Wednesday, November 3, 2010

ஆறுல அஞ்சு போனா என்ன வரும்?

அனைவருக்கும் ஒரு நல்ல செய்தி..:

இந்த வருட தீபாவளியை எந்த பயமும் இல்லாமல் தைரியமாக கொண்டாடலாம்.
ஏன் என்றால் இந்த தடவை எந்த விஜய் படமும் ரிலீஸ் ஆகலை.

அதனால் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.

****************** ************************ ****************************************

நீதிபதி: உனக்கும் உன் புருசனுக்கும் டைவர்ஸ் தர முடியாது மா.
பெண்: ஏன் சார்?
நீதிபதி: ஒரு ஸ்ட்ராங் ரீசன் சொல்லு மா..
பெண்: என் புருஷன் ஒரு குடிகாரன் சார்.
நீதிபதி: இதெல்லாம் செல்லாது மா.
பெண்: ஒரு நாள் என்னை விஜய் படத்துக்கு கூட்டிட்டு போய் கொல்ல பார்த்தான் சார்..
நீதிபதி: படு பாவி அவ்ளோ கொடும செஞ்சிருக்கானா அவன். டைவர்ஸ் கண்டிப்பா உண்டு மா.

****************** ************************ ****************************************

அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
வழக்கம் போல ஊசி வெடி, யானை வெடி, லட்சுமி வெடின்னு வெடிக்காம
ஒரு சிலிண்டர், கார் என்ஜின், லாரி டீசல் டான்க் ன்னு வெடிச்சி ஊரையே கொளுத்துங்க.. ஓகே வா.

****************** ************************ ****************************************

பையன்: அம்மா எனக்கு அந்த சிகப்பு கலர் வெடி வைக்கணும். அதனால அதை கொடும்மா...

அம்மா: சனியனே அது சிலிண்டர் டா...

****************** ************************ ****************************************

கணித டீச்சர்: ஆறுல அஞ்சு போனா என்ன வரும்?
LKG: அஞ்சுவோட deadbody தான் வரும். ஏனென்றால் அஞ்சுவுக்கு swimming தெரியாது.

இப்படிக்கு
LKG அரியர் குரூப்..

****************** ************************ ****************************************

அப்பா: பக்கத்துக்கு வீட்ல போய் ஸ்குரூ டிரைவர் வாங்கிட்டு வாடா..
பையன்: இல்லைன்னு சொல்லிட்டாங்க அப்பா.
அப்பா: எதிர் வீட்ல போய் வாங்கிட்டு வா.
பையன்: அங்கேயும் இல்லன்னு சொல்லிட்டாங்க அப்பா.
அப்பா: கஞ்ச பயலுங்க.. நீ போய் நம்ம ஸ்குரு டிரைவர் ஐ எடுத்துட்டு வாடா..

****************** ************************ ****************************************

பாய்: உங்க மெடிக்கல் ஷாப்ல எல்லா மருந்தும் கிடைக்குமா?
ஷாப் கடைக்காரர்: ஆமாம் எல்லா மருந்தும் கிடைக்கும்..
பாய்: அப்போ ஒரு கிலோ வெடி மருந்து கொடுங்க..

****************** ************************ ****************************************

மனுஷன் படைச்சதுல உருப்படியான ரெண்டு விஷயம்....

ஒன்னு சரக்கு......
இன்னொன்னு முறுக்கு....

****************** ************************ ****************************************

இந்தியாவோட ஒரு சிட்டி க்கு பக்கத்துல உள்ள கிராமத்துல இருக்குற காட்டுக்கு பக்கத்துல ஒரு வீட்டுல காவல் இருக்குற நாயோட ரைட் சைடுல இருக்குற காலோட மூணாவது விரலோட நகத்துல உள்ள உள்ள ஒளிஞ்சிகிட்டு இருக்குற புழுவோட வயித்துக்குள்ள தோல் மேல்புறச் செல் திசுவோட ரெண்டாவது கிலாண்ட்செல்ளோடநியுக்லியோசில் இருக்குற பக்டீரியா வோட
chromosomal DNA வோட அவுட்டர் ஷெல் வோட ரெண்டாவது சப்செல்லோட ரெண்டாவது எலெக்ட்ரான் மேல சத்தியமா சொல்றேன்.
இந்த மெசேஜ் நான் டைப் பண்ணல.. இது ஒரு பார்வர்ட் மெசேஜ்.

****************** ************************ ****************************************

எல்லா எறும்பும் சைக்கிள் பந்தயத்துல கலந்துக்கிசிங்க...

அப்போ திடீர்னு ஒரு யானை குறுக்க வந்து தாண்டி போச்சி. அதை பார்த்த ஒரு எறும்பு "நீ சாக என் வண்டிதான் கிடச்சதா டா குண்டா.." அப்படின்னு சொன்னிச்சி..

****************** ************************ ****************************************

புதிதாக T20 எக்ஸாம் எப்படி வைக்கலாம்.

"பரீட்சை நேரத்தை குறைத்து ஒரு மணி நேரம் வைது ஐம்பது மார்க்கிற்கு வைக்கலாம்.."

"பரீட்சையின் ஒவ்வொரு பதினைந்து நிமிட இடைவேளையிலும் அவர்கள் நண்பருடனும் டிஸ்கஸ் வைத்து கொள்ளலாம்..."

"பரீட்சையின் முதல் முப்பது நிமிடத்திற்கு பவர் ப்ளே... நோ எக்ஸ்டர்னல்....

"பரீட்சையில் எல்லா அறையிலும் சியர் கேர்ள் இருந்து கொண்டு மாணவர்கள் வாங்கும் ஒவ்வொரு தாளுக்கும் நடனமாட வேண்டும்....."

****************** ************************ ****************************************

போலீஸ்: உங்க நண்பர் எப்படி செத்தாரு..?
சர்தார்: வயித்துக்குள்ள எலி ஓடுற மாதிரி இருக்குனு சொன்னான்.. நான் "எலி மருந்து" கொடுத்தேன். ஆனால் அதுக்குள்ள எலி அவனை கொன்னுடிச்சி.....

****************** ************************ ****************************************

management student kisses a girl.

girl: what is this?

boy: It is called DIRECT MARKETING...

Girl slaps the boy

boy: what is this?

Girl: this is called "CUSTOMER FEED BACK".

****************** ************************ ****************************************
தங்கள் கருத்துகளை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்...

4 comments:

 1. சத்தியமா ஜோக்குகளை எல்லாம் படிச்சிட்டு தாங்க சொல்றேன்.

  "தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினர்கள் அனைவர்களுக்கும் எங்களின் மனங்கனிந்த
  'தீபாவளி' நல் வாழ்த்துகள்"

  ReplyDelete
 2. ஏற்கனவே எங்கேயோ படித்த ஜோக்குகள் போல இருந்தாலும் மனது விட்டு சிரித்தேன்... குறிப்பாக LKG அரியர் குருப் மற்றும் ஸ்க்ரு ட்ரைவர் ஜோக்குகள்...

  ReplyDelete
 3. ரொம்ப நல்லா இருக்கு சார்... ஹாய்.. ஹெஈ..ஹேய்...

  ReplyDelete
 4. அத்தனையும் சின்னச் சின்ன டமாஸ் பட்டாஸ்

  ReplyDelete