Sunday, November 14, 2010
அவளுடன் நட்பா ? காதலா ?
நெருங்கிய நட்பில் காதல் மலர்வது சற்று சங்கடமானது. ஆனால் நெருக்கமான பழக்கம்தானே காதலாகிறது.?
உங்கள் நண்பன் அல்லது தோழி உங்களை சாதாரண நண்பனுக்கும் மேலாக நினைகிறாரா? அதை தெரிந்துகொள்வது எப்படி?
அதற்கு இங்கே உங்களுக்கு உதவும் சில குறிப்புகள் கொடுத்திருக்கிறேன். அதை கண்டு தெரிந்து கொள்ளுங்கள்..
நீங்கள் அவரை பிரியும்போது அவ்வப்போது அவர் உங்களை தேடுவார். நீங்கள் அவருடன் இல்லாதபோது அவர் உங்களை "மிஸ்" செய்கிறார் என்று அர்த்தம்.. அவர் உங்களைப்பற்றி அதிகம் சிந்திக்கிறார் என்பதும் இதில் தெரியும்.
அவர் எப்போதும் உங்களுடன் நேரத்தை கழிக்க விரும்புவார். எப்போதும் உங்களை பார்ப்பது அவருக்கு சந்தோஷ மனநிலையை ஏற்படுத்தும்.
அவ்வப்போது ஏதாவது உங்களுக்கு கொடுப்பார். அவ்வப்போது உங்களுக்கு அன்பாக எதையாவது அளிக்கிறார் அல்லது அனுப்பி வைக்கிறார் என்றால், நமது உறவு நட்பையும் தாண்டியது என்று அவர் உங்களுக்கு சொல்லாமல் உணர வைக்க முயல்கிறார் என்று அர்த்தம்.
நண்பர் அல்லது தோழி உங்களை அதிகம் சீண்டி விளையாடுகிறார், கிண்டலடிக்கிறார் என்றால், அவர் உங்கள்பால் ஈர்க்கப்பட்டிருக்க வாய்ப்பிருக்கிறது.
நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்கிறார், நீங்கள் சோர்ந்து போயிருக்கும்போது காரணம் என்னவென்று கேள்வி கேட்டு துளைக்கிறார் என்றால் அவர் உங்களுக்கு இனிமையான துணையாக இருக்க நினைக்கிறார், நட்பை தாண்டி உங்களை பார்க்கிறார் என்று புரிந்து கொள்ளுங்கள்.
நட்பிற்கும், காதலுக்கும் நூலிழை அளவுதை வித்தியாசம். அதனால் ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொள்ளும் முன்பு நட்பை காதலாக நினைத்து கணக்கு போட்டு விடாதீர்கள். ஏன் என்றால் அதனால் விளைவுகள் வர நிறைய வாய்பிருக்கிறது. ஆகவே சற்று நிதானித்து விட்டு முடிவு எடுக்கவும்...
ஹலோ படிசீங்கள்ள, பதிவு எப்படி இருக்குனு கொஞ்சம் லைட்'ஆ சொல்லிடு போங்க..............
Subscribe to:
Post Comments (Atom)
//நீங்கள் அவரை பிரியும்போது அவ்வப்போது அவர் உங்களை தேடுவார். நீங்கள் அவருடன் இல்லாதபோது அவர் உங்களை "மிஸ்" செய்கிறார் என்று அர்த்தம்.. அவர் உங்களைப்பற்றி அதிகம் சிந்திக்கிறார் என்பதும் இதில் தெரியும்.//
ReplyDeleteலைட்டா சொல்ல இல்ல ஸ்ரோன்ங்க சொல்லறன் நன்னா இருக்கு சூப்பர் பதிவு
// டிலீப் said...
ReplyDeletethanks dhilip