இதை எனது பஸ்'ஸில் இருப்பதை தங்களிடம் பகிர்ந்து உள்ளேன்.
தேவையான பொருட்கள்:
1. திருஷ்டி - 5 (நன்கு கனிந்த திருஷ்டியாக இருக்க வேண்டும்)
2. ஒரு கை - கழுவி சுத்தம் செய்தது
3. இளிச்சவாயர்கள் - 3
செய்முறை:
1. கனிந்த திருஷ்டிகளை வெந்நீரில் சிறிது நேரம் போட்டு வைக்கவும்
2. பிறகு அதை எடுத்து குளிர்ந்த நீரில் நன்கு அலசவும்
3. அலசிய திருஷ்டிகளை சீரான அளவில் வெட்டி எடுத்துக்கொள்ளவும்
4. தேர்ந்தெடுத்த மூன்று இளிச்சவாயர்களைக் கிழக்குப் பார்த்து உட்கார வைக்கவும்.
5. கழுவி சுத்தம் செய்த கையால் (வலது கையெனில் சிறப்பு) ஒரு கைப்பிடி திருஷ்டியை அள்ளவும்
6. அள்ளியை திருஷ்டியை க்ளாக்வைஸ் டைரக்ஷனில் மூன்று முறையும் ஆண்ட்டி க்ளாக்வைஸ் டைரக்ஷனில் மூன்று முறையும் சுத்தவும்.
7. இப்படிச் சுத்தும்போது இளிச்சவாயர்கள் தங்கள் தலையைக் கை இருக்கும் திசையிலேயே திரும்புமாறு பார்த்துக்கொள்ளவேண்டியது அவசியம்.
குறிப்பு: சிந்தாமல் சிதறாமல் சுற்றப்படும் திருஷ்டி சூடாகச் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்
கருத்து இருந்தால் மறக்காமல் தெரிவியுங்கள். நன்றி.
No comments:
Post a Comment