Wednesday, November 3, 2010

நாங்களும் செய்வோம்ல...!!!!

எங்கள் வீட்டில் நேற்று இரவு தீபாவளிக்காக பலகாரங்கள் செய்தனர். அதில் முறுக்கு, அதிரசம், சமோசா, குலாப் ஜாமூன் ஆகியவை செய்தோம். அதில் குலாப் ஜாமூன் மட்டும் நாங்க இந்த வருடம் புதிதாக செய்தோம். ஏனென்றால் போன வருடம் எனது பாட்டி தான் செய்து கொடுத்தார். நாங்கள் குலாப் ஜாமூன் எங்கே நன்றாக இல்லாமல் போய் விடுமோ என்று பயந்து கொண்டே செய்தோம். கடைசியில் பார்த்தால் நன்றாகவே வந்தது. எங்களுக்கும் மிகவும் சந்தோஷம். ஏனென்றால் இது நாங்கள் செய்தது அல்லவா. அதற்காக.

அதை நாங்க செய்த விதத்தை தங்களிடம் பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவை நான் எழுதுகிறேன்.

உங்களுக்கும் பிடித்திருந்தால் நீங்களும் செய்து பாருங்களேன்....

கடைகளில் குலாப் ஜாமூன் பக்கெட் என்றே தனியாக விற்கின்றனர். அதை வாங்கிகொள்ளுங்கள். அவை நல்ல கம்பனியாக இருந்தால் கொஞ்சம் நன்றாக இருக்கும். அந்த பக்கெட்டினை பிரித்து ஒரு பாத்திரத்தில் கொட்டி வைத்து பின்னர் சிறிது தண்ணீர் ஊற்றி கட்டியில்லாத மாவாக பிசைந்து வைத்துக்கொள்ளவும். அதை ஒரு ஐந்து முதல் பத்து நிமிடம் வரை அதை ஊற வைத்தோம். நீங்களும் அதை ஊற வையுங்கள். பின்னர் அதை சிறு சிறு உருண்டையாக அதை உருட்டி வைத்து கொள்ளவும். எங்களிடம் மொத்தம் முப்பத்தைந்து உருண்டைகள் வந்தன.. நீங்களும் உருட்டி பாருங்கள். நீங்கள் உருட்டும் அளவை பொறுத்தே உருண்டைகளின் எண்ணிக்கை வரும்.




இந்த உருண்டைகள் அனைத்தையும் அடுப்பில் போட ரெடி ஆக இருக்கவும். மன்னிக்கவும் அடுப்பில் அல்ல எண்ணெயில் போட வேண்டும். மறந்து விடாதீர்கள். முதலில் அடுப்பினை பற்ற வைத்து பிறகு ஒரு கெடாசட்டியினை வைத்து அதில் 1/4 லிட்டர் எண்ணெய் ஊற்றி, அவை எண்ணெய் காயும் வரை பொறுத்திருந்து பின்னர் அந்த எண்ணெயில் உருண்டைகளை பத்திரமாக எண்ணெயில் போட்டு எடுக்கவும். அந்த உருண்டைகள் பொன்னிறமாக வரும் வரை காத்திருந்து பின்னர் அதை எடுத்து ஒரு தனி பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.


எல்லா உருண்டையையும் பொரித்து வைத்த பின்னர் தனி பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் ஒரு சம அளவு தண்ணீர் ஊற்றவும். அதாவது ஒரு டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி அதற்கு ஈடாக தண்ணீர் கொதித்த பிறகு அதே அளவு சர்க்கரை போட்டோம். இரண்டு ஏலைகாயை உள்ளிருக்கும் பருப்பை தூள் செய்து அந்த சர்க்கரை பாகில் போட வேண்டும். நன்றாக கொதித்த பிறகு அதாவது சர்க்கரை கரைந்த பிறகு அடுப்பில் இருந்து எடுத்து விடவும். பிறகு சர்க்கரை பாகு சூடு ஆறிய பிறகு ஒவ்வொரு உருண்டைகளையும் அதில் எடுத்து போட வேண்டும். பின்னர் சிறிது நேரம் அதை மூடி வைத்தோம். அவை சூடு ஆறிய பிறகு எடுத்து சாப்பிடவும்.



இப்பொழுது சுவையான குலாப் ஜாமூன் ரெடி. நன்றாக சாப்பிடுங்க.

படைப்பு பிடித்திருந்தால் தங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள். நன்றி....

3 comments:

  1. நன்றாக இருந்தது... நீங்கள் உங்களது பதிவுகளை இன்ட்லி மற்றும் தமிழ்மணத்தில் இணைக்கிறீர்களா இல்லையா... 90 பதிவுகளுக்கு மேல் எழுதியும் போதிய வரவேற்பில்லாமல் இருக்கிறீர்களே...

    ReplyDelete
  2. குலாப் ஜாமுன் அப்படியே ஜீராவில் மிதக்கணுமே....ஜீரா எல்லாம் ஜாமுனால் உள்வாங்கப் பட்டு விட்டதோ...

    ReplyDelete
  3. ஆமா நாங்க நாங்கன்னு சொல்றீங்களே அந்த நாங்க?
    நாங்களும் தெரிஞ்சுக்கலாமே..

    ReplyDelete