து நோக்கியபோது அவர் ஒரு ஐயப்பனுக்காக விரதமேற்று மாலை அணிவித்து இருந்தார். எந்த விரதமாவது விரதம் இருக்கும்போது சிகரெட் பிடிக்கலாம் என்று கூறி இருக்கிறதா.?
இதுதான் உண்மையான விரதமா? அல்லது உண்மையிலேயே அவர் மாலை அணிந்த ஐயப்ப பக்தரா.?? அதற்கு அவர் மாலை அணியாமலேயே இருக்கலாமே. இவ்வாறு செய்து மற்ற உண்மையான ஐயப்ப பக்தரை அசிங்க படுத்துவதாக உள்ளது.

இன்னொரு சம்பவத்தை கூறுகிறேன்.

மற்றொரு நாள் ஒரு ஐயப்ப பக்தர்கள் தன் நண்பர்கள் மது அடித்து கொண்டு இருந்ததை கண்டு தானும் குடிப்பதற்காக தான் அணிந்த மாலையை கழட்டி வைத்து விட்டு அந்த மதுவை குடித்து விட்டு பிறகு மாலையை பழையபடி திரும்பி அணிந்து உள்ளார். இதுதான் உண்மையான பக்தியா...

உண்மையாக எவர் தவமிருந்து மாலை அணிந்து வருங்கின்றனரோ அவர்களுக்கு ஒரு தீமையும் அணுகாது ஐயப்ப கடவுள் காத்து வருகிறார்..

இதில் இன்னொரு கொடுமை என்னவெனில் மாலை அணிந்து விட்டு மலைக்கு செல்லும்போது கூடவே வண்டியில் மதுபானத்தையும் எடுத்து செல்கின்றனர். ஏனென்றால் மாலையை மலையில் கழட்டி வைத்தவுடன் உடனே மதுவை பருக வேண்டுமாம். அதை பருகி விட்டு வண்டி ஓட்டுகையில் சாலையில் விபத்து ஏற்படுகிறது. ஏன் அதை வீட்டிற்கு வந்து குடித்தால் என்ன குறைந்தா போய் விடுவார்கள்.

இன்னும் இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்.

இப்படியெல்லாம் இருந்தால் யாரைத்தான் நம்புவது...

உண்மையிலேயே முழு மனதோடு மாலை அணிந்து விரதமிருங்கள். உங்களை அந்த ஐயப்பன் காத்தருள்வார்.

பதிவு பிடித்திருந்தால் நீங்களே கூறுங்கள்.

10 comments:

  1. உங்களுக்கும் என்னுடைய இனிய மனமார்ந்த போகி, பொங்கல், மாட்டு பொங்கல், மற்றும் பூப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
    இன்னும் இரண்டு நாளைக்கு பின்னூட்டம் இதுதான்...

    ReplyDelete
  2. நீங்க சொன்ன விஷயம் ரொம்ப சென்சிடிவ்வானது.
    இதனாலையே உண்மையான பக்திக்கும் ,பக்தர்க ளுக்கும்,மதிப்பு இல்லாமலே போய்விடுகிறது.

    ReplyDelete
  3. மனருக விரதமிருந்த அந்த 11 பேருக்கும் எமது வந்தனங்கள். எல்லா விஷயங்களிலும் போலிகள் இருப்பது போல சாமி விஷயத்திலும் போலிகள் உண்டு, என்ன இங்கு ரொம்ப அதிகமாக இருக்கிறது.

    ReplyDelete
  4. //sakthistudycentre-கருன் said...

    இன்னும் இருக்கிறார்கள் பக்தன் என்னும் போர்வையில்

    ReplyDelete
  5. //பாரத்... பாரதி... said...

    தாங்கள் கூறுவது உண்மையே.. நிறைய பேர் இருக்கிறார்கள். வெல்கம்

    ReplyDelete
  6. சோழி போடுவது அது இது என்பது போல் எனக்கு நம்பிக்கை இல்லை.. ஐயப்பனுக்கு விரதமிருந்தால் என்னென்ன செய்யகூடாது அதன் காரணம் என்ன என்பதை உங்களால் விளக்க முடியுமா.??? உண்மையான விரதம் இருந்தவரை தான் உங்கள் ஐயப்பன் காப்பாற்றுவார் என்றால் அதற்கு பெயர் கடவுளா.??? நண்பரே நீங்கள் சொல்வது உண்மைதான்.. ஐயப்ப பக்தராக இருக்கும்போது இதுபோன்ற காரியங்களில் ஈடுபடக்கூடாது.. ஆனால் சோழி, ஐயப்பன் காப்பார் போன்ற வார்த்தைகளை ஏற்கமாட்டேன்.. காலையில மாலை போட்டு மதியம் சாமிய பாக்குற ஆளுக கூட இருக்காக.. நீங்க சொல்றது ஒழுங்கா விரதம் பண்ணாததால தான் அவுக செத்தத போல சொல்றீக.. அப்படி ஒழுங்கா விரதம் பண்ணாதவங்கள சாமி தண்டிக்கும்னா, சாமிக்கும் சாத்தானுக்கும் வித்யாசம் இல்லையா.???
    நான் உருவ வழிபாடை எதிர்கிறேன்.. இருப்பினும் உங்களது நம்பிக்கைகளை மதிக்கிறேன்.. ஆபத்தில் உதவுபவனை கடவுளாக பார்க்கிறேன்.. உருவ வழிபாடைஎதிர்த்தாலும் என்னுடைய இறுதி வாழ்க்கை லட்சியம் என்னவென்றால் இந்தியாவில் இருக்கும் பழமையான கோவில்கள் அனைத்தையும் பார்த்திட வேண்டும் என்பதுதான்.. நான் சபரிமலைக்கு வருடா வருடம் சென்று வருகிறேன் என்பதையும் தெரிவித்துகொள்கிறேன்..

    ReplyDelete
  7. உங்களுக்கும் உங்களுடைய குடும்பத்தினர் அனைவருக்கும் என்னுடைய இனிய பொங்கல்நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. உங்களை இங்கே அழைக்கிறேன்.

    http://bloggersbiodata.blogspot.com/

    ReplyDelete
  10. நான் சொல்லப் போனால் உங்க தளம் ரெம்ப நல்லா இருக்கி எங்களை வந்து பாருங்க..........www.modelgirlsworlds.co.cc

    ReplyDelete