Wednesday, February 23, 2011

அனைவருக்கும் ஓர் முக்கிய அறிவிப்பு.....

வணக்கம் நண்பர்களே,

இந்த பதிவு ஒரு அறிக்கை..

அனைவருக்கும் ஒரு முக்கிய அறிவிப்பை இங்க கூறுகிறேன். ஞாபகத்தில் வைத்து கொள்ளுங்கள்.

அடுத்த ஆறு மாதத்திற்கு மொபைல் போன் யாரும் வாங்க வேண்டாம். இதுதான் அந்த முக்கிய தகவல். ஏன் என்றால்,


வரும் சட்ட மன்ற தேர்தலில் தி.மு.க அணி வெற்றி பெற்றால்
அனைவருக்கும் இலவசமாக 3G கொண்ட மொபைல் மற்றும் தி.மு.க அணியின் போஸ்ட் பைட் சிம் கொண்ட பொருள் அனைத்து ரேஷன் கார்டு'க்கும் வழங்க படுகிறது.

அப்படி வழங்கும் இந்த மொபைல் இல் உள்ள வசதிகள் என்ன தெரியுமா?

தி.மு.க அணி சிம் டு தி.மு.க அணி சிம் கால் முற்றிலும் இலவசம்.

ஒரு ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் புல் டாக்டைம்..

விவசாயிகளுக்கு மொபைல் பில் முற்றிலும் இலவசமாக பேசிக்கொள்ள அனுமதிக்க படலாம்.

ஆனால் ஒரே ஒரு கண்டிஷன்...



தினமும் எட்டு மணி நேரம் சிக்னல் கிடைக்காது...
விருப்பம் இருந்தா பொறுத்திருங்கள்..



இந்த நகைச்சுவை எனக்கு மொபைல் மூலம் வந்தது.


சரி இந்த நகைச்சுவை பிடிச்சிருக்கா.. அப்படியே ஒரு கமெண்ட் சொல்லிட்டு போங்க... டா டா......

Monday, February 21, 2011

கம்ப்யூட்டர் தகவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில.

என் இணைய நண்பர்களுக்கு வணக்கம்..

இன்றைய பதிவில் ஒரு உபயோகமான தகவலோடு உங்களை சந்திக்க வருகிறேன். நான் கண்ட ஒரு வித்தியாசமான சாப்ட்வேர் ஐ உங்களுக்கு அறிமுகபடுத்துகிறேன்.

அது என்னவென்றால் உங்களுக்கு உங்கள் கணினி உதிரிபாகங்கள் பற்றி அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பு இருக்காது. சிலருக்கு தெரிந்திருக்கலாம். பலருக்கு தெரியாதிருக்கலாம். இது தெரியதர்களுக்கான பதிவு.

உங்கள் கணினியில் உள்ள மதர்போர்டு, மெமரி, மற்றும் கம்ப்யூட்டர் பற்றிய அனைத்து தகவல்களும் உடனடியாக ஒரே விண்டோவில் தெரிந்து கொள்ளலாம்.

அந்த சாப்ட்வேர் இன் பெயர் CPU-Z என்பதாகும். இதன் அளவு மிக குறைந்த அளவுதான். டவுன்லோட் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இதை உங்கள் கணினியில் தரவிறக்கி கொண்டால் போதும். அதன் பின் அதை ரன் செய்தால் அதில் உங்கள் கணினியின் அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் உங்களுக்கு தெரிவித்து விடும்.

படங்களை கீழே காணவும்.
இந்த படமானது உங்கள் CPU- வை பற்றி தெரிவிக்கும்.


இது உங்கள் கணினியின் cache மெமரி யின் அளவை காண்பிக்கும்.



மற்றும் மதர்போர்டு, ராம் மெமரி , மற்று கிராபிக்ஸ் பற்றிய அனைத்து அளவுகளையும் இது உங்களுக்கு உடனுக்குடன் தெரிவிக்கிறது.

டவுன்லோட் லிங்க் : இங்கே

சந்தேகம் இருந்தால் கமெண்ட் மூலம் தெரிவிக்கவும். அடுத்த பதிவில் ஆண்டிராய்டு எவ்வாறு இன்ஸ்டால் செய்வது என்பதை பதிவிடலாம் என்று இருக்கிறேன். விருப்பம் இருந்தால் கூறுங்கள். பதிவு இடுகிறேன். நன்றி.

Thursday, February 17, 2011

ஆண்ட்ராய்டில் OnFocusChangeListener() என்றால் என்ன?

என் இணைய நண்பர்களுக்கு வணக்கம்,

நான் எனது கல்லூரி ப்ராஜெக்ட் காரணமாக பதிவு எழுத நேரம் கிடைக்காமல் அதிலேயே மூழ்கி இருந்தேன்..

இங்கே நான் என்ன பதிவு எழுத போகிறேன் என்றால், நான் தற்போது ஆண்ட்ராய்ட் என்னும் மொபைல் இயங்கு தளத்தில் ப்ராஜெக்ட் செய்து கொண்டு இருக்கிறேன். நேற்று ஒரு விளக்கம் பெறுவதற்காக இணையத்தில் தேடியபோது அதற்கான விளக்கம் கிடைக்காமல் தவித்தேன். தற்போது அதை எனது அட்வைசர் மூலமாக பெற்றேன். அதை உங்களுக்கும் தெரிவிக்கிறேன்.


ஆண்ட்ராய்டில் OnFocusChangeListener() என்பது இணயத்தில் அதிகம் விளக்கம் இல்லாத காரணத்தில் இதை தெரிவிக்கிறேன்.

OnFocusChangeListener() என்றால் நான் இரண்டு textbox உருவாக்கி இருக்கிறேன் என்றால் அதில் முதல் textbox'இல் ஏதாவது டைப் செய்து விட்டு அதற்குரிய cursor'ஐ அங்கிருந்து இரண்டாவது textbox'ற்கு மாற்றும்போது தானாகவே நீங்கள் ஏற்கனவே செய்து வைத்திருக்கும் text அதில் பிரிண்ட் ஆகி வரும்.. விளக்கத்திற்கு கீழே அதற்குரிய coding மற்றும் படமும் இணைத்துள்ளேன். படித்து நீங்களும் செய்து பார்த்து பின்னர் திணற வேண்டாம்.

இது textbox உருவாக்க தேவையான main.xml பைல்


இது தனியாக ஒரு கிளாஸ் உருவாக்கி இதை பேஸ்ட் செய்யவும்.


public class Test extends Activity implements OnFocusChangeListener
{
/** Called when the activity is first created. */
EditText text1,text2;
@Override
public void onCreate(Bundle savedInstanceState)
{
super.onCreate(savedInstanceState);
setContentView(R.layout.main);
text1 = (EditText)findViewById(R.id.EditText01);
text2 = (EditText)findViewById(R.id.EditText02);
text1.setOnFocusChangeListener(this);
}
@Override
public void onFocusChange(View v, boolean hasFocus)
{

if(!hasFocus)
{
text2.setText("Hello");
}
else
{
text2.setText("");
}
}
}

idharkaana padam keelae ullahdu.

இங்கே என்ன குறிப்பிட்டு உள்ளேன் என்றால் நான் முதல் textbox'இல் ஒன்றும் டைப் செய்யாமல் cursor'ஐ இரண்டாவது textbox'ற்கு மாற்றும்போது எனக்கு "Hello" என்னும் எழுத்து வருமாறு செட் செய்து உள்ளேன். விளக்கத்திற்கு படத்தை காணவும்.





இப்போது நான் மீண்டும் cursor'ஐ மேலே உள்ள textbox'ற்கு நகர்த்தும்போது அந்த எழுத்தும் மறையும்படி செய்து உள்ளேன். நீங்களும் செய்து பாருங்கள். நன்றி.

சந்தேகம் இருந்தால் தெரிவிக்கவும்.

நன்றி எனது அலுவலக அட்வைசர் மணிகண்டன்..