ஹலோ நண்பர்களே,
இன்று எனது கல்லூரியில் பேசிய ஒரு சிறு நிகழ்ச்சியை தங்களிடம் கூறிகிறேன்.
ராமசாமி, கோவிந்தன் மற்றும் முருகன் என்னும் நபர்கள் சந்தித்து கொள்கின்றனர்.
ராமசாமி: ஏம்பா, நேத்து நம்ம ரவி பையன்களும், வேறு ரெண்டு பெரும் போலீஸ்ல மாட்டீட்டானுங்கலாமே?
கோவிந்தன்: ஆமாப்பா, தண்ணியடிச்சிட்டு வழில போறவங்கிட்ட எல்லாம் வம்பு பண்ணிட்டு இருந்தா அப்படித்தான் ஆகும்.
முருகன்: இவனுக எல்லாம் அப்பன் ஆத்தா கஷ்டபடுறதயே நெனச்சுப்பாக்கமாட்டனுகளா! ...... எப்ப நம்ம ஊர் பையனுக வெட்டியா, கூட்டுசேர்ந்து சுத்த ஆரம்பிச்சானுகளோ, அப்பயே சீரழிய ஆரம்பிச்சிடானுக..
ராமசாமி: ஆமாப்பா முருகா, நீ சொல்லுவா, நீ கஞ்சியோ கூழோ குடிச்சாலும் உம் பையன் ராமுவ பட்டணத்துல படிக்கவச்சிட்டிருக்க..
கோவிந்தன்: நல்லவேளை, இங்கேயே விட்டிருந்தா அவனும் சேர்ந்து கெட்டுபோயிருப்பான்..
முருகன்: அவன்தான்பா, என் உசிரு. அவன் நல்லாயிருந்த அதுவே போதும்.
அன்று இரவு முருகனின் வீட்டில் அவனும் அவனது மனைவியும் பேசிக்கொள்கிறார்கள்...
மனைவி: ஏங்க பையனுக்கு, பணம் போய் சேர்ந்திருக்குமா?
முருகன்: தெரியல...
மனைவி: பையன் கண்ணுக்குள்ளயே இருக்காங்க, போய் ஒரு எட்டு பாத்துட்டு வந்திருங்களேன்..
முருகன்: எனக்கும் பாக்கனும்போலதான் இருக்கு காசுக்கு என்ன பண்ணுறது.
மனைவி: சீட்டுக்காசு ஒரு ஐம்பது ரூபா இருக்கு. போயிட்டு வாங்க, கூடவே இந்த ஊறுகா பாட்டிலையும் கொண்டு போங்க. அவனுக்கு ரொம்ப பிடிக்கும்.
இங்கே கல்லூரி விடுதியில் முருகனின் மகன் ராமுவும் அவனது நண்பனும்....
நண்பன்: டே ராமு எந்திரிடா, மணி 11 ஆகுது... நேத்தடிச்ச மப்பு தெரியாம தூங்கிட்டு இருக்க.... டாய் உனக்கு மணியார்டர் வந்திருக்குடா.
(ராமு எழுந்து மனியார்டருடன் ஒரு லெட்டரையும் பெற்று கொண்டு வந்தான்)..
நண்பன்: டாய் மணியார்டர் ஹ்ம்ம், கொண்டாடிட வேண்டியதுதான். என்னடா லெட்டரும் வந்திருக்கு.
ராமு: ஏண்டா நீ வேற, நானே நாளைக்கு லீவுக்கு தண்ணியடிக்கப் பொய் சொல்லி அப்பாகிட்ட பணம் கேட்டு வாங்கியிருக்கேன்.
நண்பன்: என்ன லெட்டருல பழைய பஞ்சாங்கமா, வழக்கம்போல கிழிச்சி போட்டியா?
ராமு: ம்ம்ம்..... வேற என்ன, அப்பாவோட லெட்டரெல்லாம் எவண்டா படிப்பான்..!
(நண்பன் அதை கிழித்து எறிகிறான். அங்கு கண்ணீருடன் நின்று கொண்டிருந்தார் (ராமுவை பார்க்க வந்த தந்தை முருகன்)..........
பதிவு பிடித்திருந்தால் கருத்து தெரிவியுங்கள்..
இந்த வயசு இப்படி தான் இருக்கும்.இப்ப பண்ணாம எப்ப பண்ணுவாங்க ?.
ReplyDeleteHi bloggers/webmasters submit your blog/websites into www.ellameytamil.com and to get more traffic and share this site to your friends....
ReplyDeletewww.ellameytamil.com