இதை எனது பஸ்'ஸில் இருப்பதை தங்களிடம் பகிர்ந்து உள்ளேன்.
தேவையான பொருட்கள்:
1. திருஷ்டி - 5 (நன்கு கனிந்த திருஷ்டியாக இருக்க வேண்டும்)
2. ஒரு கை - கழுவி சுத்தம் செய்தது
3. இளிச்சவாயர்கள் - 3
செய்முறை:
1. கனிந்த திருஷ்டிகளை வெந்நீரில் சிறிது நேரம் போட்டு வைக்கவும்
2. பிறகு அதை எடுத்து குளிர்ந்த நீரில் நன்கு அலசவும்
3. அலசிய திருஷ்டிகளை சீரான அளவில் வெட்டி எடுத்துக்கொள்ளவும்
4. தேர்ந்தெடுத்த மூன்று இளிச்சவாயர்களைக் கிழக்குப் பார்த்து உட்கார வைக்கவும்.
5. கழுவி சுத்தம் செய்த கையால் (வலது கையெனில் சிறப்பு) ஒரு கைப்பிடி திருஷ்டியை அள்ளவும்
6. அள்ளியை திருஷ்டியை க்ளாக்வைஸ் டைரக்ஷனில் மூன்று முறையும் ஆண்ட்டி க்ளாக்வைஸ் டைரக்ஷனில் மூன்று முறையும் சுத்தவும்.
7. இப்படிச் சுத்தும்போது இளிச்சவாயர்கள் தங்கள் தலையைக் கை இருக்கும் திசையிலேயே திரும்புமாறு பார்த்துக்கொள்ளவேண்டியது அவசியம்.
குறிப்பு: சிந்தாமல் சிதறாமல் சுற்றப்படும் திருஷ்டி சூடாகச் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்
கருத்து இருந்தால் மறக்காமல் தெரிவியுங்கள். நன்றி.
Saturday, April 16, 2011
Tuesday, April 5, 2011
ஆம்னி பஸ்சில் அனாமத்தாக இருந்த 5 கோடி!
அமைச்சர் நேருவின் உறவினர் உதயகுமார் என்பவருக்கு சொந்தமான ஆம்னி பஸ்சில் கட்டுக்கட்டாக ரூ.1000 கரன்சிகள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திருச்சி பொன்நகரில் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் நேருவின் உறவினருக்கு சொந்தமான ஆம்னி பஸ்சில் மாவட்ட ஆர்.டி.ஓ. சங்கீதா தலைமையில் போலீசார் சந்தேகத்திற்கிடமான வகையில் நடத்திய அதிரடி சோதனையில் 5 பைகள் சிக்கின. இந்த பைகளை பிரித்து பார்த்த போது கட்டுக்கட்டாக ரூ. 1000 , 500 கரன்சி நோட்டுகள் சிக்கியதாக கூறப்படுகிறது. கைப்பற்றப்பட்ட பணத்தினை மதி்ப்பு ரூ. 5 கோடியே, 5 லட்சத்து 27 ஆயிரம் என கணக்கிடப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. கைப்பற்றப்பட்ட பணம் வாக்காளர்களுக்கு கொடுக்க கடத்தி வரப்பட்டதா? என்பது குறித்தும் ,மொத்த தொகை எவ்வளவு என்பன குறித்தும் விசாரணை தீவிர விசாரணை நடந்து வருகிறது. மேலும் உதயகுமாரின் அலுவலகம், வீடு ஆகிய இடங்களில் வருமானவரித்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அனைத்து பணமும் பறக்கும் படையினரிடம் சிக்கியது...
நன்றி தினமலர்.
டுடே லொள்ளு..
நன்றி தினமலர்.
டுடே லொள்ளு..
Subscribe to:
Posts (Atom)