
உலக ஒப்பனைக்கு
ஒலமிடுபவர்களே……
கனக்கும் நெஞ்த்தோடும்
கலங்கும் விழிகளோடும்
கண்களை மூடி
கண்ணீரை காணிக்கையாக்குகிறேன்
கண்ணீரும் செங்குருதியும்
சகதியாகிப்போன
என் மண்ணில்
காற்றோடு கலந்துவிட்ட
என் உறவுகளுக்காக மீண்டும்
கண்களை மூடி
கண்ணீரை காணிக்கையாக்குகிறேன்
உலகமே சேர்ந்தது
என் இனத்தை
குழிதோண்டி புதைத்தது
இறந்தவரை நினைத்து
கதறுகிறேன் - மிகுதியாய்
இருப்பவரை நினைத்து
கலங்குகிறேன்
கொடிய இன வெறியனுக்கு
கை கோர்த்து நின்றது
கொடுங்கோல் ஆட்சிக்காக - இதனை நினைத்து
கண்களை மூடி
கண்ணீரை காணிக்கையாக்குகிறேன்
தமிழ் தாயின்சேலை தொட்டுழுக்க
தன்மானமிக்க தமிழன் தலைகுனிய
தறிகெட்டு ஓடியது சர்வதேசம்
இரவிரவாய் ஒலமிட்டு காலமது
எத்தனை கொடுமை அது
வன்னி மக்கள் உணர்வை
வார்த்தையால் வரைய முடியுமா?
என்னால் எழுத பலமில்லை
இன்னமும் என் விழியினுள் உறுதியாய்
பதிந்திட்ட நிஜங்கள் - இதனை நினைத்து
கண்களை மூடி
கண்ணீரை காணிக்கையாக்குகிறேன்
மாவிலாறு தெட்டு முள்ளிவாய்க்கால் வரை
உலகமே கண்டு மௌனித்தது
உண்மையை உறங்க வைத்தது
கை கூப்பி நின்று கதறினர் ஜ.நா நேக்கி
இரக்கமும் பரிவும் காட்ட
அருகதையற்றவரா?
நச்சு வாயு அடித்து கொன்று
நாசமாக்கிய என் உறவுகளை – நினைத்து
கண்களை மூடி
கண்ணீரை காணிக்கையாக்குகிறேன்
-----------------
உங்கள் நண்பன்
தோசை
No comments:
Post a Comment