தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில் காலம் தாழ்ந்த தீர்ப்பாக இருக்கிறது என்று பாதிக்கப்பட்ட மாணவி கோகிலவாணியின் தந்தை வீராசாமி கூறியுள்ளார்.
தர்மபுரி பேருந்து எரிப்பு சம்பவத்தில் முக்கிய குற்றவாளிகள் 3 பேருக்கும் அளிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உச்ச நீதிமன்றம் இன்று உறுதி செய்துள்ளது
இந்நிலையில் தீர்ப்பு குறித்து பாதிக்கப்பட்ட பெண் கோகிலவாணியின் தந்தை வீராச்சாமியிடம் செய்தியாளர்கள் பேட்டி கண்டனர்.
அப்போது, தீர்ப்பு எதிர்பார்க்கப்பட்டது தான் என்று கூறிய வீராசாமி, ஆனால் நிகழ்வு நடந்தது 2000ஆம் ஆண்டு, தீர்ப்பு 2010ஆம் ஆண்டு வழங்கப்பட்டுள்ளது என்றார்.
காலம் தாழ்ந்த தீர்ப்பாக இருக்கிறது என்றும் பட்டப்பகலில் பலர் முன்னிலையில் கண்கூடாக நடந்த நிகழ்வுக்கு இவ்வளவு காலம் கழித்து தீர்ப்பு வழங்கியிருக்கின்றனர் என்றும் வீராச்சாமி வேதனை தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட மற்றொரு மாணவி காத்ரியின் தந்தை வெங்கடேஷ், தீர்ப்புக்காக பாடுபட்ட அரசாங்கத்துக்கும், மாணவ மாணவிகளுக்கும், வழக்கறிஞர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
மேலும் சேலம் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு உச்ச நீதிமன்றம் வரை நீடிக்க வேண்டும் என்று வேண்டினேன், அதேபோல் நடந்துள்ளது என்றார் வெங்கடேஷ்.
No comments:
Post a Comment