இங்கே எனது கல்லூரியில் ஒரு மாணவர் கூறிய ஒரு கதையை உங்களிடம் கூறுகிறேன்...
அன்பிற்குரியவர்கள், நான் வேப்பமரம் பேசுகிறேன். எனக்கு வயது நூறு ஆண்டு என சொல்லுகிறார்கள். பிரம்மாண்டமாக நான் வளர்ந்திருக்கிறேன். நான் வளர்ந்த அளவுக்கு கூட சில மனிதர்களின் எண்ணம் வளரவில்லை. காரணம் கேட்கிறீர்கள..... சொல்லுகிறேன்.
குமரன் தெருவில் உள்ள- அன்பு இல்லத்தில் நான் நிற்கிறேன். பெரிய வீடு, குழந்தைகளும், பெரியவர்களுமாக ஐந்து பேர் அங்கே வசிக்கிறார்கள். கோடை காலத்தில் அவர்கள் அனைவரும் என் நிழலில் தான் இளைப்பாறுதல் அடைவார்கள். குழந்தைகள் கயிறு கட்டி மகிழ்வுடன் ஊஞ்சலாடுவார்கள். அந்த வீட்டிலிருக்கும் மருமகள் வாரந்தோறும் வெள்ளிகிழமை என் வேர்ப்பாகத்தில் மஞ்சள் பூசி, குங்குமம் இட்டுத் தீபாராதனை காட்டி வழிபடுவாள். அம்மை நோய் கண்டவர்களுக்கு நான் நல்ல மருந்தாகவும் - அதாவது - என் இலைகளை அரிது பூசி கொள்ளுவார்கள். நான் கொடுக்கும் பூவிலே பச்சடி செய்து உண்பார்கள். என்னுடைய கொழுந்து சர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல மருந்து!...
ஆகா நான் அவ்வீட்டிலிருப்பவர்களுக்கு நான் நன்மையே எக்காலத்திலும் செய்து வருகிறேன்.
சரி... இப்பொழுது என்ன சோதனை என்று கேட்கிறீர்களா....
அதை ஏன் கேட்கிறீர்கள்? இந்த மனிதர்களுக்கு பணத்தாசை மட்டும் வரவே கூடாது. வந்தால் எதை வேண்டுமானாலும் செய்வார்கள் போலிருக்கிறது.
மர மண்டையே.... சும்மா 'வள வள' என்று பேசி கொண்டிருக்காதே.. பிரச்சனையை போட்டு உடை என்று நீங்கள் கத்துவது எனக்கு கேட்கிறது. இதோ சொல்லுகிறேன்.
இந்த அன்பு இல்லத்தில் வயதான ஒரு கிழவர், கணவன், மனைவி, ஆணும், பெண்ணுமாக பதினைந்து வயதிலும், பத்து வயதிலும் இரண்டு பிள்ளைகள். கிழவர் அரசு பணியிலிருந்து ஓய்வு பெற்று விட்டார். தற்பொழுது மகன் வீட்டில்தான் தங்கி இருக்கிறார். மகனும் ஒரு பொறுப்பான பணியில் இருக்கிறான். கை நிறைய சம்பாதிக்கிறான். அவன் என்ன வேலை பார்கிறான் என்பதை பின்னல் சொல்லுகிறேன்.
நேற்று காலை கிழவரும், மகனும் என் நிழலில் உட்கார்ந்துவாறு பேசி கொண்டிருந்ததுதான் என்னை பெரிதும் நோகும்படி செய்தது. தந்தையும் மகனும் பேசிக் கொண்டதை அப்படியே உங்களிடம் கூறுகிறேன்.
"அப்பா.. நான் ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன்..."
"என்னப்பா முடிவு..."
"ஆயிரம் சதுரடி கொண்ட இந்த காலி மனையிலே வேப்பமரம் வளர்ந்து நிக்கிது. இதை வெட்டி எறிஞ்சிட்டா நிலம் சமமாயிரும்... அப்படியே ஒரு அழகான வீட்டை கட்டி வாடகைக்கு விட்டாக் கிட்டத்தட்ட மூவாயிரத்துக்கு மேலே வாடகை கிடைக்கும்.. எப்படிப்பா..." " ஏண்டா.. புத்தி கெட்ட பயலே.. நீ மரத்தை வெட்டறதுக்க உன்னை எம்.எஸ்ஸி., பாட்டணி படிக்க வச்சேன்... இந்த மரத்துக்கு நூறு வயசு ஆகுது தெரியுமா... எங்க தாத்தா வச்சது.. எங்க அப்பா .. நான் நீ... உம புள்ளைங்க எல்லாம் ஓடியாடி விளையாடினது இந்த மர நிழல்லதான். அஹ்டு மட்டுமில்லே இது நமக்கு குல தெய்வம் மாதிரி.. இதை போயி வேட்டறேனு சொல்லுறியே.. மனுஷனா நீ.. மாற்றத்தை விட பணம் பெரிசா போச்சா.."
"அட போங்கப்பா .... காலம் மாறிக்கிட்டு இருக்குது... செத்தப் பொணமா இருந்தாலும் அதை பொதைக்கறக்கு கூட காசு வேணும்.. புரியாம பேசாதீங்க. நாளைக்கு காலைல இந்த மரத்தை வெட்ட ஆறு பேர் கொண்ட கூலிப்படைகள் வரும். எம் முடிவை யாராலும் மாத்த முடியாது.
"டாய்... மவனே.. வேண்டாண்டா.. வெப்ப மரத்தை வெட்டுறது அந்த மாரியாத்தாலயே வெட்டுறதுக்கு சமம்.. இது குடும்பத்துக்கு நல்லதில்லை... "
"அப்பா .. உங்க முட்டாள்த்தனமான நம்பிக்கைக்கு நான் பணிய முடியாது.. இந்த மரத்தை வெட்டுவேன்.. ஒரு வீட்டையும் கட்டுவேன். இது என்னோட உறுதியான முடிவு."
கிழவர் செய்வதிரியாது திகைத்து போய் நின்றார்.
அப்புறம் என்ன நடந்தது தெரியுமா.. அந்த பெரியவர் மனம் உடைந்து போய்விட்டார். போலிருக்கிறது... ரொம்ப நேரமா என்னையே பார்த்து கொண்டு இருந்தார்..
அவருடைய மருமகளும், பேரக்குழந்தைகளும் அவரை உணவுவுன்ன பலமுறை அழைத்தும் மறுத்துவிட்டார்.
விடியற்காலை நேரம்...
அவரின் மகன், மருமகள், பேரக்குழந்தைகள் அனைவரும் நன்றாக உறங்கி கொண்டு இருந்தனர்.
கதவை திறந்து கொண்டு கிழவர் மட்டும் வெளியே வந்தார். அவரது தொழில் ஒரு துணிப்பை ..
வேப்ப மரமாகிய என்னை மூன்று என்னை சுற்றி வந்து வணங்கினார். என்னை பார்த்து "அம்மா என்னை மன்னிச்சிரு... உன்னை காப்பாத்த எனக்கு வழி தெரியல... சிறு வயசுலேர்ந்து உன் நிழலு தான் எனக்கு சொர்க்கம். பெத்ததாயி மாதிரி என்னை பல முறை உன்னோட மென்மையான பச்சை இலைகளால் காத்தை வீசி தூங்க வச்ச.. உன்னை வெட்டனும்னு நினைக்கிற எம் மகன் என்னை பொறுத்தவரை ஒரு கொலைகார பாவி. நீ வேட்டுப்படுறதை என்னலே பார்க்க முடியாது. தாயி ... மனுஷ தன்மையில்லாத இந்த வீட்டுல இனிமேல் நான் இருக்க இரும்பால.. மனுஷங்களே இல்லாத மரங்கள் மட்டுமே இருக்குற ஏதாவது ஒரு காட்டு பகுதிக்கு நான் போக போறேன். என்னோட மீதி நாட்கள் இனி அங்கேதான். " இப்படியெல்லாம் பேசிய அந்த கிழவர் வழியும் கண்ணீரோடு வில் கதவை திறந்து கொண்டு வெளியேறினார்.
எனக்காக குரல் கொடுத்து கொண்டிருந்த ஒரே ஒரு ஜீவனும் இப்போ வெளியே போயிருச்சி. இன்னும் கொஞ்ச நேரத்துல என்ன வெட்டி கூறு போட ஆட்கள் வந்துருவாங்க.. ம்ம்... சொல்லுங்க. என்னை கொலை செய்யாம தடுக்க நீங்க யாராவது வரமாட்டீர்களா .. ஏக்கத்துடன் யாரையாவது எதிர்பார்க்கிறேன். அப்புறம் கடைசியா ஒன்னு..
என்னை வெட்டனும்னு சொல்லி கொண்டிருக்கும் அந்த ஆளு .. யாரு தெரியுமா.. சுற்றுப்புறசூழல் துறையிலே ஒரு அதிகாரியா பணி செய்யறாராம்...
எப்படி இருக்குது பார்த்தீங்களா....
படிக்கிறது இராமாயணம். இடிக்கிறது பெருமாள் கோயிலு.. அப்படீங்கிற பழமொழிக்கு இதுதான் அர்த்தம்..
என்ன நான் சொல்லுறது சரிதானே....
கருத்துக்கள் இருந்தால் சொல்லிவிட்டு செல்லுங்களேன்...
நல்ல கருத்துள்ள கதைங்க
ReplyDelete