Sunday, November 14, 2010

கலப்படத்தை கண்டுபிடிப்பது எப்படி?



எல்லாவற்றையும்
போல உணவுப்பொருள்களிலும் கலப்படங்கள் அதிகரித்து வருகின்றன... ஆனால் இந்த உணவுக் கலப்படம், உயிருக்கே உலை வைக்கக் கூடியது. உணவில் கலப்படத்தை கண்டுபிடிப்பதற்கான சில எளிய வழிகளை இங்கே கூறி இருக்கிறேன். நீங்களும் இங்கே இருப்பதை போல் செய்தால் எளிதில் கண்டு பிடித்து விடலாம். வாருங்கள் அவை என்னவென்று பார்ப்போம்.

1. பால், தயிர், வருகடலைதூள் ஆகியவற்றில் ஸ்டார்ச் மாவைக் கலந்து விடுவார்கள். அதில் சிறிதளவு எடுத்து காயத்துக்கு போடும் டிஞ்சர் அயோடினை ஒரு சொட்டு விட வேண்டும். அப்போது நீல நிறம் ஏற்பட்டால் கலப்படம் உள்ளது என்று அர்த்தம். அப்போதே உஷாராகி விடுங்கள்.

2. காபி தூளில் வறுத்தெடுத்த பேரீச்சம்பழ கொட்டை, புளியங்கொட்டைகளை பொடி செய்து கலப்பதுண்டு. பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து கொண்டு, அதில் சிறிதளவு சலவை சோடா தூளை போட்டு கலக்க வேண்டும். பின்னர் அந்த நீரில் காபி தூளை போட்டு கலக்க, சிவப்பு அல்லது இளஞ்சிவப்பு நிறம் தோன்றினால் அந்த காபி தூளில் கலப்படம் உள்ளது என்று அர்த்தம் உஷாருப்பா.

3. பயன்படுத்திய பழைய தேயிலை தூள் மற்றும் தானியங்களின் கழிவு துகள்களில் சாயமேற்றி, புதிய தேயிலை தூளில் கலப்பார்கள். வடிகட்டும் தாள் ( பில்டர் பேப்பர்) ஒன்றை எடுத்து, அதன் மீது தேயிலை தூளை சிறிது தூவ வேண்டும். சிறிது நேரம் கழித்து அந்த தாளில் சிவப்பு, அல்லது இளஞ்சிவப்பு புள்ளிகள் தென்பட்டால் அதில் கலப்படம் உள்ளது என்று அர்த்தம்.

4. வெள்ளை சர்க்கரையில் வெண்மணல், ரவை, சுண்ணாம்புத்தூள் போன்றவற்றை கலப்பதுண்டு. ஒரு கரண்டி சர்க்கரையை எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் கரைக்க வேண்டும். நீரில் சர்க்கரை விரைவில் கரைந்து விடும். கலப்பட பொருள் அடியில் தேங்கும்.

5. பருப்பு வகைகளில் "கேசரி பருப்பு" என்பதைக் கலப்பார்கள். நன்கு கவனித்து பார்த்தாலே இந்த கலப்படத்தை எளிதில் கண்டு பிடித்துவிடலாம்.

6. பருப்பு வகைகள், இனிப்பு பண்டங்கள், ஐஸ்கிரீம், சர்பத், புலி போன்றவற்றில், நிலக்கரி தாரிலிருந்து கிடைக்கும் "மேத்தனில் எல்லோ" என்ற சாயப் பொருளை கலப்படம் செய்வார்கள். இவற்றில் சிறிதளவு எடுத்துச் சூடான நீரில் கலக்க வேண்டும். அப்போது அழுக்கு நிறத்தில் நீர் மாறும். அதில் மேலும் நீர் ஊற்றி, பிறகு அந்த நீரில் ஹைட்ரோகுளோரிக் அமிலம் சில துளிகள் விட்டால், கத்தரிப்பூ நிறம் போல் ஏற்பட்டால், கலப்படம் உள்ளது என்பது நிச்சயம்...

பதிவை பற்றி தங்களுக்கு கருத்துக்கள் சொல்ல நினைத்தால் சொல்லிவிட்டு செல்லுங்கள்..............

5 comments:

  1. // மதுரை சரவணன் said...

    thanks saravanan..

    ReplyDelete
  2. நல்ல விழிப்புணர்வை தரும் பதிவுகளுடன் அருமையான தலைப்பிட்டு பிளாக் ஆரம்பித்து இருக்கின்றீர்கள்.வாழ்த்துக்கள்.அனைவருக்கும் பதிவுகள் பயன் படக்கூடியதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

    ReplyDelete
  3. வேர்ட் வெரிபிகேஷனை நீக்கினால் நன்று!

    ReplyDelete
  4. சமூக விழிப்புணர்வுக்கான பதிவு..

    ஆனா எப்பவும் இப்படி சோதனை பண்ணிட்டே திரிஞ்சா .....

    ReplyDelete