Thursday, October 7, 2010

குறைந்த செலவில் போனில் அபாய மென்பொருள்: பயங்கரவாதிகள் கைக்கு போனால் பெரும் ஆபத்து.!!



வணக்கம் நண்பர்களே,
சமீபத்தில் நான் இணையத்தில் ஆராய்ந்து கொண்டு இருந்த போது ஒரு தினமலர் பத்திரிக்கையில் வந்த ஒரு செய்தியை தங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். இது ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும் மறுபக்கம் நமக்கு பயமும் இருகின்றது. இவற்றை நாம் உபயோகித்தால் நமக்கு நன்மை நிச்சயம் இருக்கும். ஆனால் நாம் உபயோகிப்பதை பொறுத்துதான் எல்லாம் இருக்கிறது..

என்னடா இவன் விஷத்தை சொல்ல மாட்டேன்கிறான் என்று நீங்கள் நினைத்து திட்டுவது எனக்கு கேட்கிறது.. அதனால் நான் நேரடியாக விஷயத்திற்கு வருகிறேன்.

லண்டன்:ஒரு விமானம் எந்த நாட்டின் மீது, என்ன வேகத்தில் பறந்து கொண்டிருக்கிறது, அதில் குறிப்பிட்ட நபர் எந்த இருக்கையில் உள்ளார் என்பது போன்ற விவரங்களைத் துல்லியமாகத் தரும் புதிய மொபைல் போன் மென்பொருள் ஒன்றை பிரிட்டன் நிறுவனம் தயாரித்து வெளியிட்டுள்ளது. இதன் மூலம் பயங்கரவாதிகள் மிக எளிதில் விமானங்களைத் தாக்கும் அபாயம் இருப்பதாக பாதுகாப்புத்துறை நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.


பிரிட்டனைச் சேர்ந்த "பிங்க்ப்ரூட்' நிறுவனம், "தி பிளேன் பைன்டர் ஏ.ஆர்., அப்ளிகேஷன்' என்ற பெயரில் "ஆப்பிள்' நிறுவனத்தின் மொபைல்போனில் பொருத்தக் கூடிய வகையிலும், "கூகுள் ஆன்ட்ராய்ட்டில்' தேடுவதற்கு ஏதுவாகவும் புதிய மென்பொருளைக் கண்டுபிடித்துள்ளது. இதன் விலை 140 ரூபாய் தான்(1.79 பவுண்டு).இதற்கிடையில் சில நாடுகளில், விமானங்களைக் கண்காணிப்பதற்கு "ரேடார்'களுக்குப் பதிலாக, "ஆட்டோமேடிக் டிபென்டென்ட் சர்வில்லியன்ஸ் -பிராட்காஸ்ட்ஸ்' (ஏ.டி. எஸ்.,-பி.,) என்ற புதிய உளவு கருவி பொருத்தப்பட்டு வருகிறது. பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாட்டு விமானக் கட்டுப்பாட்டு இயக்குனரகங்கள் இந்தக் கருவியை ஏற்றுக் கொள்ளவில்லை என்றாலும், புதிதாக வரும்
விமானங்களில் இந்தக் கருவி பொருத்தப்பட்டு வருகிறது.


அமெரிக்காவில் இரட்டைக் கோபுரங்கள் தாக்கப்பட்ட பின், இந்த ஏ.டி.எஸ்., ஐ பயங்கரவாதிகள் பயன்படுத்த வாய்ப்பிருப்பதாக, மூத்த விமானத் துறை அதிகாரி ஒருவர் எச்சரித்திருந்தார்."பிங்க்ப்ரூட்' நிறுவனத்தின் "ஆப்பிள்' மொபைலுக்காகக் கண்டுபிடிக்கப்பட்ட புதிய மென்பொருள் இந்த ஏ.டி.எஸ்.,, மூலம் தான் செயல்படுகிறது. இதன்மூலம், குறிப்பிட்ட விமானம் எந்தத் திசையில், எந்த நாட்டின் மீது, என்ன வேகத்தில், எவ்வளவு உயரத்தில் பறந்து கொண்டிருக்கிறது என்பதையும், குறிப்பிட்ட நபர் விமானத்தின் எந்தப் பகுதியில் எந்த இருக்கையில் உள்ளார் என்பதையும் இந்த மென்பொருள் பொருத்தப்பட்ட மொபைல் போனிலேயே கண்டறிந்து விடலாம்.


இந்தப் புதிய வகை மென்பொருள், விமானங்களின் பாதுகாப்புக்குப் பெரும் அச்சுறுத்தல் என்றும், பயங்கரவாதிகள் எளிதில் விமானத்தைத் தாக்க இதைப் பயன்படுத்த முடியும் என்றும் பாதுகாப்புத் துறை நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.மேலும் அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையும் விமானங்களை இந்த மென்பொருளில் இருந்து எப்படிப் பாதுகாக்க முடியும் என்று ஆராய்ந்து வருகிறது. தற்போது இந்த வகை மென்பொருளை இரண்டாயிரத்துக்கும் அதிகமான பேர் தங்கள் மொபைல்போனில் தரவிறக்கம் செய்து கொண்டிருப்பதாக "பிங்க்ப்ரூட்' நிறுவனம் தெரிவித்துள்ளது.


இதன் மூலம் விமானங்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக வந்த குற்றச்சாட்டையடுத்து, அந்த நிறுவனத்தின் இயக்குனர் லீ ஆர்ம்ஸ்ட்ராங் கூறுகையில், "இந்த மென்பொருளுக்கு பிரிட்டனோ வேறு நாடுகளோ ஆட்சேபம் தெரிவிக்கவில்லை. பயங்கரவாதிகள் இதைப் பயன்படுத்தக் கூடும் என்ற கோணத்தை நாங்களும் சிந்தித்துப் பார்த்து, விமானம் பற்றிய விவரங்கள், 30 வினாடிகள் தாமதமாக மொபைல்போனில் கிடைக்கும்படி மென்பொருளை வடிவமைத்திருக்கிறோம்' என்று தெரிவித்தார்.


இந்த மொபைல் கிடைத்தால் நாம் என்ன செய்வோம்..?
உபயோகமாக செய்தால் பரவாயில்லை. இதுவே கிடைக்க கூடதவரிடம் கிடைத்தால் என்ன ஆவது.. யோசித்து பாருங்கள்..

படைப்பு பிடித்திருந்தால் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும் ..

அன்புடன்
உங்கள் நண்பன்..............

1 comment: