Sunday, November 21, 2010

கோபத்தை வெல்வது எப்படி?

ஓர் ஊரில் இளைஞன் ஒருவன் இருந்தான். யார் எப்படி எரிச்சல் ஊட்டினாலும் அவனுக்கு கோபமே வராது.


நண்பன் ஒருவன், "எனக்கு அடிக்கடி கோபம் வருகிறது. பிறகு தான் ஒன்றுமில்லாததற்கு ஏன் இப்படிக் கோபப்பட்டேன் என்று வருந்துவேன். எது நடந்தாலும் கோபமே கொள்ளாத உன்னை பார்க்கும் போது எனக்கு பொறாமையாக இருக்கிறது. உன்னால் மட்டும் எப்படி முடிகிறது? " என்று கேட்டான்.


அதற்கு அந்த இளைஞன் , "நான் சிறுவனாக இருந்தபொழுது எடுத்ததற்கெல்லாம் கோபப்படுவேன். எரிந்து விழுவேன். என் நிலையை பார்த்து என் தாய் எனக்கு அறிவுரை சொன்னாள். அந்த அறிவுரைதான் என்னை மாற்றியது." என்று கூறினான்.


"என்ன அறிவுரை?" என்று கேட்டான் நண்பன்.


"யாரெல்லாம் உன்னை கோபம் கொள்ள வைக்கின்றார்களோ அவர்கள் உண்மையிலேயே உன்னை வென்றவர்கள் ஆகிறார்கள். நீ மட்டும் கோபம் கொள்ளாமல் இருந்தால் அவர்களை நீ வென்றவன் ஆவாய் என்றார். ஒவ்வொரு முறை என்னை பிறர் கோபம் ஊட்ட முயலும்போதும் நான் அவர்களை வென்ற பெருமிதத்தில் சிரித்துக்கொண்டே இருந்து விடுகிறேன். இதனால் எனக்கு கோபமே வருவதில்லை" என்று விளக்கம் சொன்னான் அந்த இளைஞன்.



அப்படியே உங்களுக்கு தெரிந்த கமெண்ட்களை சொல்லிட்டு போங்க.

10 comments:

  1. நல்ல யோசனை!

    கோபம் வந்தா 100 முதல் 1 வரை சொல்லிக்கொண்டே வருவேன். அப்படி செஞ்சா 1 முடியும் போது என்ன கத்துனாலும் சும்மா இருக்கான்னு மனசுல நெனச்சுட்டு போய்டுவாங்க.

    ReplyDelete
  2. //ஆமினா said...
    ur point is may be correct

    ReplyDelete
  3. கோபம் வந்தா கொஞ்ச நேரம் பேசாம அமைதியாக இருந்தாலே போதும் கோபம் தானாகவே குறையும்...

    ReplyDelete
  4. நாம்தான் நினைக்கிறோம் அவர்களை வென்று விட்டோம் என்று ....இப்படியே எல்லோருடையை கோபத்தையும் வென்றுகொண்டே வந்தால் நமக்கு பெயர்....கே...யந்தான்
    [எல்லாம் அனுபவம் சொல்லித் தந்த பாடம்ங்க]
    கோபத்தைக் காட்டணும் பிறகு சுமுகமாக வலம் வரணும்....முடியுமா?

    ReplyDelete
  5. வணக்கம் ரவி..

    தனி நபர் சார்ந்த அனுகுமுறைக்கு ஒரு வேளை சரிவரலாம்.சமூக முரண்களை எப்படி பொறுத்துக்கொள்வது.பொறுத்தால் எப்படி சரிசெய்வவது.

    ReplyDelete
  6. // goma said...

    think panni solgiren.. thanks

    ReplyDelete
  7. //"யாரெல்லாம் உன்னை கோபம் கொள்ள வைக்கின்றார்களோ அவர்கள் உண்மையிலேயே உன்னை வென்றவர்கள் ஆகிறார்கள். நீ மட்டும் கோபம் கொள்ளாமல் இருந்தால் அவர்களை நீ வென்றவன்//

    ஆகா.. வெற்றி என்ற உணர்வு நம்மை நிதானப்படுத்துகிறது. அருமை..

    ReplyDelete
  8. //தனி நபர் சார்ந்த அனுகுமுறைக்கு ஒரு வேளை சரிவரலாம்.சமூக முரண்களை எப்படி பொறுத்துக்கொள்வது.பொறுத்தால் எப்படி சரிசெய்வவது.//

    இதுக்கு என்ன பதில் சொல்வீங்க...

    ReplyDelete