இந்த புரோகிராமினை ஏ.ஓ.எல். இமெயில் கிளையண்ட் புரோகிராமினை வடிவமைத்த Bill Pytlovany என்பவர் உருவாக்கியுள்ளார். இந்த புரோகிராம் கம்ப்யூட்டரில் பதிந்தவுடன் நம் கம்ப்யூட்டரின் ரெஜிஸ்ட்ரியை ஒரு ஸ்நாப் ஷாட் எடுத்து வைத்துக் கொள்கிறது. பின் அதில் ஏதேனும் கோட் வரிகள் எழுதப்படும்போதெல்லாம் இது போல எழுதப்பட இருக்கிறது. இந்த புரோகிராம் முயற்சி செய்கிறது என்று எச்சரிக்கை செய்வதுடன் நீங்கள் அனுமதி கொடுத்த பிறகே ரெஜிஸ்ட்ரியில் எழுதவிடும்.

இதன்மூலம் நாம் விரும்பும் புரோகிராமினை இன்ஸ்டால் செய்திடுகையில் மட்டுமே நாம் இதற்கு அனுமதிக்கலாம். திருட்டுத்தனமாக நுழைந்திடும் புரோகிராம்கள் எழுத முயற்சிக்கையில் அவற்றின் பெயரைப் பார்த்துவிட்டுத் தடுத்துவிடலாம். இந்த வகையில் விண் பெட்ரோல் ஒரு செக்யூரிட்டி மானிட்டராகச் செயல்படுகிறது.
வழக்கமான ஆண்டி வைரஸ் தொகுப்புகள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட வைரஸ் பைல்களின் செயல்பாட்டினை வைத்து அவற்றை அடையாளம் கண்டு தடுக்க முயற்சி செய்திடும். ஆனால் இந்த புரோகிராம் வைரஸ் புரோகிராம்களுக்கென உள்ள சில மாறுபட்ட செயல்தன்மைகள் அனைத்தையும் கவனத்தில் கொண்டு செயல்படுகிறது.
இதனை இலவசமாக டவுண்லோட் செய்திட இந்த தளத்திற்குச் செல்லவும்.
No comments:
Post a Comment