Tuesday, November 30, 2010

யானை பசிக்கு சோளப்பொறி




நல்ல மரங்கள் அடர்ந்திருக்கிற ஒரு அமைதியான இரயில் நிலையம். ஒருத்தர் ரயிலை பிடிக்கிறதுக்காக வேகமா ஓடி வந்தும் ரயிலை மிஸ் பண்ணிடுறார். மூச்சிரைக்க அந்த இரயில்வே நிலையத்தின் ப்ளாட்பாரத்துல இருக்குற பெஞ்சுல உட்கார்ந்திருக்கார்.

பையில இருந்து ஒரு புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பிக்கிறார். அந்த புத்தகத்திலேயே மூழ்கி போயிருக்கும் போது ஒரு விசும்பல் சத்தம் கேட்குது.

யார்ரா அதுன்னு திரும்பி பார்க்கிறார். அவருக்கு பக்கத்துல ஒரு யானை உட்கார்ந்திருக்குது. விசும்பல் சத்தம் அந்த யானைகிட்டிருந்து தான் வருது. அதோட கண்களை பார்க்கிறார். அதில் ஒரு சோகம் இருப்பதை உணர்கிறார். கர்சிப் கொடுத்து கண்ணை துடைக்க சொல்லுறார். அதுவும் துடைக்குது. ஆனா திரும்பவும் அழுகுது.

சரி பசியில அழுகுது போலன்னு நினைச்சுட்டு கேண்டீன்ல போய் ஒரு பாக்கெட் பாப்கார்ன் வாங்கிட்டு வரார். அதை அது கையில கொடுக்குறார். அது வாங்கிட்டு அந்த பாப்கார்னை பார்க்குது அவரை பார்க்குது..... அந்த பாப்கார்னை பார்க்குது அவரை பார்க்குது..... அந்த பாப்கார்னை பார்க்குது அவரை பார்க்குது.....

படம் அதோட முடியுது....