Monday, November 29, 2010

கிளு கிளு ஜோசியம்..!..

இந்த பதிவில் நான் குமுதம் புத்தகத்தில் படித்த ஒன்றை தங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்...

இங்கே உங்களுக்கு நான் ஜோசியம் சொல்ல போகிறேன். நீங்கள் இங்கே இருக்கும் ஏழு அழகிகளை உங்கள் கனவுக்கன்னி ஒருவரை டிக் பண்ணுங்க. அது போதும்! நீங்கள் யார்? எப்படிப்பட்டவர் என்பதை கீழே சொல்லி இருக்கிறேன். தவறாக இருந்தால் மன்னிக்கவும். நிர்வாகம் பொறுப்பு ஆகாது.

அதற்காக நீங்கள் வேகமாக கீழே செல்ல கூடாது. செலக்ட் செய்து விட்டுதான் செல்ல வேண்டும். உங்கள் நண்பர் எப்படிபட்டவர் என்று தெரிந்து கொள்ளலாமே.

அனுஷ்கா


அசின்

நமீதாதமன்னா


நயன்தாரா

ஸ்ரேயா

த்ரிஷாஎன்ன செலக்ட் செய்து விட்டீர்களா..

சரி இப்போது பார்ப்போம் உங்கள் நண்பர் எப்படிபட்டவர் என்று..

முதலில் நயன்தாராவை செலக்ட் செய்த ராசிக்கரர்கள. .

- நீங்க ரொம்ப ரொம்ப நல்லவர் உள்ள ஒன்னு வெளியில ஒண்ணுன்னு மங்காத்தாவெல்லாம் உங்களுக்கு ஆட தெரியாது. அடுத்தவங்க சந்தோசத்துக்காக எந்த லெவலுக்கும் இருக்குற இன்னொசென்ட். அதுக்காக மத்தவங்க உங்களை முட்டாள்னு எடை போடுற முடியாது. எந்த ஒரு விஷயத்தையும் கரெக்ட்'ஆன நேரத்துல கட் பன்னுறது.. கண்டினியு பண்றதெல்லாம் உங்களுக்கு தானாகவே வரும். மொத்தத்துல அப்பாவி பிளஸ், அவசரகுடுக்கை..

அடுத்து அசின் ராசிக்காரர்களே

நீங்க ஒரு சூப்பர் மேன். எதையுமே மாத்தி யோசிப்பீங்க. ஆனால் பிரச்சனைன்னு வந்த நீங்க ஒரு பின்லேடன்தான். எங்க பொய் ஒளிஞ்சிக்குவீங்கன்னு யாருக்கும் தெரியாது. உங்க மைன்ட் மாதிரியே உங்க டேஸ்ட்டும் டிபரென்ட் ஆ இருக்கும். அழகான பொண்ணுங்ககூட கொஞ்சம் ஆம்பிளைத்தனமா இருந்தாதான் பிடிக்கும். மொத்தத்துல உங்க ரூட் தனி.

த்ரிஷா ராசிக்காரர்களே...

ஹய்யோ நீங்க குழந்தை மாதிரி. கொஞ்சம் குறும்பு, கொஞ்சம் அடம்னு இயல்பா இருக்குற உங்களை பொண்ணுங்களுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். உங்ககிட்ட ஒரு விஷயத்தை சாதிக்கனும்னா ஒன்னு கெஞ்சனும் அல்லது கொஞ்சனும். ஆனா என்ன செஞ்சாலும் காசு விஷயத்துல மட்டும் நீங்க கறார் பேர்வழி. ஆகா நீங்க ஒரு சென்சிடிவ் மற்றும் செண்டிமெண்ட் டைப்..

நமீதா ராசிக்காரர்களே.

தலைவா நீங்க ஒரு பிக்பாஸ்! சின்ன சின்ன விஷயங்களை பற்றி கடுகளவுகூட கவலைப்பட மாட்டீங்க. உங்க லட்சியம் எல்லாம் பெரிய பெரிய விஷயங்களுக்கு மேல்தான். மத்தவங்களுக்காக உங்க கண்களையும், காதுகளையும் திறப்பீங்கலே தவிர உங்க மனசை திறக்கணும்னா அது ரொம்ப பெர்ய விஷயமா இருக்கணும். உள்ளத்தின் கதவுகள் கண்களடா னு சொன்னது உங்களுக்கு நூறு பெர்சென்ட் மேட்ச் ஆகும்.

தமன்னாவை செலக்ட் செய்த ராசிக்காரர்களே.

ஐஸ்கிரீம் மனசு பாஸ் உங்களுக்கு . அடுத்தவங்க கஷ்டத்தை பார்த்தா அழகான பொண்ணோட துப்பட்டா மாதிரி உங்க மனசு பட்டுன்னு ஸ்லிப் ஆகிடும். அதேசமயம் எந்த விஷயம்னாலும் அஞ்சு நிமிஷம் தான். அப்புறம் அடுத்தது... நீங்க ஒரு நிகழ்கால மனிதர் பாஸ். குழந்தைகளும், குழந்தை மாதிரி பெண்களும்தான் பாஸ் உங்க நண்பர்கள். ஐஸ்கிரீம், சாக்லேட், பிஸ்தா,ன்னு உழிக்கும் ருசிக்கும் பர்சை பயப்படாமல் திறக்கும் உங்களிடம் பைசா மட்டும் கடனாக கிடைக்காது. டோட்டலா சொல்லனும்ன நீங்க ஒரு வானவில் பாஸ்.

ஸ்ரேயா ராசிக்காரர்களே

நீங்க ஒரு திறந்த புத்தகம் நண்பா. இப்படி சொன்னா கொஞ்சம் பழசா தெரியும். புதுசா சொல்லனும்னா நீங்க ஒரு பாஸ்வார்ட் இல்லாத கம்ப்யூட்டர் மாதிரி. சுத்தி உள்ளவர்கள் கொஞ்சம் ஓவர்'ஆ யூஸ் பண்ணினாலும் அசரமாட்டீங்க. போய் சேர்ற இடம் எதுன்னு தெரியாத வாழ்க்கையில் யார் முன்னாடி போனா என்ன? பின்னாடி வந்தா என்னன்னு நீங்க பாட்டுக்கு போய்டே இருப்பீங்க.

அனுஷ்கா ராசிக்காரர்களே

நீங்க ஒரு புன்னகை மன்னன் பாஸ். சிரிச்சே கவுத்துடுவீங்க. அதுக்காக அடுத்தவர்களை சரிக்க வைக்கிற காமெடியன் கிடையாது. எப்பொழுதும் சிங்கிளா இருக்கவே விரும்புற நீங்க மயங்குறது மிட்நைட் பார்டிலதான்... ஆனாலும் அவசரத்துக்கு உதவின்னா உங்களை நம்பி வரலாம். கடைசி பாயிண்ட் சார்ஜ் இருக்கிறவரைக்கும் கைவிடாத செல் மாதிரிதான் நீங்க. என்ன ஒன்னு கட்டிப்பிடிச்சாலும், வெட்டிபோட்டாலும் உங்க மனசுல உள்ளது உங்களுக்கு மட்டும்தான் தெரியும்...

என்ன நண்பர்களே நீங்க எப்படின்னு தெரிஞ்சதா.. அப்படியே எனக்கும் சொல்லிட்டு போங்க உங்க கருத்துகளை ....

5 comments:

 1. பதிவுலகினருக்கு ஒரு முக்கிய செய்தி :

  http://tamilrail.blogspot.com/2010/11/blog-post_7159.html

  ReplyDelete
 2. appo naa குழந்தை மாதிரிyaa :)

  ReplyDelete
 3. ஆகா..நான் ஒரு வானவில்...

  ReplyDelete
 4. This comment has been removed by the author.

  ReplyDelete
 5. ya correct pa i am click at ANUSHKA

  ReplyDelete