Thursday, October 14, 2010

காதலினால் நண்பர்களை இழக்க நேரிடுகின்றது!!


இன்றைய நவீன உலகத்தில் கல்லூரி மாணவ மாணவிகள், ஏன் சொல்ல போனால் பள்ளி மாணவ மாணவிகள் நிறைய பேர் காதலில் விழுகின்றனர். ஏனென்றால் இன்றைய உலகம் அவர்களை அவ்வாறு கொண்டு செல்கிறது.

ஒரு சிலருக்கு அது பற்றி தெரியாமலும் இருக்கலாம். நாம் எங்கு வெளியில் சென்றாலும் அங்கங்கே காதலர்கள் கூட்டம் அலை மோதி செல்கின்றனர். அவர்கள் ஒழுங்காக சென்றால் கூட பரவாயில்லை. அதில் ஒரு சில ஜோடிகள் காதல் என்ற பெயரில் மற்றவர் பார்க்கும் வண்ணம் மிகவும் அசிங்கமாக நடந்து கொள்கின்றனர். கேட்டால் உண்மை காதல் என்கிறார்கள். எந்த ஒரு காதலர்களும் இவ்வாறு நடந்து கொள்ள மாட்டார்கள்.

இவர்களை பார்த்து ஒன்றும் அறியாத மாணவ மாணவிகள் ஏன் நாமும் இவ்வாறு செய்ய கூடாது என்று இவர்களும் ஒரு பக்கம் ஆரம்பிக்கின்றனர். அவர்களும் செய்யும் தப்பை உணர மறுக்கிறார்கள்.

அது கூட பரவாயில்லை. இன்றைய உலகத்தில் தொலைகாட்சி பெட்டியை ஆன் செய்தால் அதுதானே வருகிறது.

நானும் ஆர்வத்தோடு ஒரு நாள் ஒரு நிகழ்ச்சியை பார்பதற்காக தொலைகாட்சியை ஆன் செய்தால் "ஒரு சின்ன தாமரை, என் கண்ணில் பூத்ததே அதன் மின்னல் வார்த்தைகள் என் நெஞ்சில் தேடி தைக்கின்றதே..." என்று தான் வந்தது. ஏன் அதை கூட விடுங்கள். இதையெல்லாம் பார்த்துவிட்டு அப்படி என்னதான் இருக்கிறது என்று ஒன்றும் அறிய பிள்ளைகள் இணையத்தில் வந்து தெரியாதனமாக ஆபாசத்தை பார்த்து தீய வழியில் சென்று விடுகின்றனர். ஆனால் அனைவரும் ஒரு விஷயத்தை தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் தொலைகாட்சி பெட்டி அல்லது இணையத்தை தான் தேடி வர வேண்டும். ஆனால் கல்வி மற்றும் அறிவு, சிறந்த தகவல்களை தர வேண்டிய இந்த இணையமும் , தொலைகாட்சியும் தீய பாதையைத்தான் காட்டுகின்றன..

ஆனால் இவற்றை வெறுப்பதா வேண்டாமா என்றே தெரியவில்லை.

காதல் என்றால் என்னங்க. அன்புதானே...........
ஏன் ஒரு அம்மா பிள்ளையிடம் காட்டுவது அன்புதானே!
ஒரு அப்பா தன் பிள்ளையிடம் காட்டுவது அன்புதானே!
அண்ணன் அல்லது அக்கா தம்பி அல்லது தங்கையிடம் காட்டுவது அன்புதானே!
இந்த அன்பிற்கு எல்லையே கிடையாது. இதுதான் உண்மையான அன்பு. இதில் எல்லாம் கிடைக்காத அன்பு வேறு யாரிடம் இருக்க போகிறது.
இதையெல்லாம் உணராத மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் காதல் என்று சொல்லி கொண்டு பெண்கள் பின்னால் சுற்றுகின்றனர். எப்போது ஒருவன் தனது வழியை விட்டு வேறொரு பதில் செல்கிறானோ அப்போதுதான் அவனுக்கு பிரச்சினைகள் ஆரம்பிகின்றன.

சரி நான் நேரடியாக விஷயத்திற்கு வருகிறேன்.

உங்கள் காதல் உறவினால் நெருங்கிய நண்பர்களை இழக்க நேரிடும். காதலி அல்லது காதலருடன் செலவிடும் நேரம் மற்றும் நெருங்கிய நண்பர்களின் எண்ணிக்கை ஆகியவற்றின் நேரத்தினை அளவிடுவதன் மூலம் நாம் நெருங்கிய நண்பர்களிடம் செலவிடும் நேரம் குறைகிறது.

காதல் வயப்படும் ஆண் அல்லது பெண் தமது நெருங்கிய நண்பர்களில் சிலரை இழக்க நேரிடும். காதல் வயப்படுவதற்கு முன்னர் அன்றாட வாழ்வில் நெருங்கிப் பழகிய நண்பர்களில் பல நண்பர்களை இழக்கிறோம்.

நெருங்கிய நண்பர்களுடன் உணர்வுபூர்வமான உறவுகள் தொடராத பட்சத்தில் அவர்களின் நட்பு படிப்படியாக குறைவடையக் கூடிய சாத்தியம் ஏற்பட நிறைய வாய்ப்புகள் உள்ளன.. நண்பர்கள் வட்டாரம் குறைவது கூட தெரியாமல் காதல் செய்து கொண்டு இருக்கின்றனர்.
காதலி அல்லது காதலன் மீது அதிகளவு கவனம் செலுத்தப்படுவதனால் ஏனைய நட்பு வட்டாரத்தில் விரிசல் ஏற்பட நிறைய வாய்ப்புகள் உள்ளன..

ஆகவே காதல் செய்பர்கள் தங்கள் நட்பு வட்டாரம் குறையாமல் எப்போதும் போல் அளவாக இருங்கள். உங்கள் நட்பு வட்டாரமும் குறையாது அதே சமயம் உங்கள் காதலி அல்லது காதலர் அல்லது உங்கள் உறவுகள் உங்களை விட்டு பிரிய மாட்டார்கள்.

தங்கள் கருத்துகளை தயங்காமல் சொல்லுங்கள்
நன்றி.
அன்புடன்
ரவி குமார்

No comments:

Post a Comment