Tuesday, April 5, 2011

ஆம்னி பஸ்சில் அனாமத்தாக ‌இருந்த 5 கோடி!

அமைச்சர் நேருவின் உறவினர் உதயகுமார் என்பவருக்கு சொந்தமான ஆம்னி பஸ்சில் கட்டுக்கட்டாக ரூ.1000 கரன்சிகள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திருச்சி பொன்நகரில் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் நேருவின் உறவினருக்கு சொந்தமான ஆம்னி பஸ்சில் மாவட்ட ஆர்.டி.ஓ. சங்கீதா தலைமையில் போலீசார் சந்தேகத்திற்கிடமான வகையில் நடத்திய அதிரடி சோதனையில் 5 பைகள் சிக்கின. இந்த பைகளை பிரித்து பார்த்த போது கட்டுக்கட்டாக ரூ. 1000 , 500 கரன்சி நோட்டுகள் சிக்கியதாக கூறப்படுகிறது. கைப்பற்றப்பட்ட பணத்தினை மதி்ப்பு ரூ. 5 கோடியே, 5 லட்சத்து 27 ஆயிரம் என கணக்கிடப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. கைப்பற்றப்பட்ட பணம் வாக்காளர்களுக்கு கொடுக்க கடத்தி வரப்பட்டதா? என்பது குறித்தும் ,மொத்த தொகை எவ்வளவு என்பன குறித்தும் விசா‌ரணை தீவிர விசாரணை நடந்து வருகிறது. மேலும் உதயகுமாரின் அலுவலகம், வீடு ஆகிய இடங்களில் வருமானவரித்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அனைத்து பணமும் பறக்கும் படையினரிடம் சிக்கியது...

நன்றி தினமலர்.

டுடே லொள்ளு..

3 comments:

  1. ஊழலை கண்டுபிடித்து கூட தி . மு .க தான்

    ReplyDelete
  2. வணக்கம் திரு.ரவி. தங்களின் வலைபூ...சிறப்பு.... தங்களின் பணிசிறக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete