Tuesday, November 23, 2010

கம்ப்யுட்டரில் நாம் இல்லாதபோது வேறு யாரேனும் பயன்படுத்தி இருக்கிறார்களா என்பதை எப்படி அறிவது?




நான் இன்று கல்லூரில் இருந்த போது எனது நண்பர்கள் என்னிடம் ஒரு கேள்வி கேட்டனர். அவை உன்னால் கண்டுபிடிக்க முடியுமா என்று. அது என்ன வென்றால் நமது கம்ப்யுட்டரில் நாம் இல்லாதபோது வேறு யாரேனும் பயன்படுத்தி இருக்கிறார்களா என்பதை கண்டுபிடிப்பது எப்படி என்று.? ஆனால் இந்த கேள்வி என்னை மிகவும் கவர்ந்தது. எனக்கும் இவற்றிக்கான விடை தெரியவில்லை. பிறகு இணையத்தில் வந்து தேடிய பிறகுதான் தெரிந்து கொண்டேன்.

தற்போது அதை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். இவை உங்களுக்கும் உபயோகமாக இருக்கும் என்று நிச்சயம் என்பது உறுதி. இந்த பதிவு சிலருக்கு தெரிந்து இருக்கலாம் அல்லது தெரியாதிருக்கலாம். இவை தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளவும்....

நாம் பலரின் மனதில் அரித்துக் கொண்டிருக்கும் சந்தேகம் நீங்காத கேள்வி இது . அலுவலகங்களில், வீடுகளில் நம் பயன்பாட்டிற்கென உள்ள கம்ப்யூட்டர்களை, நாம் அங்கு இல்லாத போது, மற்றவர் பயன்படுத்தும் நிகழ்வுகள் நிச்சயம் இருக்கும்.. இதனை எப்படி அறிவது?

இதை நிறுவ சாப்ட்வேர் எதுவும் நிறுவ தேவையில்லை. இவை சுலபமாகவே உள்ளது. இந்த வசதி விண்டோஸ் ஆபரேடிங் சிஸ்டம் இல் ஒரு வழி தரப்பட்டுள்ளது. இதனை நமக்குக் காட்டும் வசதியின் பெயர் Event Viewer என்னும் ஒரு விண்டோ ஆகும்.

இந்த வசதி விண்டோஸ் எக்ஸ்பி முதல் இன்றைய விண்டோஸ் 7 வரை இந்த தரப்பட்டுள்ளது. இவற்றை உங்களுக்கு தற்போது விளக்குகிறேன்.



விண்டோஸ் எக்ஸ்பியில் ஸ்டார்ட் பட்டனை , ரன் அழுத்தி, eventvwr.msc என டைப் செய்திடவும். படத்தில் உள்ளது போன்று டைப் செய்து ஓகே பட்டனை கிளிக் செய்யுங்கள்.

விண்டோஸ் விஸ்டாவிலும், விண்டோஸ் 7லும், சர்ச் பாக்ஸில் டைப் செய்திடவும்.

அந்த விண்டோவில், எப்போது எந்த நேரத்தில் நமது கம்ப்யூட்டர் பயன்படுத்தப்பட்டது என்ற தகவல்கள் காட்டப்படும். இதில் முதலில் இருக்கும் விஷயங்கள் நமக்குப் புரியாது. இறுதியாகப் பயன்படுத்தியவர் பெயர், கம்ப்யூட்டர் பெயர் காட்டப்படும். அதனைக் கொண்டு அறிந்து கொள்ளலாம். படத்தில் உள்ளது போன்று தோன்றும்.




விண்டோஸ் எக்ஸ்பி ஆபரேடிங் சிஸ்டம் தனது கம்ப்யூட்டரில் நடக்கும் நிகழ்வுகளை, Application, Security, மற்றும் System என மூன்று வகையான பைல்களில் அமைத்து வைத்துக் கொள்கிறது. விஸ்டாவில் இவை அனைத்தும் Windows Logs என்ற பிரிவில் வைக்கப்படுகின்றன.

விண்டோஸ் 7 சிஸ்டம் Setupமற்றும் Forwarded Events எனவும் இவற்றைக் கொள்கிறது. நமது நோக்கத்திற்கு System log என்பதுதான் தேவை. இடது புறம் உள்ள System என்பதில் கிளிக் செய்தால், கம்ப்யூட்டரில் ஏற்பட்ட நிகழ்வுகளின் பட்டியல் கிடைக்கும்.

இங்கு நீங்கள் கம்ப்யூட்டரை விட்டு நகன்ற தேதி, நேரம் அடிப்படையில் உள்ள நிகழ்வுகளைக் கண்டு, யார் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பதை பட்டியலிட்டு இருப்பதை பார்க்கலாம். அத்துடன் யார் அதிக நேரம் பயன்படுத்தினார்கள் என்றும் கவனிக்கலாம்.

நான் விண்டோஸ் எக்ஸ்பி உபயோகபடுதுவதால் என்னால் விண்டோஸ் 7 க்கான புகைப்படங்களை காட்ட முடியவில்லை.

இவற்றை பயன்படுத்தி உங்கள் கம்ப்யுட்டரை சோதனை செய்து பாருங்கள்..


இவற்றில் ஏதேனும் பிழை இருப்பின் அல்லது கருத்துக்கள் இருப்பின் அவற்றை கமெண்ட்ல் தெரிவியுங்கள்.

5 comments:

  1. இதெல்லாம் நம்ம கம்யூட்டரை நமக்கு தெரிஞ்ச யாராவது நம இல்லாத நேரத்துல உபயோகிக்கிறத கண்டிபிடிகிறது அப்படி தானே. ?

    இப்பலாம் ஜீடால்க்ல நம்ம பேசிட்டு இருந்தாளே போதும். அத வச்சு நம்ம சேவ் பண்ணி வச்சுருக்க்க பைல் எல்லாமே நம்ம அனுமதியே இல்லாம சுடுற டெக்னிக்லாம் வந்துருச்சு. நானே பாத்துருக்கேன். நீங்க சொன்ன தகவல் எல்லாருக்கும் உபயோகமா இருக்கும்.வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. நல்ல தகவல் ! ! !
    பகிர்ந்தமைக்கு
    நன்றி ....

    ReplyDelete
  3. கண்டிப்பா பயன்படும்
    நன்றி

    ReplyDelete
  4. நல்ல தகவல்,,,,,,மேலும் நாம் நாளாந்தம் எத்தனை kb இன்ரநெட் பாவிக்கிறேம் என்பதை எப்படி பார்ப்பது?

    ReplyDelete