Saturday, October 30, 2010

இனி உங்கள் ஆர்குட்டிலும் பாடல் கேட்கும் .!!!!!!!!

இங்கே நான் பதிவிட்டு இருப்பது பலருக்கு தெரிந்து இருந்தாலும் தெரியதவர்களுக்கான பதிவு இது... இங்கே நான் கூறி இருப்பது சுலப முறையாக இருப்பதால் தெரிந்தவர்களும் அதனை தெரிந்து கொள்ளுங்கள். ஆனால் பலருக்கு இது தெரிந்தும் இருக்கலாம்.

உங்கள் ஆர்குட்டில் பாடலை செட் செய்வது மிகவும் சுலபமான வழியாகும்..
முதலில் உங்கள் ஆர்குட்டை திறந்து கொள்ளுங்கள். பின்பு உங்களுக்கு பிடித்த பாடலை கூகிள் சர்ச் பாரில் தேடி தேர்வு செய்து கொள்ளுங்கள். "நான் மின்னல் ஒரு கோடி" என்ற பாடலை விஐபி படத்தில் இருந்து தேர்வு செய்துள்ளேன்.

முதலில் உங்கள் பாடலுக்கான லிங்க் உள்ள இடத்தில உங்கள் மவுஸ் கர்சரை கொண்டு சென்று அதை ரைட் கிளிக் செய்து ஓபன் என்று கொடுத்தால் அவை புதிதாக ஒரு விண்டோவில் பாடலுக்கான எக்ஸ்டன்சன் அதன் அட்ரஸ் பாரில் இருக்கும். அதாவது URL லிங்க் அங்கே இருக்கும். டவுன்லோட் என்று வருவதை கேன்சல் செய்து விடவும். அவை .mp3 என்ற எக்ஸ்டன்சன் ஆக இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும்.

மாதிரி:
http://tamildot.net/V/VIP/Tamilmp3world.Com%20-%20Minnal%20Oru%20Kodi.mp3

என்பதை அதன் அட்ரஸ் பாரில் இருந்து காப்பி செய்து கொள்ளவும்.
அதை இங்கே உள்ள லிங்க்ல் சென்று click நீங்கள் செலக்ட் செய்து


mp3 given below என்ற இடத்தில் நீங்கள் காப்பி செய்து உள்ள அட்ரஸ் பாரை பேஸ்ட் செய்து ஜெனரேட் கோடு என்பதை கிளிக் செய்தால் உங்களுக்கு கீழே உள்ள பாக்ஸ் ல் ஒரு கோடு உங்களுக்கு கிடைக்கும். அதை அப்படியே காப்பி செய்து கொள்ளுங்கள்.

இப்பொழுது உங்கள் ஆர்குட் அக்கவுண்டை ஓபன் செய்து கீழே உள்ளது போன்று செய்து கொள்ளுங்கள்.


இங்கே உங்கள் profile ஐ ஓபன் செய்து கொள்ளுங்கள். பிறகு




இப்பொழுது உங்கள் profile பக்கம் ஓபன் ஆகும். அதில் about Me என்னும் இடத்தில எங்காவது ஓர் இடத்தில கிளிக் செய்து நீங்கள் காப்பி செய்து உள்ள கோடினை பேஸ்ட் செய்யவும்.




கோடினை பேஸ்ட் செய்தவுடன் சேவ் பட்டனை அழுத்தவும். பிறகு பாருங்கள் உங்கள் ஆர்குட் அக்கவுன்ட்டும் நீங்க ஓபன் செய்யும்போதோ அல்லது மற்றவர்கள் உங்கள் ஆர்குட் அக்கவுண்டை ஓபன் செய்தால் அந்த பாடல் பாட துவங்கும். உங்கள் ஆர்குட்டை பார்பவர்கள் பாடல் கேட்ட சந்தோசத்துடன் செல்வார்கள்.

நன்றி http://funwithorkutscrap.blogspot.com/ க்கு...

சரி இப்போ உங்க ஆர்குட்ல பாட்டு கேட்டுகிட்டே உங்களோட கருத்துக்களை இந்த பதிவில் மறக்காமல் சொல்லிட்டு போங்க...

Thursday, October 28, 2010

டீ செய்வது எப்படி??????



முதலில் அடுப்பை பற்ற வைக்கவும்.

பிறகு அதன் மேல் ஒரு பாத்திரம் வைக்கவும்.

அதில் பாதி அளவு தண்ணீர் விட்டு, நன்கு கொதிக்க வைக்கவும். கொதித்தவுடன், தேவையான அளவு டீ தூள் போடவும்.

பின்பு நன்றாக கொதிக்க வைக்கவும்.

கொதித்தவுடன் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து கலக்கவும்.

பின்பு அதை யாருகாவது கொடுத்து சோதனை செய்யவும்.

அவர் உயிருடன் இருந்தால் , நீங்கள் டீ சாப்பிடவும், இல்லையேல் அவருக்கு பால் ஊற்றுங்கள்.

அப்படியே மறக்காம ஒரு ஓட்ட குத்திட்டு போங்க..

Wednesday, October 27, 2010

எல்லா நாளும் ஒரே மாதிரி இருக்குமா????

அடிமைக்கும், கொத்தடிமைக்கும் என்ன வித்தியாசம்?

ஒரு பெண்ணைக் காதலிக்கும் பொது நீங்க அடிமை....
அதுவே அந்த பெண்ணையே கல்யாணம் பண்ணிடீங்கன்னா நீங்க கொத்தடிமை....

**************************** ******************* ************************************

ஒரு முறை நியூட்டன் அவருக்கு 17 வயதில் வகுப்பறையில் படித்துக் கொண்டிருக்கும் போது ஒரு பாம்பு அவருடைய கால் விரலில் கடித்துவிட்டது.

அப்போதும் அவர் அதை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறார்.

ஆசிரியர் இது பற்றி கேட்கும்போது, " பாம்பு என் காலில்தான் கடித்தது, என்னுடைய Mind 'ல் அல்ல"என்கிறார்.

இதைத்தான் நாம் "வெட்டி ஸீன்" போடுவது என்கிறோம்....

**************************** ******************* ************************************

நபர் - 1: ஹோடேலில் சாப்பிட்டுவிட்டுப் பார்க்கிறேன், கையில் காசு இல்லை.....

நபர் - 2: அய்யய்யோ... அப்புறம் என்ன பண்ணுனீங்க?..

நபர் - 1: அப்புறம் பாக்கெட்'ல இருந்து எடுத்துக் கொடுத்துட்டேன்....

**************************** ******************* ************************************

மூன்று மொக்கைகள்:

a) நைட்'ல கொசு கடிச்சா குட்நைட் வைக்கலாம்.. அதுவே மார்னிங்'ல கடிச்சா குட்
மார்னிங் வைக்க முடியுமா?

b) பேப்பர் போடுறவன் பேப்பர்காரன், பால் போடுறவன் பால்காரன், அப்பா பிச்சை
போடுறவன் பிச்சைக் காரனா?

c) எல்லா stage'லயும் டான்ஸ் ஆடலாம்.. ஆனா கோமா stage 'ல டான்ஸ் ஆட முடியுமா?

**************************** ******************* ************************************

ஒன்றுமே தெரியாத ஸ்டுடென்ட் கிட்ட கொஸ்டின் பேப்பர் கொடுக்குறாங்க...

எல்லாம் தெரிஞ்ச வாத்தியார்கிட்ட ஆன்சர் பேப்பர் கொடுக்குறாங்க...
என்ன கொடும சார் இது?....

**************************** ******************* ************************************

காதல் என்பது கரண்ட் போன நேரத்துல வர கொசு மாதிரி...

தூங்கவும் முடியாது... தூரத்தவும் முடியாது....

**************************** ******************* ************************************

என்னதான் நீங்க செண்டிமெண்ட் பார்த்தாலும், கப்பல் கெளம்பறதுக்கு முன்னாடி
எலுமிச்சம் பலம் எல்லாம் வைக்க முடியாது...
சங்கு ஊதிவிட்டுதான் கெளம்பனும்...

**************************** ******************* ************************************

True GK Facts:
** அண்டார்டிக்காவில் ஒரு மரம் கூட இல்லை.
** ஹவாய் தீவில் ஒரு பாம்பு கூட இல்லை.
** பிரான்ஸ் நாட்டில் ஒரு கொசு கூட இல்லை.
** என் தெருவில் ஒரு பிகர் கூட இல்லை. என் கவலை இங்கு யாருக்கு புரிகிறது?.....

**************************** ******************* ************************************

மனைவி: ஏங்க... கொஞ்சம் வாங்க... குழந்த அழுவுது...
கணவன்: அடி செருப்பால! ... உன்னை எவண்டி மேக்-அப் இல்லாம குழந்தைப் பக்கத்துலபோக சொன்னது?

**************************** ******************* ************************************

அப்பா: ஏண்டா உஜாலா பாட்டில கீழ போட்டு தாண்டிகிட்டு இருக்குற?

மகன்: எங்க ஸ்கூல்'ல நாளைக்கு நீளம் தாண்டுற போட்டி இருக்கு. அதுக்கு தான்
பிராக்டீஸ் பண்ணி கிட்டு இருக்கேன்.

**************************** ******************* ************************************

தத்துவம் 2010
"லாரி"ல கரும்பு ஏத்துனா "காசு"!
"கரும்பு"ல லாரிய ஏத்துனா "ஜூசு"!!
இதெல்லாம் ஒரு மெசேஜ்'ன்னு படிக்குற நீங்க ஒரு "_ _ _ _ _ _ _ _ _ _ "ஆமாங்க..
அதான்... அதேதான்....

**************************** ******************* ************************************

அப்பா: நேத்து ராத்திரி பரிச்சைக்கு படித்தேன்னு சொன்ன, ஆனா உன் ரூம்'ல லைட்டே எரியல?

மகன்: படிக்குற இன்ட்ரெஸ்ட்ல அதை எல்லாம் நான் கவனிக்கலப்பா!

**************************** ******************* ************************************

தாத்தா! இனிமே கம்ப்யூட்டர் படிச்சாதான் வேலை கிடைக்கும்!

அப்ப..... நீ படிச்சா கிடைக்காதா?

**************************** ******************* ************************************

கவிஞனும் காதலியும்

கவிஞன்:அன்பே............
காதலி :ம்ம்ம்........

கவி: என்னக்குள் எதோ ஒரு மற்றம்
காத:அது ஏமாற்றத்தின் எச்சரிக்கை

கவி: நீ என் இதயத்தை என்ன செய்தாய்
காத:அது பெரிய தங்க கட்டி சேட்டு கடையில் அடகு வச்சிருக்கேன்
கவி: என்னால் இரவெல்லாம் தூங்க முடியவில்லை
கத: பகல் எல்லாம் வேலை வெட்டி இல்லாமல் நல்லா தூங்கினால் இப்படி தான்

கவி:சோறு இருக்கு சாப்பிடவில்லை,தலையணை இருக்கு உறங்க வில்லை
காத: சோப்பு இருக்கு ஆனால் குளிக்கவில்லை, இதையும் சொல்லுடா கப்பு தாங்கலை..

கவி:உன்னை பார்த்துக்கொண்டே இருக்கணும் போல இருக்கு
காத:அதான் டெய்லி நமீதா போஸ்டரை வாய பொளந்துட்டு பாக்குறியே

கவி:அன்பே உலகில் உன்னைவிட எனக்கு யாரும் முக்கியம் இல்லை
காத:எனக்கும் உன்னை விட்டால் வேற இலுச்ச வாயன் கிடைக்க மாட்டான்

கவி:வா நாம் அறத்துப்பால் பொருட்பால் மறந்து காமத்துப்பால் ரசிப்போம்
காத:செருப்பால அடிப்பேன்

கவி:அது என்ன புது பால் இந்த செருப்பால்
காத:ஆண்பாலுக்கு பென்பாலின் அன்பு பரிசு செருப்பால்!

**************************** ******************* ************************************

எல்லா நாளும் ஒரே மாதிரி இருக்குமா????


?


?





?







?






?







?
4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4
4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4
4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4
நல்லா பார்த்துக்குங்க... எல்லா "நாளும்" ஒரே மாதிரி இருக்கா?...........
Next மீட் பண்றேன்...



நகைச்சுவை பிடித்திருந்தால் தங்கள் கருத்துக்களை மறக்காமல் கூறவும்.

Monday, October 25, 2010

கூகிள் எங்கே செல்கிறது????



ஹாய் நண்பர்களே, உலகம் தற்போது எங்கயோ போய் கொண்டு இருக்கிறது. நாமும் நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ளாமல் விட்டு விடுவோம்.
நான் இங்கே எனக்கு தெரிந்த மற்றும் பார்த்ததை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.

பல சாப்ட்வேர்கள், ப்ளக் இன், பிரவுசர், அப்டேட், இன்னும் என்னனென்னவோ கம்ப்யூட்டர் பயன்பாட்டிற்கான சாதனங்களை, அவ்வப்போது கூகுள் தந்து கொண்டிருக்கிறது. புதிதாக என்ன தந்து கொண்டிருக்கிறது என்று அறிய, நாம் பல பிரிவுகளுக்குச் சென்று தேட வேண்டியதில்லை. கூகுள் தன் தளத்தில் இதற்கென Google New என்று ஒரு லிங்க் தந்துள்ளது. இதில் கிளிக் செய்தால், இங்கே உள்ள முகவரியில் உள்ள தளம் ஒன்றுக்கு எடுத்துச் செல்லப்படுகிறோம். இங்கு கூகுள் தந்துள்ள பல புதிய வசதிகளைக் காணலாம்.

இவை கூகுள் அண்மையில் தந்துள்ள கூகுள் இண்ஸ்டன்ட் என்னும் பெரிய விஷயமாகவும் இருக்கலாம். அல்லது பழைய வசதிகளுக்கான அப்டேட் ப்ளக் இன்களாகவும் இருக்கலாம். இதில் பல நமக்குத் தெரியாத வசதிகளாகவும் இருக்கலாம். வரிசையாகக் கட்டங்களில், ஒரு நாளுக்கு முன், இரண்டு நாட்களுக்கு முன் என கூகுள் தந்த புதிய வசதிகள் கட்டம் கட்டப்பட்டு தரப்பட்டுள்ளன. அனைத்து வசதிகளையும் காண ஒரு கீழ்விரி மெனு ஒன்று பட்டியலாகத் தரப்பட்டுள்ளது.

மேலும் நமக்கு ஆர்வம் உள்ள பிரிவுகளுக்கு எனவும் ஒரு கட்டம் தரப்பட்டுள்ளது. இதில் வர்த்தகம், கல்வி, பொழுது போக்கு எனப் பல பிரிவுகள் தரப்பட்டுள்ளன. இவற்றின் மூலமாகவும் நாம் தேடிப் பார்க்கலாம். இப்படியே பல பக்கங்கள்
தரப்பட்டுள்ளன.

ஆனால், இந்த தளத்தின் சிறப்பு, புதிய விஷயங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் கிடைப்பதுதான். கிட்டத்தட்ட, இது கூகுள் அக்கவுண்ட்ஸ் பக்கம் போலத்தான். இங்கு சென்றால், உங்களின் இமெயில் அக்கவுண்ட்டில் என்ன என்ன வசதிகளை ஏற்படுத்திக் கொண்டீர்களோ, அவை அனைத்தும் பட்டியலிடப்பட்டுக் கிடைக்கும்.
இருப்பினும் கூகுள் தந்துள்ள சில புதிய வசதிகள் சிலவற்றை இங்கு காண்போம். கூகுள் மிக புத்திசாலித்தனமாக ஒரு தளத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதன் முகவரி Google Image Labeler இங்கே சென்றால், கேம்ஸ் போல ஒரு செயல்பாடு கிடைக்கிறது. உங்களுக்கு ஒரு கூட்டாளியை கூகுள் கண்டறிந்து தரும்.அவருடன் இமேஜ்களுக்கு பெயர் சூட்டும் விளையாட்டினை விளையாட வேண்டும். கூகுள் தேடுதளம் கண்டறியும் இமேஜ்களுக்குப் பெயர் சூட்ட வேண்டும்.உடன் உங்கள் கூட்டாளி அதனை ஏற்க வேண்டும். ஏற்றுக் கொண்டால், உங்களுக்கு பாய்ண்ட். இப்படியே தொடர்ந்து விளையாடலாம். கூகுள் தளத்திற்கு, அதன் இமேஜ்களுக்குப் பெயர் கிடைக்கிறது. அதே நேரத்தில், இதற்கென எந்த செலவும் அதற்கு ஏற்படப் போவதில்லை. இதில் நிறையப் பேர் உற்சாகத்துடன் கலந்துகொள்கின்றனர்.

அடுத்ததாக கூகுள் பேக் மேன். பேக்மேன் என்ற பிரபலமான கேம்ஸ் (Pacman)அறிமுகப்படுத்தப்பட்டு, 30 ஆண்டுகள் ஆனதற்காக, சென்ற மே மாதம், கூகுள் தன் தளத்தில் இந்த விளையாட்டினை அளித்தது. லட்சக்கணக்கான பேர், தங்களின் வேலைக்கு இடையே இதில் விளையாடி மகிழ்ந்தனர். சிலர் தங்களின் வேலையில் கவனம் செலுத்தாமல், விளையாண்டு கொண்டே இருந்தனர். பின்னர், சில நாட்கள் கழித்து, இந்த கேம் நீக்கப்பட்டது.

ஆனால் இதற்குப் பலத்த எதிர்ப்பு கிளம்பியதால், இதனைத் தனித் தளத்தில் தந்துள்ளது கூகுள். அதன் முகவரி கிளிக்இந்த தளம் சென்றால், இந்த கேம் விளையாடி மகிழலாம். இந்த கேம் கீழாக, கூகுள் தேடுதளமும் கிடைக்கிறது.
அடுத்து கூகுள் லேப்ஸ் (GoogleLabs) என்ற தளத்தைக் கூறலாம். இங்கு கூகுள் தளத்தின் புதிய இலக்குகள், தொழில் நுட்பம், அதன் சோதனைச் சாலையிலிருந்து புதியதாக என்ன வந்துள்ளது என்று அறியலாம். இதன் தளம் click இதுவே நமக்கு கூகுள் தரும் புதிய வசதிகளுக்கான நுழைவு வாயிலாகவும் அமைகிறது.

தங்கள் கருத்துக்களை மறக்காமல் தெரிவியுங்கள்...

Sunday, October 24, 2010

எச்சரிக்கை: வேலை விளம்பரங்கள்... ஜாக்கிரதை!



மிக மிக அதிகமாக படித்தாலே வேலை கிடைக்காமல் திண்டாடும் காலம் இது. எட்டாவது படித்தவர் முதல் எம்.பி.ஏ., படித்தவர் வரை வேலை தருகிறோம் என்று ஒரு விளம்பரம் வந்தால் யார்தான் ஆசைப்படமாட்டார்கள்? அதுவும் மாதச் சம்பளம் 25 ஆயிரம் ரூபாய் வரை என்றால் ஏற்கனவே வேலையில் இருப்பவர்கள் கூட அந்த வேலையை விட்டுவிட்டு இதில் சேர்ந்துவிடலாமே? என்று நினைப்பார்கள்.

முழுநேர வேலை, பகுதி நேர வேலை, ஞாயிற்றுக்கிழமை மட்டும் வேலை என்று உங்கள் வசதிப்படி வேலை தருகிறோம் என்ற அறிவிப்பு வேறு. இல்லத்தரசிகள், கல்லூரி மாணவ, மாணவியர் எல்லாரும் அணுகலாம். வேலை இந்திய அரசின் அங்கீகாரம் பெற்ற, ஐஎஸ்ஓ 9001 சான்றிதழ் பெற்ற நிறுவனத்தில் என்றால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை. இந்த விளம்பரங்கள் எங்கே செய்யப்படுகின்றன என்று கேட்கிறீர்களா? நமது தமிழ்நாட்டில்தான்.

திருச்சி மாநகரில் ஓடும் பேருந்துகள், மின்சார ரயில்கள், மக்கள் கூடும் இடங்களில் எல்லாம் நீக்கமற நிறைந்திருக்கின்றன இந்த விளம்பரங்கள். வீட்டிலிருந்தே வேலை செய்யலாம். பெண்களும் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு கீழ்கண்ட செல்போன் எண்களில் தொடர்புக் கொள்ளவும் என குறிப்பிட்டு சில செல்போன் எண்களுடன் இப்படிப்பட்ட விளம்பரங்கள் ஒட்டப்படுகின்றன.

ஏதேதோ காரணங்களால் பிழைப்புத் தேடி திருச்சிக்கு வரும் பலருக்கும், திருச்சியிலேயே பிறந்து வளர்ந்து வேலையில்லாமல் திண்டாடும் பலருக்கும் இத்தகைய விளம்பரங்கள் கலங்கரைவிளக்கமாகவே காட்சியளிக்கின்றன. முகவரி எதுவும் இந்த விளம்பரங்களில் கொடுக்கப்படுவதில்லை.

ஆனால், தொடர்புக்கு என அதில் குறிப்பிடப்படும் செல்போன் எண்கள் மட்டும் அடிக்கடி மாறி வருகின்றன. சுமார் 20-க்கும் மேற்பட்ட செல்போன் எண்கள் இப்படி மாற்றி மாற்றி பயன்படுத்தப்பட்டு வருகின்றன. நடுத்தர மற்றும் வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளவர்கள், வேலை கிடைக்க என்ன செய்வது என்று தெரியாதவர்களைக் குறிவைத்தே இந்த விளம்பரங்கள் வந்துகொண்டிருக்கின்றன.

இத்தகைய விளம்பரங்கள் எதிலும் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் முகவரியை மறந்தும் தந்திருக்க மாட்டார்கள். என்ன வேலை? எங்கே வேலை? என்பது போன்ற விவரங்கள் எதுவும் தரப்படுவதில்லை. இதில் குறிப்பிடப்படும் செல்போன் எண்களை தொடர்பு கொண்டு பேசினால் திருச்சியில் ஓர் இடத்தைக் குறிப்பிட்டு, ""அந்த இடத்துக்கு வந்துவிடுங்கள். நாங்களே உங்களை எங்கள் இடத்துக்கு அழைத்துச் செல்கிறோம்'' என்று மர்மக் கதை திரைப்படத்தில் வருவது போலக் கூறுகிறார்கள்.

வேலை தொடர்பான விவரங்களையோ, தங்கள் நிறுவனம் எங்குள்ளது என்பது தொடர்பான விவரங்களையோ அவர்கள் தெரிவிப்பதில்லை. அப்படி நேரடியாகச் சென்ற சிலரிடம், ""உங்கள் தகுதிக்கு மாதம் 5000 ரூபாய் சம்பளத்தில்தான் வேலை இருக்கிறது. ஆனால் அதற்கு நீங்கள் 25 ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும். என்ன வேலை என்று இப்போது சொல்ல முடியாது'' என்கிறார்கள்.

டெபாசிட் தொகையைத் திருப்பித் தருவதைப் பற்றிக் கேட்டால், ""நீங்கள் டெபாசிட்டைக் கட்டிவிட்டு வேலைக்குச் சேருங்கள். டெபாசிட்டை நிச்சயம் திருப்பித் தருவோம்'' என்று மழுப்பலாகச் சொல்கிறார்கள். 5 ஆயிரம் ரூபாய் சம்பளத்திற்குத்தான் இந்த டெபாசிட்டாம். 25 ஆயிரம் சம்பளம் வேலைக்கு எவ்வளவு கேட்பார்கள் என்று தெரியவில்லை. இதோ போல வேலை தேடிச் சென்ற இளம்பெண் ஒருவரை மேலும் கீழுமாகப் பார்த்து, ""எந்த வேலை என்றாலும் ஓ.கே.வா?'' என்று ஒரு மாதிரியாகக் கேட்டிருக்கிறார்கள். அந்தப் பெண் சற்றுச் சுதாரித்து, ""நாளைக்கு வருகிறேன்'' என்று சொல்லி தப்பித்து வந்திருக்கிறார்.

அந்தப் பெண்ணைப் போலச் சுதாரிக்காமல் எத்தனை இளம்பெண்கள், இல்லத்தரசிகள் இவர்களிடம் போய் மாட்டிக் கொண்டார்களோ? இதனால், இப்படிப்பட்ட விளம்பரங்களின் மீதான சந்தேகம் வலுத்து வருகிறது. வேலை வாய்ப்பு மட்டுமல்ல, மருத்துவம், வீட்டுவசதி என பல்வேறு துறைகளிலும் இத்தகைய அடையாளம் தெரியாத நிறுவனங்களின் விளம்பரங்கள் அதிகரித்து வருகின்றன.

குறிப்பாக, குள்ளமானவர்களை உயரமாக்குகிறோம், ஒல்லியானவர்களை பருமனாக்குகிறோம். பருமனாக உள்ளவர்களை ஒல்லியாக்குகிறோம் என்றும் எந்தவிதப் பக்கவிளைவுகளும் இல்லாத இயற்கை மருத்துவம் என்றும் விளம்பரங்கள் ஒட்டப்படுகின்றன. ஆனால் அந்த இயற்கை மருத்துவ மையத்திற்கு முகவரி எதுவும் இருக்காது. செல்போன் எண்கள் மட்டும் தரப்பட்டிருக்கும்.

இதற்கு அடுத்தபடியாக, வீட்டுமனை விற்பனையிலும் இது தொடர்கிறது. உதாரணமாக, 1200 சதுர அடி நிலத்தின் விலை 96 ஆயிரம் ரூபாய் என்றும். இந்தத் தொகையைக் கொடுத்து நீங்கள் நிலம் வாங்கினால், உங்களுக்கு மாதம் ரூபாய் 1,500 வீதம் 54 மாதங்களுக்கு பணம் திருப்பி அளிக்கப்படும் என்றும் விளம்பரங்கள் வருகின்றன. அதாவது 96 ஆயிரம் ரூபாயில் 81 ஆயிரம் ரூபாயை நான்கரை வருடங்களில் திருப்பிக் கொடுத்துவிடுவார்கள். நிலத்தின் விலை வெறும் 15 ஆயிரம் ரூபாய்தான். வாங்கவே முடியாத அளவுக்கு அதிக அளவில் நிலம் விற்கும் விலையில் இது நடைமுறையில் சாத்தியமா என்பதே மிகப்பெரிய கேள்விக்குறி.

இருந்தாலும், இப்படிப்பட்ட விளம்பரங்கள் தங்களுக்கு சரியான வேலை கிடைக்கவில்லையே, தங்களால் உயரமாக வளர முடியவில்லையே, தங்களால் சொந்தமாக வீடு வாங்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் இருப்பவர்களை எளிதில் ஈர்த்துவிடுகின்றன, நம்ப வைத்துவிடுகின்றன.

இவ்வாறு நம்புபவர்கள் இந்த விளம்பரங்களில் குறிப்பிட்டுள்ள எண்களில் தொடர்புக் கொண்டு அதன் பின்னணியில் இருப்பவர்களால் மோசடி செய்யப்பட்டால், பாதிக்கப்படுபவர்களால் போலீஸ், புகார் என்று எந்த அளவுக்கு நிவாரணம் பெற முடியும் என்பது தெரியவில்லை. இத்தகைய விளம்பரங்கள் எவ்வித அனுமதியும் இல்லாமல் பஸ்கள், பஸ் நிலையங்கள், ரயில்கள், ரயில் நிலையங்களில் ஒட்டப்படுகின்றன. இப்படிப்பட்ட விளம்பரங்களை அகற்றத் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படுவதாக போக்குவரத்து மற்றும் ரயில்வே துறை அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் அகற்றப்பட்ட விளம்பரங்களின் இடத்தில் மறுநாளே ஆயிரக்கணக்கான விளம்பரங்கள் உடனே ஒட்டப்படுகின்றன. இந்த விளம்பரம் செய்பவர்களில் ஒரு சிலர் உண்மையிலேயே வேலை வாங்கித் தரலாம். ஆனால் பலர் ஏமாற்றுவதாகவே தெரிகிறது.

மக்கள் இத்தகைய மோசடிகளில் சிக்காமல் விழிப்பாக இருப்பது ஒன்றுதான் இதற்கு ஒரே தீர்வு என்று தோன்றுகிறது.

Friday, October 22, 2010

சப்ப பிகருக்கு அனுமதி இல்லை

ஹாய்,
இங்கு எனது மொபைலில் வந்த சில நகைச்சுவை யை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்...

இதயம் பலகீனமானவர்கள் பக்கத்தில் யாரையாவது வைத்து கொண்டு இதை படிக்கவும்... தவறினால் இதற்கு நிர்வாகம் பொறுப்பல்ல என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்...

சிவாஜி டயலாக்:
நம்ம நாட்டுல இன்னும் நிறைய பாய்ஸ் க்கு கேர்ள் நண்பர்கள் இல்லையாம்... அந்த வறுமையை போக்குவதற்கு பிகர் பவுண்டேசன் என்னும் ஒரு இயக்கத்தை ஆரம்பிக்கின்றோம்.
இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் அந்த ஆபீஸ் ரூமில் வெயிட் பண்ணவும்.
இப்படிக்கு
FOSS ( Figure of Social Service)
சிரிக்காதீங்க.. இது சீரியஸ் பா.

முக்கிய அறிவிப்பு. சப்ப பிகருக்கு அனுமதி இல்லை.
----------------------------------------------------
சர்தார் ஜோக்:

ஒரு புலி வன விலங்குகள் கண்காட்சியில் ஒரு சர்தார் ஐ கொன்றது.

அதற்கு ஒரு குரங்கு புலியை பார்த்து கேட்டது:
ஏன் சர்தார் ஐ கொன்றாய் என்று கேட்டது.
அதற்கு புலி சொன்னது:
மூணு மணி நேரமா என்ன பார்த்து சொல்றான்.... "எவ்ளோ பெரிய பூனை " னு......

----------------------------------------------------

பிகர்ஸ்:
உயிர் பிரியும் நேரத்தை விட பிகர் பிரியும் நேரமா கொடுமையானது.
அதனால்தான் கடவுள் ஒரு உயிரையும் பல பிகரையும் கொடுத்து இருக்கின்றார்.

----------------------------------------------------

குடிகாரன்:
மனைவி: இனிமேல் குடிச்சிட்டு வீட்டுக்கு வராதீங்க... உங்கள பாக்க சகிக்கல..
கணவன்: என்னடி பன்னுறது. குடிக்காம வந்தா உன்னை பார்க்க சகிக்கலையே...!

----------------------------------------------------

விஜய் கவுண்டமணி :
எஜமான் பட காமெடி:
ha
விஜய்: கல்யாண வீடா இருந்தா நான்தான் மாப்பிள்ளையா இருக்கணும்.

இழவு வீடா இருந்தா நான்தான் பொணமா இருக்கணும்.

கவுண்டமணி: அப்படின்னா சடங்கு வீடா இருந்தா என்னவாடா இருப்ப..
சும்மா இருடா தகர டப்பா தலையா...

----------------------------------------------------

கோடீஸ்வரன் நிகழ்ச்சி:
tell me microsoft product?
அஜித்: MS XL
சூர்யா: MS Word
விக்ரம்:MS Power Point


விஜய்:MS Dhoni....

----------------------------------------------------

பல்லி விழும் பலன்:
கணவன்: காலேண்டர்ல என்ன பார்த்துட்டு இருக்க?
மனைவி: பல்லி விழும் பலன் பார்த்துட்டு இருக்கேன்.
கணவன்: கொடு நான் பார்கிறேன். அது சரி பல்லி எங்கே விழுந்துச்சி.?
மனைவி: நீங்க சாப்பிட்ட சாம்பார்லதான்............

----------------------------------------------------


TTR: உன்னோட டிக்கெட்ட காட்டு..
Passanger: நீ ட்ரைன காட்டு.....
TTR: இதுதான் ட்ரைன் யா...
Passanger: இந்தா டிக்கெட்
TTR : டாய் இது பழைய டிக்கெட் டா
Passenger: தோடா!.. ட்ரைன் மட்டும் புதுசா.

----------------------------------------------------

டீச்சர்:

டீச்சர்: இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைக்கலேன என்ன ஆகிருக்கும். ?

ஸ்டுடென்ட்: மதராசபட்டினம் ஆர்யா மாதிரி எல்லோருக்கும் ஒரு சூப்பர் பிகர் செட் ஆகிருக்கும்..

----------------------------------------------------

No Girlfriend?
No sighting?
No Chatting?
No Enjoyment?
No Tension?
No Lover?

then please visit this site...

www.என்னமயித்துக்குவாழனும்.காம்

----------------------------------------------------

கட்டபொம்மன் இங்கிலீஷ் இல் பேசுகிறேன். கொஞ்சம் படியுங்கள்.

"Toll, tax, excess, interest. sky is pouring, earth is fertile.
why should we give tax to u?
did you come with us to the field or did you grind turmeric to our clan ladies?
are you uncle or brother in law?
Shameless fellow"....ha ha ha ha ha........

----------------------------------------------------

சர்தார்: வெள்ளை கலர் பேப்பர் ஐந்து கொடுங்க.
கடைகாரர்: ஒண்ணுதான் இருக்கு.
சர்தார்: பரவாயில்லை கொடுங்க. நான் ஜெராக்ஸ் எடுத்துக்கறேன்.
கடைக்காரன்: ??????

----------------------------------------------------

கெமிஸ்ட்ரி லாஜிக்:

டீச்சர்: "அணுவின்" அமைப்பை பற்றி கூறு?
ஸ்டுடென்ட்: 'அனுவின்' கன்னம் ஆப்பிள்!
அவள் உதடு செர்ரி!
அவள் கண் பிஷ்!
மொத்தத்தில் "அனு" ஒரு சூப்பர் பிகர் மேடம்.....

----------------------------------------------------

மனுஷன் படச்சதுல உருப்படியான ரெண்டே விஷயம்:
ஒன்னு நான், இன்னொன்று என் குடும்பம்...
இப்படிக்கு
கலைஞர்..

----------------------------------------------------

டீச்சர்: ஹோம்வொர்க் ஏன் பண்ணல..
பாய்: கரென்ட் இல்ல..
டீச்சர்: மெழுகிவர்த்தி ஏத்தி எழுதலாம்ல...
பாய்: தீப்பெட்டி சாமி ரூம்ல இருந்துச்சி..
டீச்சர்: ஏண்டா அதா எடுக்கல...
பாய்: நான் குளிக்கல.. அதான் சாமி ரூம்குள்ள போகல..
டீச்சர்: ஏன் குளிக்கல
பாய்: மோட்டார் ஒடல, தண்ணி இல்ல.
டீச்சர்: ஏன் மோட்டார் ஓடல?.
பாய்: சனியனே அதான் சொன்னேனே கரென்ட் இல்லன்னு...

----------------------------------------------------

சமீபத்திய தற்கொலை கடிதம்:
என்னை யாரும் தேட வேண்டாம்,

நான் லவ் பண்ண போகிறேன்...........

----------------------------------------------------

வேதனையோடு போன எனக்கு வெறும் தண்ணி....
ஆனால் வேடிக்கை பார்க்க வந்தவருக்கு ஸ்பெஷல் டீ..
இந்த கொடுமை எங்க நடந்தது தெரியுமா?
எக்ஸாம் ஹால்ல...!'

----------------------------------------------------

ஊர் பிள்ளையை "ஊட்டி" வளர்த்தா...

தான் பிள்ளையை "கொடைக்கானல்" வளர்க்குமா?

இப்படிக்கு உருண்டு பொரண்டு வெறித்தமா யோசிப்போர் சங்கம்..


தவறாக ஏதேனும் இருந்தால் மன்னித்து கொள்ளவும்.
தங்கள் கருத்துக்களை மறக்காமல் தெரிவியுங்கள்...

Sunday, October 17, 2010

வேண்டாத விளம்பரங்களை தடுப்பது எப்படி ?



விளம்பரங்கள், விளம்பரங்கள் – நாம் இவற்றை விரும்புகிறோமோ இல்லையோ, அவை நம் வாழ்க்கையின் ஓர் அங்கமாக மாறிவிட்டன. சாலையில் செல்லும்போதும், டிவி நிகழ்ச்சிகளைப் பார்க்கும் போதும், மொபைல் போனிலும், தொலைபேசி யிலும், இணைய உலா செல்கையிலும் இவை நம் கவனத்தைத் திருப்பி நம்மை காய்ச்சுகின்றன. பல நேரம் இவற்றை நாம் விரும்புவதில்லை. வேண்டாத விளம்பரங்கள் எதற்காக நம் முன்னே வருகின்றன என்று எரிச்சல் அடைகிறோம். இதில் இணையத்தில், சிறுவர்கள் பார்க்கக் கூடாத விளம்பரங்கள் வேறு காட்டப்படுகின்றன. இணையத்தில் இந்த விளம்பரங்கள் வருவதனைத் தடை செய்திடும் வழிகளை பிரவுசர்கள் தருகின்றன. இங்கு இன்டர்நெட் எக்ஸ்புளோரர், பயர்பாக்ஸ் மற்றும் ஆப்பராவில் இந்த தடையை எப்படி அமைப்பது என்று பார்க்கலாம். இவை தவிர இலவச தடை செய்திடும் புரோகிராம்களும் இணையத்தில் கிடைக்கின்றன. இவற்றைத் தடை செய்திடும் முன், இவை எந்த எந்த வடிவங்களில் கிடைக்கின்றன என்று பார்க்கலாம். முதலாவதாக பாப் அப் வகை.இவை புதிய ஒரு விண்டோவில், நாம் பார்க்கும் இணைய தளங்களுக்கு மேலாக தோன்றுகின்றன. எதிர்பார்க்காத நேரத்தில் வந்து, மறையாமல் அடம் பிடிக்கும் இவற்றை அனைவருமே விரும்புவதில்லை. அடுத்த வகை சிறிய படங்களாக, தளங்களில் ஊடுறுவும் கட்டங்கள். இவற்றில் பெரும்பாலானவை நாம் அலட்சியப்படுத்திவிடும் வகையிலேயே இருக்கும். அடுத்த வகை பிளாஷ் தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்தி வருபவை. இவை இணைய தளங்களில் அனிமேஷன்களாக நுழைபவை.
இவற்று டன் புதியதாக ஒரு வகை இப்போது அதிகம் வருகின்றன. நம் கர்சர்களைக் குறிப்பிட்ட சொற்கள் அருகே கொண்டு செல்கையில் இந்த விளம்பரங்கள் தோன்றுகின்றன. இவை ஜாவா ஸ்கிரிப்ட் என்னும் ஆன்லைன் தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டவை. அதிக எரிச்சலைக் கொடுப்பவை இவைதான். இந்த விளம்பரக் கட்டங்களில் வலது மேல் மூலையில், இவற்றை மூடுவதற்கான அடையாளம் தரப்பட்டிருந்தாலும், அதனைக் கிளிக் செய்தாலும் மீண்டும் மீண்டும் வருகின்றன. இணையப் பக்கத்தில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் இவை தோன்றும். குறிப்பாக நாம் படிக்க விரும்பும் டெக்ஸ்ட்டக் இவை மறைப்பதால், நமக்கு பெரும் தடையாக இவை உள்ளன. இவற்றைத் தடுக்க நாம் நம் பிரவுசர்களைத் தொடர்ந்து அப்டேட் செய்யப்பட்டவையாக வைத்துக் கொள்ள வேண்டும். இன்டர்நெட் எக்ஸ்புளோரரில், டூல்ஸ் சென்று பாப் அப் பிளாக்கர் என்ற பகுதியைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இதில் Turn on Pop up Blocker என்பது தேர்ந்தெடுக்கப்படாமல் இருந்தால், அதனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் இதில் கிடைக்கும் Filter Level மெனுவில், தடை எந்த அளவில் அமைக்க என்று ஆப்ஷன் கேட்கப்படும். இதில் மாறா நிலையில் Medium என இருக்கும். இதனை High என அமைக்கவும். இன்டர்நெட் எக்ஸ்புளோரருக்கான ஆட் ஆன் தொகுப்பு ஒன்று பாப் அப் விளம்பரங்களைத் தடை செய்வதற்காகவே கிடைக்கிறது. அதனை இன்ஸ்டால் செய்தும் பயன் படுத்தலாம். இதே போல பயர்பாக்ஸ் பிரவுசரிலும் பாப் அப் பிளாக்கர் வசதி தரப்பட்டுள்ளது. முதலில் Tools, Options, Content எனச் செல்லவும். இங்கு ஒரு டிக் பாக்ஸ் கிடைக்கும். இதில் Block Pop Up Windows என்று ஒரு வரி, முன்னதாக பாக்ஸ் கொண்டிருக்கும். இதில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பில் தரப்பட்டுள்ளது போல மீடியம், ஹை என்ற அளவு தரப்பட்டிருக்காது.
பிளாஷ் முதல் பெரும்பாலான பாப் அப் விண்டோக்களைத் தடுக்க, http://www.noscript.net/getit என்ற தளத்தில் கிடைக்கும் நோ ஸ்க்ரிப்ட் என்ற ஆட் ஆன் தொகுப்பினைப் பயன்படுத்தலாம். இது அனைத்தையும் தடுக்கும் என்பதால், நாம் விரும்பாத தடைகள் ஏற்படுத்தப்படலாம். இதனை இன்ஸ்டால் செய்த பின்னர், ஏதேனும் நீங்கள் பார்க்க விரும்பும் இணையப் பக்கம் சரியாக லோட் ஆகவில்லை என்றால், பயர்பாக்ஸ் பிரவுசரின் வலது கீழ் புறத்தில், S! என்பதில் கிளிக் செய்து பிரச்னைக்குத் தீர்வு காணவும். இதில் என்ன பிரச்னை என்றால், சாதாரண இமேஜ் கொண்ட பாப் அப் விளம்பரங்களை இது தடுப்பதில்லை. அவற்றை நாமே நீக்கிவிடலாம். இருப்பினும் அதனையும் தடுக்க வேண்டும் என விரும்பினால், ஆட் பிளாக் ப்ளஸ் (Ad Block Plus) என்ற ஆட் ஆன் தொகுப்பினை, டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்திடவும். இது www.snipurl.com/eylg2 என்ற தளத்தில் கிடைக்கிறது. இது ஏறத்தாழ 99% விளம்பரங்களைத் தடுப்பதாக, இதனை இயக்கிப் பார்த்து ஆய்வு செய்தவர்கள் கூறுகின்றனர்.
ஆப்பரா பிரவுசரில் ஓர் எளிமையான விளம்பரத் தடுப்பு வசதி தரப்பட்டுள்ளது. மிகவும் சிறப்பாக இது செயல்படுகிறது. முதலில் கூறப்பட்டுள்ள இரண்டு பிரவுசர்களிலும், உங்கள் நோக்கம் நிறைவேறவில்லை என்றால், இதற்காகவே இந்த பிரவுசரைப் பயன்படுத்தலாம்.
மேலே கூறிய வழிகளின்படி, விளம்பரங்களைப் பெரும்பாலும் தடுத்துவிடலாம். ஆனால் முழுமையாக நிறுத்த முடியுமா என்பது சந்தேகம்தான். இணையத்தில் நிறைய விஷயங்கள் இலவசமாகத் தரப்படுகின்றன. எனவே தளங்களை உருவாக்கி, தகவல்களையும் வசதிகளையும் நமக்குத் தருபவர்கள், இத்தகைய விளம்பரங்கள் மற்றும் நன்கொடைகள் மூலமே இவற்றை இயக்கி வருகின்றனர். எனவே இவற்றை ஓரளவிற்கு நாம் சகித்துக் கொள்ளத்தான் வேண்டியுள்ளது. டிவியில் காட்டப்படும் சினிமா, சீரியல் நாடகங்களில் எத்தனை விளம்பரங்கள் வந்து நம்மைச் சோதிக்கின்றன. பொறுமையாகத்தானே இருக்கிறோம். விளம்பரங்கள் வரும்போது அடுத்த சேனலுக்கு மாறினாலும், அங்கும் இந்த விளம்பரங்கள் வரத்தானே செய்கின்றன. தீங்கு இல்லாத விளம்பரங்களைக் கவனிப்போம். பல வேளைகளில் அவை நமக்கு உதவுபவையாகவும் இருக்கலாம்.


தங்கள் கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும்.

Thursday, October 14, 2010

காதலினால் நண்பர்களை இழக்க நேரிடுகின்றது!!


இன்றைய நவீன உலகத்தில் கல்லூரி மாணவ மாணவிகள், ஏன் சொல்ல போனால் பள்ளி மாணவ மாணவிகள் நிறைய பேர் காதலில் விழுகின்றனர். ஏனென்றால் இன்றைய உலகம் அவர்களை அவ்வாறு கொண்டு செல்கிறது.

ஒரு சிலருக்கு அது பற்றி தெரியாமலும் இருக்கலாம். நாம் எங்கு வெளியில் சென்றாலும் அங்கங்கே காதலர்கள் கூட்டம் அலை மோதி செல்கின்றனர். அவர்கள் ஒழுங்காக சென்றால் கூட பரவாயில்லை. அதில் ஒரு சில ஜோடிகள் காதல் என்ற பெயரில் மற்றவர் பார்க்கும் வண்ணம் மிகவும் அசிங்கமாக நடந்து கொள்கின்றனர். கேட்டால் உண்மை காதல் என்கிறார்கள். எந்த ஒரு காதலர்களும் இவ்வாறு நடந்து கொள்ள மாட்டார்கள்.

இவர்களை பார்த்து ஒன்றும் அறியாத மாணவ மாணவிகள் ஏன் நாமும் இவ்வாறு செய்ய கூடாது என்று இவர்களும் ஒரு பக்கம் ஆரம்பிக்கின்றனர். அவர்களும் செய்யும் தப்பை உணர மறுக்கிறார்கள்.

அது கூட பரவாயில்லை. இன்றைய உலகத்தில் தொலைகாட்சி பெட்டியை ஆன் செய்தால் அதுதானே வருகிறது.

நானும் ஆர்வத்தோடு ஒரு நாள் ஒரு நிகழ்ச்சியை பார்பதற்காக தொலைகாட்சியை ஆன் செய்தால் "ஒரு சின்ன தாமரை, என் கண்ணில் பூத்ததே அதன் மின்னல் வார்த்தைகள் என் நெஞ்சில் தேடி தைக்கின்றதே..." என்று தான் வந்தது. ஏன் அதை கூட விடுங்கள். இதையெல்லாம் பார்த்துவிட்டு அப்படி என்னதான் இருக்கிறது என்று ஒன்றும் அறிய பிள்ளைகள் இணையத்தில் வந்து தெரியாதனமாக ஆபாசத்தை பார்த்து தீய வழியில் சென்று விடுகின்றனர். ஆனால் அனைவரும் ஒரு விஷயத்தை தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் தொலைகாட்சி பெட்டி அல்லது இணையத்தை தான் தேடி வர வேண்டும். ஆனால் கல்வி மற்றும் அறிவு, சிறந்த தகவல்களை தர வேண்டிய இந்த இணையமும் , தொலைகாட்சியும் தீய பாதையைத்தான் காட்டுகின்றன..

ஆனால் இவற்றை வெறுப்பதா வேண்டாமா என்றே தெரியவில்லை.

காதல் என்றால் என்னங்க. அன்புதானே...........
ஏன் ஒரு அம்மா பிள்ளையிடம் காட்டுவது அன்புதானே!
ஒரு அப்பா தன் பிள்ளையிடம் காட்டுவது அன்புதானே!
அண்ணன் அல்லது அக்கா தம்பி அல்லது தங்கையிடம் காட்டுவது அன்புதானே!
இந்த அன்பிற்கு எல்லையே கிடையாது. இதுதான் உண்மையான அன்பு. இதில் எல்லாம் கிடைக்காத அன்பு வேறு யாரிடம் இருக்க போகிறது.
இதையெல்லாம் உணராத மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் காதல் என்று சொல்லி கொண்டு பெண்கள் பின்னால் சுற்றுகின்றனர். எப்போது ஒருவன் தனது வழியை விட்டு வேறொரு பதில் செல்கிறானோ அப்போதுதான் அவனுக்கு பிரச்சினைகள் ஆரம்பிகின்றன.

சரி நான் நேரடியாக விஷயத்திற்கு வருகிறேன்.

உங்கள் காதல் உறவினால் நெருங்கிய நண்பர்களை இழக்க நேரிடும். காதலி அல்லது காதலருடன் செலவிடும் நேரம் மற்றும் நெருங்கிய நண்பர்களின் எண்ணிக்கை ஆகியவற்றின் நேரத்தினை அளவிடுவதன் மூலம் நாம் நெருங்கிய நண்பர்களிடம் செலவிடும் நேரம் குறைகிறது.

காதல் வயப்படும் ஆண் அல்லது பெண் தமது நெருங்கிய நண்பர்களில் சிலரை இழக்க நேரிடும். காதல் வயப்படுவதற்கு முன்னர் அன்றாட வாழ்வில் நெருங்கிப் பழகிய நண்பர்களில் பல நண்பர்களை இழக்கிறோம்.

நெருங்கிய நண்பர்களுடன் உணர்வுபூர்வமான உறவுகள் தொடராத பட்சத்தில் அவர்களின் நட்பு படிப்படியாக குறைவடையக் கூடிய சாத்தியம் ஏற்பட நிறைய வாய்ப்புகள் உள்ளன.. நண்பர்கள் வட்டாரம் குறைவது கூட தெரியாமல் காதல் செய்து கொண்டு இருக்கின்றனர்.
காதலி அல்லது காதலன் மீது அதிகளவு கவனம் செலுத்தப்படுவதனால் ஏனைய நட்பு வட்டாரத்தில் விரிசல் ஏற்பட நிறைய வாய்ப்புகள் உள்ளன..

ஆகவே காதல் செய்பர்கள் தங்கள் நட்பு வட்டாரம் குறையாமல் எப்போதும் போல் அளவாக இருங்கள். உங்கள் நட்பு வட்டாரமும் குறையாது அதே சமயம் உங்கள் காதலி அல்லது காதலர் அல்லது உங்கள் உறவுகள் உங்களை விட்டு பிரிய மாட்டார்கள்.

தங்கள் கருத்துகளை தயங்காமல் சொல்லுங்கள்
நன்றி.
அன்புடன்
ரவி குமார்

Friday, October 8, 2010

RSS7: Read Feed Updates from Windows 7 Taskbar





For People who love to keep themselves updated with the latest news all around the world, feed readers are the best solution available for their need. Using a feed reader not only helps you in performing your work faster by eliminating the need of opening websites to view news but also confines information source as it only shows updates from the sites you have selected.

Rss7 is a freeware portable RSS feed reader for windows 7 only. The unique feature about this application is that it does not come with a separate working window that all other feed readers do. Rss7 shows up feed updates as thumbnail preview and also provides features like reading next feed, opening source website directly etc.

This application is still in development stages and hence it is not totally convenient to work with it. To add a new feed to it you have to add the website feed url to the text file named feed in the application folder.



download RSS7

Thursday, October 7, 2010

குறைந்த செலவில் போனில் அபாய மென்பொருள்: பயங்கரவாதிகள் கைக்கு போனால் பெரும் ஆபத்து.!!



வணக்கம் நண்பர்களே,
சமீபத்தில் நான் இணையத்தில் ஆராய்ந்து கொண்டு இருந்த போது ஒரு தினமலர் பத்திரிக்கையில் வந்த ஒரு செய்தியை தங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். இது ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும் மறுபக்கம் நமக்கு பயமும் இருகின்றது. இவற்றை நாம் உபயோகித்தால் நமக்கு நன்மை நிச்சயம் இருக்கும். ஆனால் நாம் உபயோகிப்பதை பொறுத்துதான் எல்லாம் இருக்கிறது..

என்னடா இவன் விஷத்தை சொல்ல மாட்டேன்கிறான் என்று நீங்கள் நினைத்து திட்டுவது எனக்கு கேட்கிறது.. அதனால் நான் நேரடியாக விஷயத்திற்கு வருகிறேன்.

லண்டன்:ஒரு விமானம் எந்த நாட்டின் மீது, என்ன வேகத்தில் பறந்து கொண்டிருக்கிறது, அதில் குறிப்பிட்ட நபர் எந்த இருக்கையில் உள்ளார் என்பது போன்ற விவரங்களைத் துல்லியமாகத் தரும் புதிய மொபைல் போன் மென்பொருள் ஒன்றை பிரிட்டன் நிறுவனம் தயாரித்து வெளியிட்டுள்ளது. இதன் மூலம் பயங்கரவாதிகள் மிக எளிதில் விமானங்களைத் தாக்கும் அபாயம் இருப்பதாக பாதுகாப்புத்துறை நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.


பிரிட்டனைச் சேர்ந்த "பிங்க்ப்ரூட்' நிறுவனம், "தி பிளேன் பைன்டர் ஏ.ஆர்., அப்ளிகேஷன்' என்ற பெயரில் "ஆப்பிள்' நிறுவனத்தின் மொபைல்போனில் பொருத்தக் கூடிய வகையிலும், "கூகுள் ஆன்ட்ராய்ட்டில்' தேடுவதற்கு ஏதுவாகவும் புதிய மென்பொருளைக் கண்டுபிடித்துள்ளது. இதன் விலை 140 ரூபாய் தான்(1.79 பவுண்டு).இதற்கிடையில் சில நாடுகளில், விமானங்களைக் கண்காணிப்பதற்கு "ரேடார்'களுக்குப் பதிலாக, "ஆட்டோமேடிக் டிபென்டென்ட் சர்வில்லியன்ஸ் -பிராட்காஸ்ட்ஸ்' (ஏ.டி. எஸ்.,-பி.,) என்ற புதிய உளவு கருவி பொருத்தப்பட்டு வருகிறது. பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாட்டு விமானக் கட்டுப்பாட்டு இயக்குனரகங்கள் இந்தக் கருவியை ஏற்றுக் கொள்ளவில்லை என்றாலும், புதிதாக வரும்
விமானங்களில் இந்தக் கருவி பொருத்தப்பட்டு வருகிறது.


அமெரிக்காவில் இரட்டைக் கோபுரங்கள் தாக்கப்பட்ட பின், இந்த ஏ.டி.எஸ்., ஐ பயங்கரவாதிகள் பயன்படுத்த வாய்ப்பிருப்பதாக, மூத்த விமானத் துறை அதிகாரி ஒருவர் எச்சரித்திருந்தார்."பிங்க்ப்ரூட்' நிறுவனத்தின் "ஆப்பிள்' மொபைலுக்காகக் கண்டுபிடிக்கப்பட்ட புதிய மென்பொருள் இந்த ஏ.டி.எஸ்.,, மூலம் தான் செயல்படுகிறது. இதன்மூலம், குறிப்பிட்ட விமானம் எந்தத் திசையில், எந்த நாட்டின் மீது, என்ன வேகத்தில், எவ்வளவு உயரத்தில் பறந்து கொண்டிருக்கிறது என்பதையும், குறிப்பிட்ட நபர் விமானத்தின் எந்தப் பகுதியில் எந்த இருக்கையில் உள்ளார் என்பதையும் இந்த மென்பொருள் பொருத்தப்பட்ட மொபைல் போனிலேயே கண்டறிந்து விடலாம்.


இந்தப் புதிய வகை மென்பொருள், விமானங்களின் பாதுகாப்புக்குப் பெரும் அச்சுறுத்தல் என்றும், பயங்கரவாதிகள் எளிதில் விமானத்தைத் தாக்க இதைப் பயன்படுத்த முடியும் என்றும் பாதுகாப்புத் துறை நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.மேலும் அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையும் விமானங்களை இந்த மென்பொருளில் இருந்து எப்படிப் பாதுகாக்க முடியும் என்று ஆராய்ந்து வருகிறது. தற்போது இந்த வகை மென்பொருளை இரண்டாயிரத்துக்கும் அதிகமான பேர் தங்கள் மொபைல்போனில் தரவிறக்கம் செய்து கொண்டிருப்பதாக "பிங்க்ப்ரூட்' நிறுவனம் தெரிவித்துள்ளது.


இதன் மூலம் விமானங்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக வந்த குற்றச்சாட்டையடுத்து, அந்த நிறுவனத்தின் இயக்குனர் லீ ஆர்ம்ஸ்ட்ராங் கூறுகையில், "இந்த மென்பொருளுக்கு பிரிட்டனோ வேறு நாடுகளோ ஆட்சேபம் தெரிவிக்கவில்லை. பயங்கரவாதிகள் இதைப் பயன்படுத்தக் கூடும் என்ற கோணத்தை நாங்களும் சிந்தித்துப் பார்த்து, விமானம் பற்றிய விவரங்கள், 30 வினாடிகள் தாமதமாக மொபைல்போனில் கிடைக்கும்படி மென்பொருளை வடிவமைத்திருக்கிறோம்' என்று தெரிவித்தார்.


இந்த மொபைல் கிடைத்தால் நாம் என்ன செய்வோம்..?
உபயோகமாக செய்தால் பரவாயில்லை. இதுவே கிடைக்க கூடதவரிடம் கிடைத்தால் என்ன ஆவது.. யோசித்து பாருங்கள்..

படைப்பு பிடித்திருந்தால் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும் ..

அன்புடன்
உங்கள் நண்பன்..............

Tuesday, October 5, 2010

" VIRTUAL BOX "என்னும் சிறப்பு இயங்கு தள நிறுவும் கருவி..

வணக்கம் நண்பர்களே...

நான் எனது லேப்டாப் மற்றும் பென் டிரைவ் இல் வைரஸ் பிரச்சினை காரணமாக என்ன செய்வது என்று தெரியாமல் புலம்பி கொண்டிருந்தேன்.. அப்போது முன்பு ஒரு நாள் எனது அண்ணன் லேப்டாப் இல் விண்டோஸ் xp இல் ஓபன் சோர்ஸ் உபுண்டு இயங்கு தளத்தை நிறுவி இருந்தார். அது விண்டோஸ் xp இன் உள்ளேயே உபுண்டு இயங்கு தளம் நிறுவி இருந்தது நினைவிற்கு வந்தது. அதாவது விண்டோஸ் இயங்கு தளத்தில் டெஸ்க்டாப் இல் ஒரு ஐகான் மூலம் நிறுவி இருந்தார். அதாவது அந்த ஐகான் ஐ கிளிக் செய்தால் விண்டோஸ் இன் உள்ளேயே தனி விண்டோவாக ஓபன் ஆகும்.. அதை பற்றிதான் தங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்பிகிறேன்.

virtual box என்னும் ஒரே ஒரு சாப்ட்வேர் இல் பல்வேறு இயங்கு தளங்களை நிறுவலாம். அதாவது இந்த சாப்ட்வேர் உள்ளே பல இயங்கு தளத்தை நிறுவி கம்ப்யூட்டர் ஐ restart செய்யாமலே வேறு ஒரு இயங்கு தளத்திற்கு செல்லலாம். தற்போது நான் இதை பயன் படுத்தித்தான் எனது லேப்டாப் ஐ வைரஸ் இடம் இருந்து காத்து வருகிறேன். இதை தங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். எப்படி இன்ஸ்டால் செய்வது என்று கீழே விளக்கி இருக்கின்றேன்.

virtual box சாப்ட்வேர் டவுன்லோட் லிங்க் கீழே தரப்பட்டுள்ளது..

இந்த virtual box என்னும் கருவியை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்தால் உங்கள் டெஸ்க்டாப் முன்பு oracle VM virtual box என்று திரையில் வரும்.

இவ்வாறு திரையில் தோன்றும்.. இதை கிளிக் செய்தால் ஒரு விண்டா ஓபன் ஆகும்.

அவை
இவ்வாறு திரையில் தோன்றும்.
இவற்றில் நீங்கள் எப்போதும் போலவே கம்ப்யூட்டர் ஐ restart செய்யாமலே இயங்கு தள cd யை இணைத்து இந்த விண்டா இல் இருக்கும் நியூ என்ற பட்டனை கிளிக் செய்து எந்த இயங்குதளம் என்று செலக்ட் செய்து எப்போதும் போலவே இன்ஸ்டால் செய்யுங்கள்..


இதன் மூலம் நீங்கள் எத்தனை இயங்குதளம் வேண்டுமானாலும் இன்ஸ்டால் செய்து செய்யலாம். இயங்குதளம் இன்ஸ்டால் செய்து முடித்ததும் அதற்குரிய விண்டோ வினை அணைத்து விட்டு திரையில் இருக்கும் oracle VM virtual box இருக்கும் ஐகான் ஐ கிளிக் செய்தால் கீழ்வருமாறு விண்டோ இருக்கும்.. நான் தற்போது உபுண்டு இயங்கு தளம் நிறுவி உள்ளதால் இவ்வாறு வரும். நீங்கள் பல்வேறு இயங்குதல் நிறுவி இருந்தால் மற்ற இயங்குதளம் பெயரும் அதில் தெரியும்..


இங்குள்ள விண்டோ இல் நீங்கள் விரும்பும் இயங்குதளத்தின் வசதியை செலக்ட் செய்து விட்டு ஸ்டார்ட் என்னும் பட்டனை அழுத்தவும்.. இவை அனைத்தும் உங்கள் விண்டோஸ் இயங்கு தளத்தின் உள்ளே நடக்கும். அதாவது சாதரணமாக நீங்கள் ஒரு சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்து ஓபன் செய்து ஓபன் செய்து இயக்கி விட்டு பிறகு எப்போதும் போல குளோஸ் பட்டனை அழுத்தி வேலையை செய்கிறீர்களோ அதே போல்தான் நீங்கள் நிறுவி இருக்கும் அனைத்து இயங்குதளமும் இயங்கும். மன்னிக்கவும் இவை இவற்றிக்கான படங்களை என்னால் செலக்ட் செய்ய முடிய வில்லை.

நீங்கள் உங்கள் கணினியை அணைத்து பின்பு ஆன் செய்து வேறு ஒரு இயங்குதளத்திற்கு மாறுவதற்கு பதிலாக இந்த வழி மிக மிக அருமையாக இருக்கும்.. நீங்கள் உங்களுடைய இயங்குதளத்தில் இருந்தே மேலே காணும் விண்டோ வில் நீங்கள் விரும்பும் இயங்குதளம் இயங்க ஆரம்பிக்கும். நீங்கள் விரும்பும்போது அடுத்த நொடியே விண்டோஸ் இயங்கு தளத்திருக்கு வர முடியும். அது எவ்வாறு என்றால் நீங்கள் உங்கள் கணினியின் right ctrl key பட்டனை அடுத்த நொடியே உங்கள் இயங்குதளத்திற்கு வர முடியும். இவ்வாறு எப்போது வேண்டுமானாலும் நீங்கள் விரும்பும் இயங்குதளத்திற்கு நொடி பொழுதில் வரலாம். இது உங்களுக்கு உபயோகமாக இருக்கும் என நம்புகிறேன்.

டவுன்லோட் லிங்க் x86/amd64 தரவிறக்கி கொள்ளுங்கள்.

பதிவு பிடித்திருந்தால் மறக்காமல் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்.. அப்படியே ஓட்டு போட்டுட்டு போங்க....
நன்றி

அன்புடன்
உங்கள் நண்பன்
ரவி குமார்





Friday, October 1, 2010

மனம் விட்டுப் பேசலாமா?

நீங்கள் உங்களுக்குப் பழக்கமானவரிடத்தில் எல்லா விஷயங்களையும் மனம்விட்டுப் பேசுகிறீர்கள்.

நடந்த உண்மைகளை அப்படியே யதார்த்தமாகச் சொல்கிறீர்கள்!

எல்லா விஷயங்களையும் மற்றவர்களிடத்தில் சொல்லலாமா?

இப்படி மனம் விட்டுச் சொல்வதால் உங்களுக்கு ஆறுதல் கிடைக்குமா?

கடுகளவு ஆறுதல்கூடக் கிடைக்காது.

எனவே ஒருபோதும் எவரிடமும் மனம் திறந்து பேசாதீர்கள்.

சில விஷயங்களைப் பிறரிடம் சொல்லவே கூடாது.

பணம் கொடுக்கல் வாங்கல், வீட்டுப் பிரச்னை, தாம்பத்ய அனுபவம், செய்த தானம், அடைந்த புகழ், ஏற்பட்ட அவமானங்கள் ஆகியவற்றைப் பிறரிடம் சொல்லவே கூடாது.

இதை மற்றவர்களிடத்தில் சொன்னால், நீங்கள் பலவீனர்களாகி விடுவீர்கள்.

உங்களுடைய பலவீனம் மற்றவர்களுக்குத் தெரிந்தால் உங்கள் பலத்தை நீங்கள் இழப்பதுடன் அவர்களுடைய அடக்குமுறைக்கும் ஆளாகிவிடுவீர்கள்.

உங்களுக்குக் கிடைக்கும் வருமானம், புகழ் ஆகியவற்றைக் கேட்டு மற்றவர்கள் பொறாமை கொள்வார்கள்.

"அடேங்கப்பா!... இவருக்கு மாதந்தோறும் இவ்வளவு வருமானமா? மக்கள் மத்தியில் இவ்வளவு செல்வாக்கா?'' என்று ஆதங்கப் பெருமூச்சு விட்டுக்கொண்டே இருப்பார்கள்.

அவர்களின பார்வை உங்கள் வாழ்வில் பின்னடைவை ஏற்படுத்திவிடும்.

கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாதல்லவா?

உங்கள் கருத்துகளைப் பிறரிடம் கூறவே கூடாது.

இதனால் உங்கள் பிரச்னைகளின் தீவிரம் கொஞ்சம்கூடக் குறையாது.

எனவே ஒருபோதும் மற்றவர்களிடம் கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்ளாதீர்கள்.

உங்கள் உயிர் நண்பராக இருந்தாலும் சரி, அவரிடத்திலும் கருத்துகளைப் பரிமாறிக் கொள்ளாதீர்கள்.

அவர் உங்கள் உயிரை வாங்கும் எமனாக மாறிவிடுவார்.

இடுக்கண் களையும் நட்பை இன்று தேடிப்பிடிக்க வேண்டியுள்ளது.

கணவன் மனைவியிடமும், மனைவி கணவனிடமும் கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்ளலாம்.

இதில் பிழையொன்றும் இல்லை.

திருமணத்துக்கு முன்பு தாயிடமும் தந்தையிடமும் கருத்துகளைப் பரிமாறிக் கொள்ளுங்கள்.

நீங்கள் உங்கள் வாழ்வில் பட்ட அவமானங்கள், துன்பங்கள், உங்களுக்கு ஏற்பட்ட சோதனைகள், உங்களுக்கு உண்டான கேவலங்கள் எதுவாக இருந்தாலும் எல்லாவற்றையும் ஆண்டவனிடம் மனம் திறந்து சொல்லுங்கள்.

உங்களுக்கு மன நிம்மதி உறுதியாகக் கிடைக்கும்.

மன அமைதி என்பது உங்களுக்கு இல்லாமல் போய்விட்டதா?

நல்ல நூல்களைப் படியுங்கள்.

நம்பிக்கை தரும் நூல்களைப் படியுங்கள்.

ஆன்மிகச் சொற்பொழிவுகளைக் கேளுங்கள்.

சான்றோர்களுடைய நல்லுரைகளைக் கேளுங்கள்.

இவைகளால் உங்களுடைய மனம் விவரிக்க முடியாத ஆனந்தத்தை அடையும்.

நீங்கள் வறுமையில் வாடியபோது உங்களுக்கு உதவி செய்ய எவரும் வந்திருக்கமாட்டார்.

ஆனால் நீங்கள் செல்வச் செழிப்புடன் வாழும்போது உங்களை நாடி ஆயிரம் பேர் வருவார்கள்.

உயர்ந்த நட்புடையவர்கள் எப்போதும் மலர்ந்தபடியே உள்ள குவளை மலர்போல இருப்பார்கள்.

ஆனால் கெட்டவர்கள் பகலில் குவிந்து இரவில் மலரும் ஆம்பல் மலர் போல அடிக்கடி மாறுவார்கள்.

ஆதாயம் இருந்தால் மட்டுமே அண்டி வருவார்கள்.

அன்புடையவர்கள் உயர்ந்த நட்புடையவர்களாகவே இருப்பார்கள்.

அவர்கள் எப்போதும் ஒரே தன்மையுடன் பழகும் பண்புடையவர்களாகத் திகழ்வார்கள்.

நற்குடியில் பிறந்தவர்கள் கடமை தவறாமல் காரியங்களைச் செய்வார்கள்.

சமூகத்தில் பெரிதும் புகழப்படுவார்கள்.

கௌரவிக்கப்படுவார்கள்.

எனவே, உயர்ந்த நட்புடையவர், அன்புடையவர், நற்குடியில் பிறந்தவர், நட்புக்காகத் தன்னையே தியாகம் செய்யத் துணிபவர், ஒருவர் பொறை இருவர் நட்பு என்பதைத் தெளிவாக உணர்ந்தவர், சிறந்த குணநலம் உடையவர் ஆகியோர் யார் என்பதைத் தெளிவாக உணர்ந்தவர், சிறந்த குணநலம் உடையவர் ஆகியோர் யார் என்பதை ஆராய்ந்து பார்த்து, அவரிடம் நட்புக்கொண்டு, அவரிடம் மனம் விட்டுப் பேசுங்கள்!

இதை விட்டுவிட்டு எல்லோரிடத்திலும் யதார்த்த உணர்வோடு மனம் விட்டுப் பேசாதீர்கள்!