Friday, December 31, 2010

17,60,00,00,00,000 கோடி,.....


17,60,00,00,00,000 கோடி,.....

என்னா பார்க்குறீங்க,

எண்ணுறதுக்கே உங்களுக்கு இவ்வளவு கஷ்டமா இருக்கே,

ஆட்டையை போட்ட எனக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கும்..


இப்படிக்கு,


இது யாருன்னு நீங்களே முடிவு பண்ணிகோங்க....
நீங்கள் தவறாக நினைத்தால் அதற்கு நான் பொறுப்பு அல்ல.


இது எனக்கு மொபைல் இல் வந்த நகைச்சுவை. தவறாக எண்ண வேண்டாம்.

கமெண்ட் இருந்தால் தெரிவிக்கவும்.


Thursday, December 30, 2010

என்னை யாரும் தேட வேண்டாம்...

வணக்கம் நண்பர்களே,
சீக்கிரம் அடுத்த வருடம் வரபோகிறது. அதற்காக முதலில் நான் அனைவருக்கும் எனது அன்பான புத்தாண்டு வாழ்த்துக்கள்.

தற்கொலை கடிதம்.

என்னை யாரும் தேட வேண்டாம்.

ஏனென்றால் நான் லவ் பண்ண போகிறேன்.


கொலை மிரட்டல்:

இந்த வருடம் முடிய இன்னும் கொஞ்சம் நாள் தான் இருக்கு. ..

ஏதாவது தப்பு பண்ணி இருந்தா....

மனச கஷ்டபடுத்தி இருந்தா....

காயபடுத்தி இருந்தா....

...

.......


....


....


...


...


...


....


...


....


எனக்கு கால் பண்ணி மன்னிப்பு கேட்டுக்கோங்க.

நான் இப்போ நல்ல மூட்ல இருக்கேன்.

உடனே மன்னிச்சிடுவேன்..

இல்லேனா அப்புறம் நான் பொறுப்பல்ல.. சொல்லிபோட்டேன்.


படிச்சிட்டு அப்படியே போகாதீங்க. ஏதாவது கமெண்ட் ல சொன்னதான் நான் என்னை தேத்திக்குவேன்...

Wednesday, December 29, 2010

கண்ணீருடன் சன் பிக்சர்ஸ்….

எனக்கு தோன்றிய நகைச்சுவை..


காலம் என்பது சூர்யா படம் மாதிரி அதுவா ஓடும்…

ஆனா

வாழ்க்கை என்பது விஜய்படம் மாதிரி நாமதான் ஓட்டனும்..

இப்படிக்கு

கண்ணீருடன் சன் பிக்சர்ஸ்….

*******************************************************************************
யு கே ஜி மாணவர்:

சன்:
நான் ஸ்கூல் போக மாட்டேன்

அம்மா: எதுக்கு?

சன்: வேலை செய்ய போறேன்

அம்மா: UKG படிச்சிட்டு என்ன வேலை செய்ய போற?

சன்: LKG கேர்ல்ஸ்க்கு டியூஷன் எடுக்க போறேன் .

********************************************************************

உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா?

இந்த வாரம் குங்குமம் இதழ் வாங்கினால் அத்துடன்
ராசாவும் நீரா ராடியாவும் இணைந்த புகைப்படம் மற்றும் இருவரும் இணைந்து உரையாடிய ஆடியோ கேசட் முற்றிலும் இலவசம்.

தெரியுமா.? அப்படின்னு என் நண்பர்கள் நகைச்சுவையாக என்னிடம் கூறுகிறார்கள்.

இது உண்மையா...? அல்லது பொய்யா? எனக்கு தெரியவில்லை.. தெரிந்தால் சொல்லுங்கள். கமெண்ட் இல் காத்திருக்கின்றேன்.
ஹி ஹி ஹி...

Sunday, December 26, 2010

அனைவரிடமும் இதை தெரிவியுங்கள். நண்பர்களுக்கு அவசியம் பார்வார்ட் செய்யவும்....

அனைவருக்கும் எனது வணக்கம்,

இன்று நான் என்ன சொல்ல போகிறேன் என்றால், எனக்கு நேற்று நடந்த ஒரு சம்பவத்தை தங்களிடம் கூறுகிறேன். கவனமாக கேளுங்கள்.

நேற்று மாலை பொழுதில் எனது அப்பா என்னிடம் ஒரு பேப்பர் கொடுத்தார். இல்லை இல்லை ஒரு பத்திரிகை கொடுத்தார். அதாவது அவரிடம் யாரோ ஒருவர் இதை கொடுத்துவிட்டு சென்றதாக கூறி என்னிடம் கொடுத்தார். அதை நான் பிரித்து படித்த போது எனக்கு ஒரு பக்கம் நகைச்சுவையாகவும் அதே சமயம் ஒரு பக்கம் சிரிப்பதா அல்லது சும்மா இருப்பதா அல்லது ஒன்றும் கூறாமல் இருக்கவும் முடியவில்லை. சும்மா இருந்தாலும் வம்பு வருவது போல் இருந்தது. யோசித்தேன், இதை உங்களிடம் கூறலாமே என்று நினைத்து இந்த பதிவை எழுதுகிறேன். அந்த பேப்பரில் இருந்ததை தங்களிடம் கூறுகிறேன்.

அதில் என்ன இருந்ததென்றால் ஒரு சாமியை பற்றி இருந்தது. அது பொள்ளாச்சி ஆணை மலை மாசாணி அம்மன் பற்றி இருந்தது.

அதாவது, அதை அப்படியே போடுகிறேன் நீங்களே படியுங்கள்.

அதிசயம் ஆனால் உண்மை.
பொள்ளாச்சி, ஆனைமலை மாசாணி அம்மனின் கலியுக மகிமைக் கட்சிகள்.

பரம பக்தர்களே!
ஆனைமலையில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு மாசாணி அம்மன் திருக்கோவிலில் ஒரு அற்புதம் நடந்தது. ஒரு நாள் பூசாரி பூஜை செய்து கொண்டிருந்தபோது ஒரு பாம்பு வந்தது. அதை கண்டு பூசாரி பயப்பட்டார். அது ஒரு பிராமண அவதாரம் எடுத்து தர்மத்தை யார் கெடுக்கிறார்களோ அவர்களை அழிப்பேன். யாரவது என்னுடைய பெயரில் 1000 பத்திரிகை அச்சிட்டு வெளியிடுகிறார்களோ அவர்கள் நினைத்ததை 22 நாட்களில் தீர்த்து வைப்பேன். ஆனால் இப்பத்திரிகை இன்று நாளை என கழித்தால் அதிக கஷ்டத்தை கொடுப்பேன் என்று அந்த நாகதேவதை விஷயத்தை கூறி பின்புறமாக 2 அடி தூரம் கடந்து மாயமாக மறைந்தது.

இந்த விஷயத்தை கேட்டு சங்கராபுரத்தில் ஒருவர் 1500 நோட்டீஸ் அச்சிட்டதால் லாட்டரி சீட்டில் 60 லட்சம் பரிசு கிடைத்தது. விழுப்புரத்தில் ஒருவர் 877 நோட்டீஸ் அச்சிட்டு வெளியிட்டதால் 21 நாட்களில் தங்க புதையல் கிடைத்தது. இதைபோல் ஒருவர் அத்திரிக்கை வெளியிடலாம் என நினைத்தபோது அவருக்கு அரசாங்க வேலைக்கு ஆர்டர் வந்தது. பிறகு அவர் 100 நோட்டீஸ் அச்சிட்டு வெளியிட்டால். ஆனால் அதை படித்த ஒருவர் பொய் என்று கேலி செய்து பத்திரிக்கையை கிழித்து போட்டார். அதனால் அவருடைய மகன் இறந்துவிட்டார்.

கள்ளக்குறிச்சியில் பாபு என்பவர் பத்திரிக்கை படித்துவிட்டு ஒரு மாதம் காலம் தாமதம் ஆனதால் வியாபாரத்தில் பெரும் நஷ்டம் அடைந்தார். பிறகு அவருடைய மனைவி மரணமடைந்தார். மேலும் புதூர் என்ற ஊரில் நான்கு நபர்கள் சேர்ந்து 2500 பத்திரிக்கை வெளியிட்டார்கள். அவர்களுக்கு லாட்டரியில் ரூ.4 லட்சம் கிடைத்தது. இந்த விஷயத்தை கேட்ட மளிகைக்கடைக்காரர் 1500 பத்திரிக்கை வெளியிட்டார். அவருக்கு லாட்டரியில் ரூ.4 லட்சம் கிடைத்தது. பிறகு அங்காளம்மன் கோவிலை கட்டினார்.

இந்த பத்திரிக்கையை 15 நாட்களுக்குள் அச்சிட்டு வெளியிட்டால் நினைத்த காரியம் நடக்கும். இதை வாசித்த பிறகு பிறருக்கு கொடுங்கள். அருள்மிகு மாசாணி அம்மன் தவறாமல் அவருடைய மகிமையை காட்டுவார்.


என்று இவ்வாறு அந்த பத்திரிக்கையில் இருந்தது. நான் என்ன செய்ய.?

நல்லவேளை எனக்கு இப்போது ஒன்றும் இல்லை. ஏன் என்றால் நான் இங்கே மற்றவரிடம் அதாவது உங்களிடம் தெரிவித்து விட்டேன். எனக்கு நன்மை வந்தால் தங்களிடம் தெரிவிக்கின்றேன்.

இதை வெளியிடாமல் போய்விட்டால் ஏதாவது வந்து விட போகிறது என்பதற்காக நான் தங்களிடம் கூறி விட்டேன். இது போல் உங்களுக்கும் ஏதாவது வந்தால் நீங்கள் முடிவு செய்து கொள்ளுங்கள். இனி நீங்களாச்சி அதுவாச்சி.. வரட்டுமா. ஆனால் எனக்கு இது கொஞ்சம் நகைச்சுவையாகதான் இருக்கிறது. அப்போ பயம்.?


படிச்சீங்கல்ல ஏதாவது சொல்லிட்டு போறது.

Friday, December 24, 2010

இன்று 2 வது நாளாக ராசாவிடம் சி.பி.ஐ., விசாரணை...


தொலைத்தொடர்பு துறை முன்னாள் அமைச்சர் ராஜாவிடம், சி.பி.ஐ., அதிகாரிகள் இன்றும் (சனிக்கிழமை) 2 வது நாளாக தொடர்ந்து விசாரணை நடத்துகின்றனர். ஏற்கனவே நேற்று 9 மணி நேரம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இன்றும் விசாரணைக்காக ராஜா சி.பி.ஐ., அலுவலகத்தில் ஆஜரானார். தனது உடல்நலம் கருத்தில் கொண்டு அவரது டாக்டருடன் ராஜா வந்தார்.


ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக, ஏற்கனவே தயார் செய்து வைத்திருந்த நூற்றுக்கும் மேற்பட்ட கேள்விகளை அவரிடம் சரமாரியாக கேட்டனர். ஆதாரங்களை முன்கூட்டியே திரட்டி வைத்து கொண்டு, அதிகாரிகள் கேள்விகள் எழுப்பியதால், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் இன்னும் பல விஷயங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


ஸ்பெக்ட்ரம் மோசடி தொடர்பாக எழுந்த சர்ச்சையால், கடந்த மாதம் பதவியை ராஜினாமா செய்த ராஜாவுக்கு, விசாரணைக்கு ஆஜராகும்படி சி.பி.ஐ., சம்மன் அனுப்பியது. குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 160ன் கீழ் இந்த சம்மன் அனுப்பப்பட்டது. சம்மனை ஏற்ற ராஜா, கடந்த புதன்கிழமை சென்னையிலிருந்து டில்லி சென்றார். நேற்று காலை 10.30 மணிக்கு அவர், சி.பி.ஐ., அதிகாரிகள் முன் ஆஜராகினார். 10.45 மணிக்கு அவரிடம் அதிகாரிகள் கேள்விகளை கேட்க துவங்கினர்.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாகவும், கம்பெனிகளின் தொடர்பு அதிகாரியாக செயல்பட்ட வைஷ்ணவி கம்யூனிகேஷன்ஸ் நிறுவன தலைவர் நிரா ராடியாவுடனும் தொலைபேசியில் பேசிய பேச்சுக்கள் குறித்தும், சில தொலைத்தொடர்பு கம்பெனிகளுக்கு விதிமுறைகளை மீறி சாதகமாக செயல்பட்டது குறித்தும், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முன்தேதியிட்டு சிலருக்கு லைசென்ஸ் வழங்கியது,


தொலைத்தொடர்பு கம்பெனிகளுக்கும், ராஜாவின் உறவினர்களுக்கும் உள்ள தொடர்பு குறித்தும் அடுக்கடுக்காக பல கேள்விகள் கேட்கப்பட்டன.ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக ஏற்கனவே சேகரிக்கப்பட்டிருந்த தகவல்கள் அடிப்படையில், நூற்றுக்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டதாக, சி.பி.ஐ., வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த விசாரணைக்குப் பின், பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்பெக்ட்ரம் ஊழல் பணம் யார் யாருக்கெல்லாம் கொடுக்கப்பட்டது? கேள்விக் கணைகளால் ராஜாவை திணறடித்த சி.பி.ஐ.,

தொலைத்தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ராஜாவிடம் நேற்று சி.பி.ஐ., அதிகாரிகள் கேட்ட கேள்விகள் என்னென்ன? அதற்கு அவர் அளித்த பதில்கள் என்ன? என்பது தொடர்பாக பல புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.


அதன் விவரம் வருமாறு
:"2ஜி' ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தொலைத்தொடர்புத் துறை முன்னாள் அமைச்சராக இருந்த ராஜாவை மையமாக வைத்து, தங்களது அனைத்து நடவடிக்கைகளையும் ஆரம்பம் முதலே சி.பி.ஐ., அதிகாரிகள் மேற்கொண்டு வந்தனர்.ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ராஜாவுடன் தொடர்பில் இருந்த உயர் அதிகாரிகள், இடைத்தரகர்கள், உறவினர்கள் மற்றும் பினாமிகள் என, அவரைச் சுற்றியிருந்த பலரையும் வளைத்து சோதனை நடத்தி, ஏராளமான ஆதாரங்களை திரட்டி வைத்துள்ளனர். இந்நிலையில், கடைசியாக ராஜாவை விசாரணைக்கு வருமாறு சம்மன் அனுப்பியதையடுத்து, நேற்று அவர், சி.பி.ஐ., அதிகாரிகள் முன் ஆஜரானார். கடந்த புதன் கிழமை இரவே, சென்னையிலிருந்து டில்லிக்கு வந்து சேர்ந்து விட்ட ராஜா, நேற்று முன்தினம் முழுக்க தனது வீட்டிலேயே ஓய்வில் இருந்தார்.

நேற்று காலை 9.45 மணியளவில் தனது வீட்டை விட்டுக் கிளம்பிய அவர், டில்லி சி.ஜி.ஓ., காம்ப்ளக்ஸ் வளாகத்தில் உள்ள சி.பி.ஐ., தலைமை அலுவலகத்திற்கு வந்தார்.ராஜா வீட்டில் இருந்து கிளம்பியதிலிருந்து சி.பி.ஐ., அலுவலகம் வந்து சேரும் வரை, மீடியாக்கள் அவரது காரை விடாமல் துரத்திச் சென்று கொண்டே இருந்தன. சி.பி.ஐ., அலுவலகத்திற்குள் 10.30 மணியளவில் ராஜா நுழைந்தார். சி.ஜி.ஓ., காம்ப்ளக்ஸ் என்பது மத்திய அரசின் முக்கிய அமைச்சகங்கள் மற்றும் அலுவலகங்கள் உள்ள இடம்.விசாரணைக்காக ராஜா வருவதையடுத்து குவிந்த மீடியாக்கள் காரணமாக, அப்பகுதியில் சற்று நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மொத்தம் நான்கு தளங்களைக் கொண்ட சி.பி.ஐ., அலுவலகத்தின் இரண்டாவது தளத்தில், ராஜாவிடம் விசாரணை நடத்தியதாகத் தெரிகிறது.


ராஜாவிடம் சி.பி.ஐ., அதிகாரிகள் நடத்திய விசாரணை குறித்து, தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:
ராஜாவிடம் என்னென்ன கேள்விகள் கேட்க வேண்டுமென்பதை சி.பி.ஐ., அதிகாரிகள் தயாரித்து வைத்திருந்தனர். அந்த வகையில், 100 கேள்விகள் வரை தயார் செய்து வைத்து, ராஜாவிடம் துருவித் துருவி விசாரித்தனர். லைசென்ஸ்கள் அளிப்பதில் நடந்த முறைகேடு, அவற்றின் மூலம் வந்த பணம் மற்றும் அந்த பணம் எங்கெல்லாம் சென்றுள்ளது என்ற முக்கிய பகுதிகளாக பிரிக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது.

ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ்களை விருப்பம் போல சில கம்பெனிகளுக்கு அளிக்க வேண்டியதற்கான காரணங்கள் குறித்தும், அதற்காக தேதி மாற்றம் செய்ததன் பின்னணி, ஒரே நாளில் மிகப்பெரிய தொகைக்கு வரைவோலை எடுக்கப்பட்டதன் மர்மம் குறித்தும் கேள்விகள் இருந்தன.


ராஜாவின் உறவினர்கள் வீட்டில் இருந்து எடுக்கப்பட்ட ஆவணங்கள் மற்றும் சென்னையில் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையின் போது கிடைக்கப் பெற்ற ஆவணங்களை ஆதாரமாக வைத்து பெரும்பாலான கேள்விகள் இருந்தன. தவிர, இடைத்தரகர் நிரா ராடியாவுடனான உறவு, ஸ்பெக்ட்ரம் விஷயத்தில் ராடியா மூலமாக நடத்தப்பட்ட பேரங்கள், இதில் சம்பந்தப்பட்ட பிற நபர்கள் குறித்தும் கேள்விகள் கேட்கப்பட்டன.வெளிநாடுகளுக்கு ஹவாலா மூலமாக பணம் பரிமாற்றம் செய்யப்பட்ட விதம் குறித்தும் கேட்கப்பட்டன. ராஜாவின் டில்லி வீட்டில் நடந்த சோதனையின் போது, ஸ்பெக்ட்ரம் குறித்த தொலைத்தொடர்புத் துறை ஆவணங்கள் சில கைப்பற்றப்பட்டன.

குறிப்பாக பிரதமருக்கும், ராஜாவுக்கும் இடையில் நடந்த கடிதப் போக்குவரத்தின் போது பிரதமர் தரப்பில் எழுதப்பட்டிருந்த அரசாங்க ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. ராஜினாமாவுக்கு பிறகு தான், ராஜா வீட்டில் இந்த சோதனை நடைபெற்றது. பதவியை ராஜினாமா செய்த பிறகும் கூட, அந்த முக்கியமான அரசு ஆவணங்களை வீட்டில் வைத்திருந்தது ஏன் என்பது குறித்தும் அதிகாரிகள் கேள்வி எழுப்பினர்.இவ்வாறு சி.பி.ஐ., வட்டாரங்கள் தெரிவித்தன.


அதிகாரிகள் தரப்பில் இவ்வாறு கேட்கப்பட்டிருந்தாலும், பெரும்பாலான கேள்விகளுக்கான பதில்களை ராஜா தயார் செய்து கொண்டு வந்திருந்ததாக தெரிகிறது. டில்லிக்கு கிளம்புவதற்கு முன், சென்னையில் அரசினர் தோட்டத்தில் தங்கியிருந்தபோதே இதற்கான பயிற்சி அளிக்கப்பட்டது. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சி.பி.ஐ., கிளப்பும் சிக்கலான கேள்விகளுக்கு என்ன மாதிரியான பதில்களை அளிக்க வேண்டுமென்பது குறித்து திறமை வாய்ந்த வக்கீல்களைக் கொண்ட குழு, ராஜாவுக்கு அறிவுரை வழங்கி அனுப்பியிருந்ததாகக் கூறப்படுகிறது.ராஜாவிடம் மதியத்திற்கும் மேலும் விசாரணை தொடர்ந்ததால், மதிய உணவு வெளியிலிருந்து வாங்கி வரப்பட்டு ராஜாவுக்கு வழங்கப்பட்டது.

சரி அதெல்லாம் இருக்கட்டும். ராசாவுக்கு உறுதுணையாக ஏன் டாக்டர் கூடவே வந்தார். ஏதோ படத்தில் வந்தது போல திடீர் என்று நெஞ்சு வலி என்று சொல்வார் போல. யாருக்கு தெரியும் இன்றைய விசாரணையில் தெரியும். பொறுத்திருந்து பாப்போம்.

நன்றி: தினமலர்.

உங்கள் கருத்துகளை எதிர்நோக்கி இங்கே கமெண்ட் கள் காத்திருக்கின்றன..

Thursday, December 23, 2010

எளிதாக மிக வேகமான வேகத்தில் டவுன்லோட் செய்ய...

வணக்கம் நண்பர்களே,

இன்று நான் கல்லூரிக்கு சென்று எனது வகுப்பில் அமர்ந்திருந்தேன். அப்போது ஆசிரியர் செமினார் எடுக்க வேண்டும் என்று கூறினார். அதனால் நாங்கள் அனைவரும் அவரவருக்குரிய தலைப்பை எடுத்து விட்டு பிறகு எங்கள் இடத்திற்கு வந்து உட்கார்ந்தோம். அப்போது எனது வகுப்பு நண்பர்களில் ஒருவர் ஒரு டாபிக் எடுத்தார்.

பிறகு அவர் ஒரு சாப்ட்வேர் பற்றி இடையில் கூறினார். அது எனக்கு சரியாக விளங்கவில்லை. அதனால் நான் வீட்டிற்கு வந்து இணையத்தில் சோதித்தபோதுதான் அந்த சாப்ட்வேர் இன் பயன் எனக்கு புரிந்தது.

பிறகு அதை நான் சோதித்த பொது நன்றாகவே இருந்தது. பிறகு நான் இப்படியும் ஒரு சாப்ட்வேர் இருக்கிறதா என்று மலைத்தேன்.

அதை தற்போது தங்களிடம் கூறுகிறேன். நீங்களும் அதை டவுன்லோட் செய்து பயன்பெறுங்கள். நான் மட்டும் பயன் அடைந்தால் அது நல்லதல்ல. நீங்கள் உபயோகித்து நன்றாக இருக்கிறது என்று கூறினால் எனக்கு மகிழ்ச்சிதான்.

அந்த சாப்ட்வேர் இன் பெயர் Download Accelerator Plus (DAP) ..
டவுன்லோட் லிங்க் கீழே கொடுத்து உள்ளேன்.

பொதுவாக எந்த ஒரு பைலையோ,சாப்ட்வேர், அல்லது படங்கள், பாடல்கள் அல்லது ஏதாவது ஒரு பைலை இணையத்தில் இருந்து டவுன்லோட் செய்தால் அவை உங்கள் இணைய இணைப்பின் வேகத்தை பொறுத்தே டவுன்லோட் ஆகும்.

ஆனால் இந்த சாப்ட்வேர் ஐ டவுன்லோட் செய்து உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்து விட்டால் போதும். பிறகு இந்த சாப்ட்வேர் ஆனது நீங்கள் எதை டவுன்லோட் செய்தாலும் இதன் மூலம் டவுன்லோட் ஆகும். இதன் மூலம் டவுன்லோட் ஆகும்போது இதன் வேகம் நான்கு மடங்கு அதிகரித்து மிக மிக வேகமாக டவுன்லோட் ஆகிறது.

அதாவது நார்மல் ஆகா உங்கள் கணினியில் பைல் ஆனது டவுன்லோட் ஆகும். அதே போல வேறு வேறு கலரில் அதே வேகத்துடன் நன்கு மடங்கு டவுன்லோட் ஆகிறது. அதாவது உங்கள் விரும்பும் பைல் ஆனது நாற்பது மடங்கு இணைய வேகத்தில் டவுன்லோட் ஆகும்போது இதன் மூலம் டவுன்லோட் செய்கையில் இணையத்தின் வேகம் நான்கு மடங்கு அதிகரித்து நூற்றி அறுபது மடங்கு வேகத்தில் டவுன்லோட் ஆகும். அவை டவுன்லோட் ஆகும் கலரை உங்களுக்கும் காண்பிக்கும். இதோ அவற்றின் படங்களை காணுங்கள்.

இது டவுன்லோட் செய்ய அனுமதி கேட்கும் பகுதி.



இங்கே நீங்கள் சேவ் என்னும் பொத்தனை அழுத்தியவுடன் பிறகு இவ்வாறு தோன்றும்.


மேல் வரும் படத்தில் நான் வட்டமிட்டு காட்டியுள்ளேன்.. அவை வேறு வேறு கலரில் ஒரே வேகத்தில் நான்கு மடங்கு வேகத்தில் டவுன்லோட் ஆகிறதை காணுங்கள்.

இவை வெறும் 10MB அளவு சைஸ் தான். இதை பயப்படாமல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். இவற்றினால் உங்கள் கணினி வேகம் குறையாது.

இதை டவுன்லோட் செய்ய இங்கே அழுத்தவும். கிளிக்

நீங்களும் இதை பயன்படுத்தி இதன் வேகத்தை கண்டு உங்கள் அனுபவத்தையும் இங்கே உள்ள கமெண்ட் இல் தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்.

முடிந்தால் ஒரு ஒட்டு போடுங்கள். நன்றி.

Wednesday, December 22, 2010

நண்பர்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மை...

இங்கே நான் கூறி இருப்பது நண்பர்களாகிய இருவருக்கும் இடையில் உள்ள ஆழமான நட்பை பற்றி ஒரு சில வரிகள் உங்களுக்காக.


நட்பு...

நண்பர்களாக பழக வேண்டிய கட்டாயம் இல்லை....

நட்புக்கு அது தேவையும் இல்லை...

எங்கோ பிறந்தோம் எங்கோ வளர்ந்தோம்

இங்கே சந்தித்துக்கொண்டோம்....

காலங்கள் போடும் கோலத்தில் நாமும் ஒரு புள்ளியாக..

நம்மை இணைக்கும் (நட்பு)பலமாக நாமே இருக்கிறோம்..

இறுதிவரை தொடருமா என்று நமக்கே தெரியாது...

இருந்தும் உறவாடினோம்...

பிரிந்தாலும் எங்கோ எப்போதோ சந்திதுகொள்வோம்...

அப்போ நலம் விசாரிக்க மட்டுமே நேரம் கிடைக்கும்..

அவரவர் பாதையில் அவரவர் பயணத்தை தொடருவோம்...

மனதில் ஒரு வலி மட்டும் இருக்கும்...ஏன் என்று தெரியாது...

இது நண்பர்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மை...



நீங்கள் உங்கள் கமெண்ட் ஐ இங்கே சொடுக்கவும்...

தம்பி இன்னொரு ஆப்பாயில் சொல்லேன்...!


பல நாளைக்கு அப்புறம் ஆபாயில் சாப்பிடலான்னு ஒரு ஆசை. இத நான் முன்னாடியே சொல்லிறேன். நான் எது ஆசபட்டாலும் அது எனக்கு உடனே கிடைக்காது அது ரொம்ப சாதாரண பொருளா இருந்தாலும் சரி. எங்க ஏரியால இருக்க ஒரு ஹோட்டலுக்கு போனேன்..

முன்னாடியே மாஸ்டருக்கு பக்கதுல முட்டையெல்லாம் இருக்கானு செக் பண்ணி கிட்டு உள்ள நுழைஞ்சேன்...அது ரொம்ப பெரிய ஹோட்டல் கிடையாது ஆனா அந்த ஏரியால ரொம்ப பிரபலம். உள்ளார நுழைஞ்ச உடனே ஒரு ஆம்பிலேட் , நாலு புரோட்டா, ரெண்டு சாப்பாடு பார்சல், இங்க கொஞ்சம் சாம்பார் ஊத்துங்க என பல திசையில இருந்து குரல்கள்.

ஒரு ஓரத்துல உக்கார இடம் கிடைச்சது. நாலு புரோட்டா ஒரு ஆபாயில் சொல்லிட்டு மதியம் கரண்டு இருக்காது என்ன படத்துக்கு போலன்னு யோசிச்சுக்கிட்டு இருக்கும் போது புரோட்டா வைக்கும் சத்தம் என் யோசனையா கலச்சிருச்சு.

புரோட்டவ சாப்பிட்டு முடிக்கும் முன்னரே ஆபாயில் வந்துருச்சு. எனக்கு கொடுத்த இலை ரொம்ப சின்னது. ஆபாயில வைக்க இடம் இல்லாததால புரோட்டவ ஓரமா நகர்துரதுக்கு முன்னாடியே அவசர அவசரமா தட்டுல இருக்குற ஆபாயில எடுத்து என் இலையில வச்சாரு ஒரு நாப்பது வயது மதிக்க தக்க சர்வர்(பாவம் அவருக்கு என்ன அவசரமோ).ஆபாயில் வைக்கும் போது லேசா உடைஞ்சிருச்சு.

அவரால ஒன்னும் சொல்ல முடியல திருப்பி எடுதுட்டும் போக முடியாது என்ன செய்யுறதுன்னு தெரியாம மாஸ்டர் ஒரு முட்ட பொரியல் ரெடியான்னு கேட்டுகிட்டே அந்த இடத்த விட்டு நகர்ந்துட்டாறு. எனக்கு சரியான கோவம்.அவரையே கோவமா பாக்குற மாதிரி ஒரு பில்ட் அப் கொடுத்தேன். சரி லேசாதான உடைஞ்சிருக்கு அப்படியே எடுத்து சாப்பிடலன்னு எடுக்குறேன் முழுசா உடைஞ்சிருச்சு அப்படியும் சாப்பிட்டரலானு ட்ரை பண்ணுறேன் முடியல...

எனக்கு எதிரே இருந்தவன் இதுதான் முதல் தடவயானு கேக்குற மாதிரு லேசா ஒரு சிரிப்பு சிரிச்சான்.இருக்குற கோவத்துக்கு அப்படியே ஒடஞ்ச ஆபாயில எடுத்து அவன் மூஞ்சியில அடிச்சுரலாம் போல தோனுச்சு..கோவத்த வெளிகாட்டமா லேசா சிரிச்சுட்டு அப்படியே இலைய மூடிட்டேன். கை கழுவும் போது எதிரே ஒரு கண்ணாடி. லேசா களஞ்ச முடியை சரி பண்ணிகிட்டு இருக்கும்போது என்னையும் அறியாம ஒரு சிரிப்பு..

ஆமாங்க நம்ப பிரெண்டுங்க கூட்டத்துல யாராவது அசிங்க பட்டா ஒரு சிரிப்பு வருமே அந்த சிரிப்புதான். அப்பதாங்க நான் எல்லாருக்கும் சொல்லுற ஒரு வார்த்த நினைவுக்கு வந்தது "வாழ்கையே ஒரு அட்ஜஸ்ட்மென்ட் தாங்க!" நாலு தடவ நகைச்சுவையாக எனக்குள்ளேயே சொல்லிகிட்டேன்! உண்மையிலே சொல்லுறேன் என்னிடம் இருந்த கோவம் எல்லா போயிருச்சு. பில்லு கொடுக்கும் போது சர்வர் நாலு புரோட்டா மாட்டும் தான் சொன்னாரு அப்புறம் நானே ஒரு ஆபாயில் சேர்த்து சொல்லி காசு கொடுத்துட்டு வெளியில வரும்போது எனக்குள்ள ஒரு சந்தோசம்..பெருசா எதையோ யாருக்கோ தியாகம் பண்ணுன மாதிரி...

நீங்களும் ட்ரை பண்ணுங்க உங்கள யாராவது கொவபடுத்தும் போதும், ஆசைப்பட்டது கிடைக்காத போதும் நாலு தடவ "வாழ்கையே ஒரு அட்ஜஸ்ட்மென்ட் தாங்க!" சொல்லிபாருங்க. நீங்க பெருசா எதையோ விட்டு கொடுத்த மாதிரி உங்களுக்கு ஒரு திருப்தி கிடைக்கும்.அப்படி கிடைக்கலேனா வேற வழியே இல்லை இன்னொரு ஆபாயில் சொல்லித்தான் ஆகணும்


Tuesday, December 14, 2010

காதலை ஏற்றுக் கொள்ளாவிட்டால்!!

ஒருத்தி: காதல் பாதை கரடு முரடு ஆனதுங்கிறதை நான் நம்பலைடி...!
மற்றவள்: ஏன்...?
ஒருத்தி: என் காதலர் என்னை நல்ல பாதைலே கூப்பிட்டு வந்திட்டார்...!

*******************************************************************************

ஒருவர்: என் பொண்ணு தபால் மூலம் இங்கிலீஷ் கத்துக்கிட்டு இருக்கா...!
மற்றவர்:
இதுவரை என்ன கத்துருக்கா...?
ஒருவர்:
ஐ லவ் யூ சொல்ற அளவுக்குக் கத்துருக்கா...!

*******************************************************************************

ஒருத்தி: என்னடி லவ் வெட்டர் எழுதி, அட்ரஸ் எழுதாத கவர் ஒன்னு கூட வைத்து அனுப்பி இருக்கிறாரே...!
மற்றவள்: நான் இந்தக் காதலை ஏற்றுக் கொள்ளாவிட்டால் என்னுடைய தோழி யாருக்காவது
அனுப்பச் சொல்லி இருக்கிறார்.

*******************************************************************************

உங்களுக்கு ஒண்ணுமே இல்லை
ஒருவர் தன் தபால்கார நண்பரைச் சந்தித்தார். நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்தித்ததால், நண்பர் தபால்காரரைப் பார்த்து, "உங்களைப் போல் வேலை பார்க்க வேண்டும்" என்றார்.


தபால்காரர், "ஏன்? என் வேலையில் அப்படி எதைக் கண்டு விட்டாய்?" என்றார்.


அதற்கு நண்பர், "சாலையில் பார்க்கும் எல்லோரும் உன்னைப் பார்த்து, எனக்கு ஏதாவது இருக்கா? என்று கேட்கிறார்கள். நீயும் அவர்களைப் பார்த்து "உங்களுக்கு ஒன்றும் இல்லை" என்கிறாய். அதைக் கேட்டு அவர்களும் கோபப்படுவதில்லை. மேலும் நல்லாப் பார்த்துச் சொல்லுங்க, எனக்கு ஏதாவது இருக்கா? என்று கேட்கிறாங்க. நீயும் "நல்லாத்தான் பார்த்துச் சொல்கிறேன். உங்களுக்கு ஒண்ணுமே இல்லை" என்கிறாய். அவர்களும் பேசாமல் சென்று விடுகிறார்கள். நான் யாரையாவது பார்த்து உங்களுக்கு ஒண்ணுமே இல்லை என்று சொல்ல முடியுமா? அதனால்தான் அப்படிச் சொன்னேன்" என்றார்.


*******************************************************************************

ரவி: படிப்பை முடிச்சிட்டீங்க மேல என்ன பண்ணப் போறீங்க?
ரகு: மேல ஒண்ணும் பண்ண முடியாது. பூமியிலேதான் எதாவது பண்ணனும்.

*******************************************************************************

ஹாய் மேல பாரு ஏரோப்ளேன் போகுது

uzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzz

மண்டு மண்டு மேல பார்க்க சொன்னா என்ன கம்ப்யூட்டர் யே பார்த்துட்டு இருக்க ப்ளைன் போய்டுச்சி..
நாளைக்கு வா ராக்கெட் பார்ப்போம்

*******************************************************************************


உங்களுக்கும் ஏதாவது தெரிஞ்சா கமெண்ட் ல போடுங்க.. வந்து தெரிஞ்சிக்கறேன் .... வரட்டா.

Monday, December 13, 2010

தற்கொலை செய்ய எளிய வழிமுறைகள்..!

நான் கண்ட சில வகையான புகைப்படங்களை தங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். இதன் மூலம் நீங்கள் எப்படியெல்லாம் சுலபமாக தற்கொலை செய்ய தெரிந்து கொள்ளுங்கள். தற்கொலை செய்வது உங்கள் விருப்பம். ஆனால் இதற்கு நிர்வாகம் பொறுப்பல்ல. நிர்வாகம் வேற யாரு நான்தாங்க...





















ஓகே இப்பொழுது எப்படி தற்கொலை செய்து கொள்ளலாம் என்று தீர்மானித்து கொண்டீர்களா... இருங்க இருங்க.. முதல்ல அதை பண்ணுறதுக்கு முன்னாடி ஒரு ஓட்டு அல்லது ஒரு கமெண்ட்லாவது எப்படி தற்கொலை செய்ய போறேன்னு சொல்லிட்டு போங்க. இது ஒரு சாட்சியா இருக்கும்ல...

Saturday, December 11, 2010

காக்கா ஏன் கறுப்பாச்சின்னு தெரியுமா??



ரொம்ப காலத்துக்கு முன்னாடி காக்கா வெள்ளையா இருந்துச்சுசாம். வெள்ளைன்னா அப்படி ஒரு வெள்ளை. அப்ப எல்லாம் காக்கா ரொம்ப தூரம் பறக்குமாம். சூரியன் வரைக்கும் பறந்து போகுமாம்.அப்படி இருந்த காக்கா எப்படி கருப்பாச்சு? ஊங் குட்டுங்க செல்றேன்..


தமிழ் நாட்ல இருக்குற திருச்சில இருக்குற எங்க அப்பாவுக்கு கடைசியா ஒரு அழகான பையன் பிறந்தானாம்(அதாங்க அது நான்தான்). கொள்ளை அழகு. குழந்தையில இருந்து வீட்டை விட்டே வெளிய வர மாட்டேனாம். நல்ல பெரியவனாகி விபரம் தெரிஞ்ச வயசுல வெளிய விளையாட வந்தேனாம். அவன் பேரு ரவி குமார்(அதாங்க என்னோட பெயர்). நான் விளையாடறத பார்த்த சூரியனுக்கு என்னை ரொம்ப பிடிச்சு போச்சாம். எனக்கும் சூரியனை பிடிச்சிடுச்சாம். தினமும் விடியற்காலையில எழுந்ததில இருந்து சூரியன் கிட்ட தான் பேசிட்டு இருப்பேனாம். சூரியனும் பூமிய சுத்திக்கிட்டே என்கிட்ட பேசிட்டு இருக்குமாம். நாங்க அப்போ ரொம்ப நல்ல நண்பர்களா மாறிட்டோமாம். ஒரு நாள் சூரியன் எனக்கு பரிசு கொடுக்க நினைச்சுதாம்.


சூரியன் கிட்ட வரைக்கும் காக்கா பறந்துச்சு இல்லையா? அதனால சூரியன் ஒரு காக்காவ கூப்பிட்டு பையில மோதிரம், பேன்ட், சட்டை,வாசனை திரவியங்கள், முத்து மாலை, கடிகாரம் எல்லாம் கொடுத்து ரவிகிட்ட கொடுத்துடுன்னு சொல்லிட்டு மறஞ்சி போச்சாம். சாய்ந்திரம் ஆகிடுச்சுன்னா சூரியன் தூங்க போயிடும் இல்லையா? காக்கா அந்த பைய தூக்கிகிட்டு நான் இருந்த இடத்தை நோக்கி பறந்து வந்துச்சாம்.


வழியில திருமண ஊர்வலம் போயிட்டு இருந்திருக்கு. நிறைய பழங்கள்,உணவுப்பொருட்கள் எடுத்துட்டு போனாங்க போல.காக்காவுக்கு கொஞ்ச உணவாச்சும் கிடைக்குமேன்னு ஆசை. அரண்மனைக்கு போயிட்டு வந்தா தாமதமாகி போகும். சரின்னு அந்த பைய ஒரு மரத்தில மாட்டிட்டு திருமண ஊர்வலத்துக்கு போச்சாம். மரத்துக்கு கீழ இருந்த ஒருத்தன் இந்த காக்கா பைய வெச்சுட்டு போனதை பாத்துகிட்டே இருந்தானாம். நல்ல வாசனை வந்தது. அதனால மரத்தில ஏறி பைய திறந்து பாத்து இருக்கான். பைக்கு உள்ள சூரியன் கொடுத்து அனுப்பின எல்லா பொருளையும் பாத்து சொக்கி போயிட்டானாம்.உடனே எல்லாத்தையும் எடுத்துகிட்டு மரத்தில இருந்த குப்பை எல்லாம் பையில எடுத்து போட்டுட்டு கிளம்பிட்டான்.


காக்கா நல்லா சாப்பிட்டு ஏப்பம் விட்டுக்கிட்டே வந்துச்சாம். பைய எடுத்துகிட்டு நான் இருக்குற இடத்தை நோக்கி வந்துடுச்சாம். அங்க என்கிட்டே சூரியன் கொடுத்த பைய கொடுத்துச்சாம். திறந்து பார்த்த எனக்கு அதிர்ச்சி. ச்ச..இந்த சூரியன் ஏன் இப்படி பண்ணிடுச்சு. என் மேல அன்பே இல்ல. எல்லாம் நடிப்பு. அவன் கூட இனிமேல் டூன்னு சொல்லிட்டு பைய விசி எரிஞ்சிட்டேணாம்.


மறுநாள் காலை,சந்தோஷமா என்னை பார்க்கலாம்ன்னு வந்த சூரியனுக்கு தூக்கி வாரி போட்டுச்சாம். அந்த பை கீழ விழுந்திருந்தத பாத்தே ஏதோ தப்பு நடந்திருக்குதுன்னு புரிஞ்சிடுச்சாம்.பயங்கர கோபம் வந்துடுச்சாம். காக்காவை பார்த்து கோவமா பாத்த உடனே வெள்ளையா இருந்த காக்கா கறுப்பா மாறிடுச்சாம். அதனால தான் சூரியன் கிட்டகூட பறக்க முடியாம போச்சாம். கிட்ட இருந்த சூரியனும் பூமி மேல கோபம் வந்து தூரமா போயிடுச்சாம்.

அப்படின்னு எங்க அம்மா என்கிட்ட சொன்னங்க.


இப்ப தெரிஞ்சதா காக்கா ஏன் காக்கா கறுப்பாச்சுன்னு?

இதுமாதிரி ஏதாவது நடந்துச்சின்னா எனக்கு கமெண்ட் சொல்லி அனுப்புங்க தெரிஞ்சிக்கறேன். அப்படியே ஒரு ஒட்டு போட்டு போங்க. ரொம்ப புண்ணியமா போகும். உங்களுக்கு இல்ல. அந்த காக்காவுக்கு..


Friday, December 10, 2010

புகை பிடிக்காதீர்கள்...

நான் சந்தித்த ஒரு நிகழ்ச்சியைதங்களிடம் பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு. படித்துவிட்டு விளக்கத்தை தெரிந்து கொள்ளவும்..

ஒரு புகை(த்த)ச்சல் பயணம் .....



புகைத்தப்படி கிளம்பியது ....
எங்களூர் பேருந்து ....
நிறை மாதமாய்
எங்களை சுமந்தபடி......

டிரைவரும்
தன் பங்குக்கு
புகை விட்ட படி ......

கவனம் தேவை.....
வளைவுகளில் முந்தாதீர்கள் .....
அறிக்கைகளை பார்த்ததும் ....
உற்சாகத்தோடு வேகம் எடுக்கிறது
எங்கள் வண்டி ........

அனாயசமாய் வளைகிறது
ஸ்டீரிங் .......
ஒரு கையில் .......

மற்றொரு கையோ .....
வாயிற்கும் கையிக்குமான
போராட்டத்தில் ......

உயிர் விட்டது
கையில் இருந்த பீடி துண்டு .....
இப்போதோ இரு கையும்
இந்த வேலையில் இறங்க ....
உயிர் பயத்தில் நாங்கள் .....

இறங்கும் போதோ
உயிர் பிழைத்த
உற்சாகம் ...


"புகை பிடிக்காதீர்கள்"
படிகளில் எழுதி இருப்பது
பயணிகளுக்கு தான் போல ......

தங்களின்
மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கபடுகின்றன... கருத்துக்களை மறக்காமல் சொல்லிவிட்டு செல்லவும்...

Thursday, December 9, 2010

அடிமையாக்க ஆசைப்படாதே..........

நான் படித்து என் மனதில் நின்ற ஒரு சிறு நினைவை தங்களிடம் பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு. நீங்களும் படித்து தெரிந்து கொள்ளுங்கள்....


ஜார்ஜ் வாஷிங்டன் அமெரிக்காவின் முதல் ஜனாதிபதி. அவர் தலைமையில் அமெரிக்காவில் போர் நடந்து கொண்டிருந்த சமயம். பத்துப் பதினைந்து போர் வீரர்கள் ஓர் உத்திரத்தைப் படாத பாடுபட்டு நகர்த்திக் கொண்டிருந்தார்கள். அவர்கள் குழுவின் தலைவன் குதிரையில் அமர்ந்தபடி அவர்களை அதட்டி உருட்டி வேலை வாங்கிக் கொண்டிருந்தான். அவர்கள் ஒரு குறிப்பிட்ட உயரத்திற்கு அந்த உத்திரத்தை நகர்த்த முடியாதபடி அதிகச் சிரமப்பட்டார்கள். வேகமாக அதட்டினான் அந்தக் குழுவின் தலைவன்.

அப்போது அங்கு குதிரையில் வந்த வீரன் ஒருவன் தலைவனைப் பார்த்து, “அவர்கள் இவ்வளவு கஷ்டப்படுகிறார்களே… நீயும் அவர்களோடு சோர்ந்து அதை நகர்த்தக் கூடாதா?” என்று கேட்டான். குழுத்தலைவன், “நான் யார் தெரியுமா? அவர்களின் தலைவன்… அவர்களோடு சமமாக வேலை செய்ய முடியுமா?” என்று உறுமினான்.

குதிரையில் வந்தவன் இறங்கி, வீரர்களுக்கு உதவி, உத்தரத்தை நகர்த்தி அதன் இடத்தில் வைத்து விட்டுப் பிறகு தனது குதிரையில் ஏறி அமர்ந்தான். அந்தக் குழுவின் தலைவனைப் பார்த்து, “இனி இப்படிக் கடினமாக வேலை ஏதாவது இருந்தால் எனக்குச் சொல்லி அனுப்புங்கள். அவசியம் நான் வந்து உதவுகிறேன்” என்று உரக்கச் சொன்னான்.

நீ யார்? உனக்கு எப்படிச் சொல்லி அனுப்புவது? உன் இருப்பிடம் எது? என்று அலட்சியமாகக் குழுத்தலைவன் கேட்டான். “நானா… ஜார்ஜ் வாஷிங்டன். உங்களின் தலைமைத் தளபதி” என்று அழுத்தமாகக் கூறி விட்டுக் குதிரையைத் தூண்டிச் சிட்டாய் பறந்தார் ஜார்ஜ் வாஷிங்டன்.

தனியாய் இரு!
தலைவனாய் இரு!!
அடிமையாகாதே! அடிமையாக்காதே!!

மறக்காம உங்க கருத்தை சொல்லிட்டு போங்க..

காதல் VS நட்பு

எனக்கு தோன்றும் சில வரிகளை தங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். நீங்களும் படித்து விட்டு உங்கள் கவிதையை கமெண்ட் இல் தெரிவியுங்கள்.

காதல் VS நட்பு
என்னிடம் இருந்த
ஒரு இதயத்தையும்
பறித்து கொண்டது காதல்!
எனக்காக
ஒரு இதயத்தையே
ஒட்டுு நட்பு!
கஷ்டங்களில்
யோசித்தது காதல்!
யோசிக்காமல்
கை கொடுத்தது இங்கே!
துயரங்களை நோக்கி
இழுத்துச்சென்றது காதல்!
உயரங்ளை நோக்கி
அழைத்துச் சென்றது நட்பு!
கட்டுப்பாடுகளை
தளர்த்த முயற்சித்தது காதல்!
கடமைகளை
உணர்தத முயற்சித்தது நட்பு!
என் இலட்சியங்களை
கனவாக்கியது காதல்!
என் கனவுகளை
இலட்சியமாக்கியது நட்பு!
காயம் தரும்
காதல் வேண்டாம்!
நன்மை தரும்
நட்பைக்கொடு

இங்கே உங்களது படைப்புக்காக காத்துக் கொண்டிருக்கும் கமெண்ட்

Wednesday, December 8, 2010

எனக்குப் பெயர் ‘Soft’ware engineer

ஹாய் நண்பர்களே, நான் சாப்ட்வேர் இஞ்சினியர் ஆகா இருந்தால் நான் வேலையில் இருக்கும்போது எனக்கு தோன்றும் சில வரிகள் உங்களுக்காக....

திங்கள் காலை
எட்டுமணிக்கு தொடங்கும்
கணிப்பொறியுடனான
எனது யுத்தம்..


மதியம் உணவு
இடைவேளை
வருவதற்குள் Error, Bug
என்று எதிரிகள்
பலரை வீழ்த்தவேண்டியது
என் பணியாக இருக்கும்..


உணவை முடித்து விட்டு
திரும்பினால்,
சொல்லாமல் வந்துவிடுகிற
விருந்தாழியாய் PM- ன்
இமெயில் கண்சிமிட்டும்,
அடுத்த யுத்தத்திற்கு என்னை
தயாராக சொல்லி..

இடையில் அவ்வப்போது
காதலியின் துப்பட்டாவாக
மனதை வருடிப்போகும் சில
fwd இமெயில்கள்..


மாலை நான்கு மணிக்கு
Discussion முடிந்து
என் இடம் வரும்போது
மனம் ஏங்கும்
வெள்ளிக்கிழமைக்காக..
கோவில் செல்ல அல்ல,
வாரத்தின் கடைசி
வேலைநாள் என்பதால்..


உயிர் வலிக்க
‘Hard’work செய்யும்
எனக்குப் பெயர்
‘Soft’ware engineer


இப்போது சொல்லுங்கள் எனக்கு பெயர் சாப்ட்வேர் இஞ்சினியர் தானே.....
மறக்காம ஒரு ஓட்டு போட்டுட்டு போங்க...

Monday, December 6, 2010

திட்டம் போட்டுத் திருடுற கூட்டம்....

இங்கே இருக்கும் பதிவு எனக்கு மெயிலில் வந்தது. அது பார்க்க நன்றாக இருக்கிறது. அதனால் அதை தங்களிடம் பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு.
இன்றைய ஆட்சியில்

இலவச காப்பீட்டு திட்டம்
இலவச வண்ணத் தொலைக்காட்சி திட்டம்
இலவச எரிவாயு இணைப்பு திட்டம்
சேது சமுத்திர திட்டம்
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு திட்டம்
டெல்லி காமன்வெல்த் திட்டம்
நமக்கு நாமே திட்டம்
கார்கில் வீடு திட்டம்
இலவச கான்க்ரீட் திட்டம்
இலவச பிரியாணி
இலவச குவாட்டர்

ஆகா மொத்தம் எல்லாம் இலவசம்

குடும்பமே தமிழ்நாட்ட ஆளுது.
----

திட்டம் போட்டுத் திருடுற கூட்டம்
திருடிக்கொண்டே இருக்குது-அதைச்
சட்டம் போட்டுத் தடுக்கிற கூட்டம்
தடுத்துக் கொண்டே இருக்குது
திருடராய் பார்த்துத் திருந்தாவிட்டால்
திருட்டை ஒழிக்க முடியாது


ஹலோ ஹலோ இருங்க வந்தீங்க படிச்சீங்க அப்புறம் பாடுனீங்க. நீங்க பாட்டுக்கு போறீங்க ஏந்தவது சொல்லிட்டு அப்படியே கமெண்ட் போட்டுட்டு போங்க.

ஹய்யோ 64 கோடியா ??

ஹாய்,

இன்று என்ன பதிவு என்றால் சமீபத்தில் நடந்த ராசாவின் ஊழல் சம்பந்தமான ஒரு புகைப்படத்தை இங்கே இணைத்துள்ளேன். இந்த புகைப்படம் எனது அண்ணன் எனக்கு மெயிலில் அனுப்பினார். அதை தங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.


படம் தெரியவில்லை என்றால் படத்தின் மீது கிளிக் செய்து பாருங்கள்.

இந்த புகைப்படத்தில் கலைஞர் முதலில் அறுபத்தி நான்கு கோடியா? என்று சொல்லிவிட்டு ஊழல் ஊழல் என்று கத்தி விட்டு ஓரத்தில் யாருக்கும் தெரியாமல் Rs. 1,76,000 கோடியை அமுக்கிக்கொண்டு ஓடுகிறார் பாருங்கள்.


இவை நன்றாக இருந்தால் உங்க கமெண்ட் சொல்லுங்க. அதோட ஒரு ஓட்டு போட்டுட்டு போங்க.. நன்றி....

Sunday, December 5, 2010

குழந்தை பிறக்க போகிறதா???

ஹாய் நண்பர்களே,

நேற்று நான் திருவண்ணாமலை சென்றதால் என்னால் பதிவு எழுத நேரம் போதவில்லை. ஏனென்றால் நேற்று குபேரலிங்கத்திற்கு விஷேஷமான நாள். அதனால் சென்றிருந்தேன்.

சரி இப்போது என்ன பதிவு என்ன எழுதி இருக்கிறேன் என்றால், உங்களுக்கு குழந்தை பிறக்க போகிறதா? அல்லது பெண்கள் கருவுற்றிருக்கீர்களா?

பிறக்கபோகும் குழந்தையை நினைத்து என்னன்னெவோ நிறைய கனவுகளுடன் தற்போது இருப்பீர்கள். அவர்களுக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று யோசித்துக்கொண்டிருக்கீர்களா? கவலையே வேண்டாம். நான் கொடுத்திருக்கும் இந்த இரண்டு லிங்க் இல் சென்று பாருங்கள். கீழே உள்ளது லிங்க்.

இந்த லிங்க் இல் உள்ள கோப்பில் அழகான நிறைய தமிழ் பெயர்கள் உள்ளன மற்றும் அது மட்டுமல்லாமல் ஆங்கில பெயர்களும் கொடுத்துள்ளேன். அதோடு அதற்கு விளக்கங்களும் உள்ளன.

உதாரணத்திற்கு அபிநயா என்றல் அதற்கான விளக்கம் பயமில்லாதவர் என்று அர்த்தம்.

நீங்கள் உங்கள் குழந்தைக்கு இப்போதே பெயரை செலக்ட் செய்து விடுங்கள். பின்பு அதன் தொல்லை இருக்காது. சிலர் பெயரை செலக்ட் செய்ய தெரியாமல் தடுமாற வேண்டி இருக்கும். இது உங்களுக்கு ஒரு சுலபமான வழியாகும். உங்கள் குழந்தைக்கு நல்ல தமிழ் பெயரை செய்து விடுங்க...

இனி உங்களுக்கு பிறக்கும் குழந்தை ஆண் குழந்தையாக இருந்தாலும் சரி பெண் குழந்தையாக இருந்தாலும் சரி. இனிமேல் உங்கள் குழந்தைக்கு பெயர் சூட்டும் கவலை இனி எப்போதும் இருக்காது.


click here

இருங்க இருங்க படிச்சீங்களா பதிவை. அப்படியே ஒரு வோட்டும் மற்றும் உங்களோட கமெண்ட் சொல்லிட்டு போங்க.

Friday, December 3, 2010

கருணாநிதி சொத்து கணக்கு காட்டுகிறார்.



திருவாரூரில் இருந்து திருட்டு ரயில் மூலம் சென்னைக்கு வந்ததாக கருணாநிதியே சொல்லி இருக்கிறார். இது குறித்து 'வனவாசம்' புத்தகத்தின் முதல் பதிப்பில் கருணாநிதியின் நெருங்கிய நண்பராக இருந்த கவியரசர் கண்ணதாசன் தெளிவாக குறிப்பிட்டு இருக்கிறார். உண்மையைச் சொல்லப் போனால் கோயில் பிரசாதத்தை சாப்பிட்டு வளர்ந்தவர் கருணாநிதி. கூட்டங்களில் பேச ஆரம்பித்த போது இவருக்குக் கிடைத்த சம்பளம் ஒரு சிங்கிள் டீயும், இரண்டு வடையும் தான்.

இப்படிப்பட்ட கருணாநிதி இப்பொழுது திடீரென்று 'கணக்கு காட்டுகிறேன்' என்ற தலைப்பில், அவருடைய குடும்பம் ஓரளவு வசதியுள்ள குடும்பம் என்று ஒரு புதிய தகவலை தற்போது வெளியிட்டு இருக்கிறார்.16.1.1946 அன்று கமலாம்பிகா கூட்டுறவு நகர வங்கியில் பங்காளியாக சேர விண்ணப்பித்த போது, அந்த விண்ணப்பப் படிவத்தில் தனக்கு நஞ்சை, புஞ்சை நிலங்கள் ஏதுமில்லை என்றும், வீட்டு மனை ஏதுமில்லை என்றும் தெரிவித்து, தன் வசம் 'நகை, பாத்திரம் வகையறா சுமார் ரூ. 1,000' இருக்கிறது என்று கருணாநிதியே கைப்பட எழுதி இருக்கிறார். கவியரசர் கண்ணதாசனும் சென்னையில் இருந்து சேலத்திற்கு ரயிலில் பயணம் செய்த போது, உணவு வாங்கி சாப்பிட பணமில்லாத நிலை இருந்த போது, 'தனக்கு பசி தாங்கவில்லை' என்று கவியரசர் கண்ணதாசன் கருணாநிதியிடம் சொன்னதாகவும், அதற்கு பதில் அளித்த கருணாநிதி, அருகில் இருந்த பழக் கூடையை காட்டி 'திருடலாமா?' என்று கேட்டதாகவும், கவியரசர் கண்ணதாசன் தன்னுடைய 'வனவாசம்' புத்தகத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.

கருணாநிதி தன்னுடைய அறிக்கையில் 1949-ம் ஆண்டே மாத ஊதியமாக 500 ரூபாய் சம்பாதித்து இருக்கிறார். 'மணமகள்' திரைப்படத்திற்கு கதை வசனம் எழுதி 10 ஆயிரம் ரூபாய் பெற்றதாகவும், 'இருவர் உள்ளம்' திரைப்படத்திற்காக 20 ஆயிரம் ரூபாயை பெற்றதாகவும் அவரே இருக்கிறார். அப்படி என்றால் கருணாநிதி எந்த ஆண்டிலிருந்து வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்து கொண்டு வருகிறார்?

முதன் முதலில் வருமான வரி தாக்கல் செய்த போது அவருடைய ஆண்டு வருமானம் என்ன? அப்போது எவ்வளவு வருமான வரி கட்டினார்? ஆண்டுதோறும் செலுத்திய வருமான வரி எவ்வளவு? என்பதை முதலில் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். இந்தியாவில் உள்ள அனைத்து மாநில முதல்வர்களுடைய வீடுகளை விட வசதி குறைவான வீட்டில் எளிமையாக வாழ்ந்து வருவதாகவும், அரசு நிலத்தை ஆக்கிரமிக்கவில்லை என்றும் கருணாநிதி ஒரு அறிக்கையில் கூறி இருக்கிறார்.

கருணாநிதிக்கு கோபாலபுரத்திலே ஒரு வீடு;

சி.ஐ.டி. காலனியில் ஒரு பங்களா;

கருணாநிதியின் மகன் மு.க. ஸ்டாலினுக்கு வேளச்சேரியில் ஒரு பங்களா;

சென்னை போட் கிளப்பில் ஒரு மாளிகை;

பேரன் கலாநிதி மாறனுக்கு சென்னை போட் கிளப்பில் பிரம்மாண்டமான மாளிகை;

பேரன் தயாநிதி மாறனுக்கு போட் கிளப்பில் மிகப் பெரிய பங்களா;

மகள் செல்விக்கு பெங்களூரில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் மாளிகைகள், பண்ணை வீடுகள்;

தென் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் 25-க்கும் மேற்பட்ட
தொலைக்காட்சி சேனல்கள்; நாளிதழ்கள்;

வார இதழ்கள், பேரன் பெயரில் ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம், சன் ஏர்லைன்ஸ்;

மு.க. அழகிரிக்கு மதுரையில் பல ஏக்கர் நிலங்கள், பண்ணை வீடுகள்;

வர்த்தக பலமாடி கட்டடங்கள்;

பொறியியல் கல்லூரி;

இது மட்டுமன்றி மு.க. தமிழரசு, மு.க. முத்து, கனிமொழி என அனைவரும் மாடமாளிகைகளில் வாழ்ந்து கொண்டு மக்கள் சொத்தை கொள்ளையடித்துக் கொண்டிருக்கின்றனர். ஏனென்றால் தமிழ் நாட்டு மக்கள் ஏமாளிகள் போல!.. பேரன்கள், பேத்திகள் உட்பட, கருணாநிதி குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் தனித் தனி ஆடம்பர மாளிகைகளும் ஏராளமான அசையா சொத்துக்களும் உள்ளன.

கோபாலபுரத்தின் பின் பகுதியில் சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான 700 சதுர அடி நிலத்தை கருணாநிதி ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார். டாடா நிறுவனம் கருணாநிதியின் துணைவிக்கு ரூ. 300 கோடி மதிப்பில் மிகப் பெரிய மாளிகை கட்டித் தர இருப்பதாக நீரா ராடியா – ராசாத்தி அவர்களின் உரையாடல் மூலம் தெரிய வருகிறது.

ரூ. 600 கோடி செல்வி மற்றும் ஸ்டாலின் மூலமாக தயாளு பெற்றுக் கொண்டுதான் தயாநிதி மாறனுக்கு மந்திரி பதவியை கொடுத்ததாக அதே நீரா ராடியா உரையாடல்கள் தெரிவிக்கின்றன. உண்மை நிலை இவ்வாறிருக்க, கருணாநிதி தன்னை யோக்கியர் போல சித்தரித்துக் கொண்டிருப்பது தமிழ் மக்களிடம் விளையாடுகிறார்.

கருணாநிதி தன்னுடைய அறிக்கையில், 2005 -ம் ஆண்டு அக்டோபர் மாதம், சன் தொலைக்காட்சி நிறுவனத்தின் சார்பில் ரூ. 100 கோடி தரப்பட்டதாகவும், அதில் ரூ. 22 கோடி அளவிற்கு வருமான வரி கட்டியதாகவும் கூறி இருக்கிறார்.

இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி கருணாநிதியின் ஆட்சி. வீராணம் ஊழல், பூச்சிகொல்லி மருந்து ஊழல், மஸ்டர் ரோல் ஊழல், மணல் கொள்ளை, ரேஷன் பொருட்கள் கடத்தல், கள்ள லாட்டரி சீட்டு விற்பனை என அனைத்திற்கும் மூலக் காரணமானவர் கருணாநிதி. விஞ்ஞானப் பூர்வமாக ஊழல் செய்வதில் வல்லவர் என்று சர்க்காரியா கமிஷனிடம் சான்றிதழ் பெற்றவர். இப்படி இருக்கும் கருணாநிதி, லஞ்சம், ஊழல் ஆகியவற்றைப் பொறுத்தவரை தான் ஒரு நெருப்பு என்று கூறியிருப்பது வேடிக்கையாக உள்ளது. பஞ்சுப் பொதியிலே தீப்பொறி பட்டால் எப்படி தீப்பிடித்துக் கொள்ளுமோ அது போல, தன்னிடம் உள்ள ஊழலை உலகம் முழுவதும் பரப்புவதில் தான் ஒரு நெருப்பு என்ற அர்த்தத்தில் கூறி இருக்கிறார் போலும்! பொருளாதாரம், விஞ்ஞானம், இலக்கியம், சமாதானம் போன்றவற்றிற்காக நோபல் பரிசு கொடுக்கப்படுகிறது. சிறந்த நகைச்சுவைக்கு நோபல் பரிசு கொடுக்கப்பட்டால், அந்தப் பரிசுக்குத் தகுதியானவர் கருணாநிதி தான்.

இது மட்டுமல்லாமல் இவராகவே ஒரு கூட்டம் போட்டு அவருக்கு அவராகவே பட்டம் கொடுத்து இருக்கலாம் என்று எனக்கு தோன்றுகிறது. கணக்கு என்று சொல்லும்போதெல்லாம் என் வீட்டில் பாட கணக்குதான் கேட்டு இருக்கிறேன். ஆனால் இங்கே இவர் கணக்கு என்றால் கோடியைத்தான் காட்டுகிறார். வாழ்க தி.மு.க. வளர்க இவர்களை கோடி.

நன்றி தினமணி

கருத்துக்கள் இருந்தால் கூறுங்களேன்.


Thursday, December 2, 2010

அடிதடி அண்ணன் மு.க.அழகிரி L.K.G,U.K.G,SSLC,HSC,BA அவரின் பயோடேட்டா




மத்திய
ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மு..அழகிரி, முதல் அமைச்சர் திரு மு.கருணாநிதி - தயாளுஅம்மாளின் மூத்த மகன் ஆவார். சொந்த ஊரான திருக்குவளையில் 30-1-1950-ல் பிறந்தார்.


இவருடைய சகோதரர்கள் துணை முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின், மு.க.தமிழரசு, தங்கை செல்வி. மு.க. அழகிரி, பள்ளிப்படிப்பை உள்ளூரிலேயே படித்தார். பி.ஏ.வரலாறு பட்டப்படிப்பை சென்னை பிரசிடென்சி கல்லூரியில் முடித்தார்.


அழகிரியின் மனைவி பெயர் காந்தி இவர் தாழ்ந்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர். (காதல் திருமணமா என்று கேட்க கூடாது. ஏனென்றால் எனக்கு அது தெரியாது) இவர்களுக்கு கவிதாயினி என்கிற கயல்விழி, அஞ்சுகச்செல்வி ஆகிய 2 மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. துரை என்கிற தயாநிதி எனும் மகன் இருக்கிறார். துரைக்கு தற்போது திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.


மு.க.அழகிரி 1980-ம் ஆண்டு முரசொலி பத்திரிகையை கவனித்துக்கொள்வதற்காக, சென்னையில் இருந்து மதுரைக்கு வந்தார் (வரும்போது உருட்டுகட்டையும் கொண்டு வந்து இருப்பாரோ? ). அது முதல் மதுரையிலேயே குடும்பத்துடன் வசித்து வருகிறார். மதுரை சத்தியசாய் நகரில் அவரது வீடு உள்ளது.


முன்னாள் தி.மு.க. அமைச்சர் தா.கிருட்டிணன், 2003 மே மாதம் 20ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில், மு.க.அழகிரி, மதுரை துணை மேயர் மன்னன், எஸ்ஸார் கோபி, சிவா, கார்த்தி, ஈஸ்வரன், மணி, பாலகுரு, பாண்டி, சீனு, ராஜா, முபாரக், இப்ராஹிம் சுல்தான் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். முக்கிய சாட்சிகளான தா.கிருட்டிணனின் தம்பி ராமையா, அவரது மனைவி பத்மாவதி, கார் டிரைவர் மதியரசன், கிருட்டிணனின் தம்பி மகன் நெடுஞ்செழியன், வீரபாண்டி, ஆதிகேசவன், துரைராஜ் ஆகியோர் "கொலை குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது. கொலையாளிகளையும் தெரியாது. போலீசார் எழுதி கொடுத்ததில் கையெழுத்து போட்டோம்' என்று, சாட்சியம் அளித்தனர். குற்றம் சாட்டப்பட்ட 13 பேர் மீதான குற்றம் நிரூபிக்கப்படவில்லை எனக்கூறி மு.க.அழகிரி உள்ளிட்ட 13 பேரையும் 8-3-2008ம் தேதி சித்தூர் நீதிமன்றம் விடுவித்தது. எப்படியோ தப்பிச்சிடுறாரு..

தென் மண்டல தி.மு.க. அமைப்புச் செயலாளராக இருக்கிறார். கடந்த பாராளுமன்ற தேர்தலில் முதல் முறையாக மதுரை பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்டார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளரான மறைந்த பி.மோகனை விட ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 985 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். அதைத் தொடர்ந்து மத்திய மந்திரி பொறுப்பு ஏற்று பணியாற்றி வருகிறார்.


இது மட்டுமல்லாமல் இவருடைய பெயரில் ஒரு வெப்சைட் உள்ளது.. பார்க்க வேண்டுமா இங்கே செல்லுங்கள்.

அண்ணன் அடிதடி மு..அழகிரி L.K.G,U.K.G,SSLC,HSC,BA அவரின் முழு பயோடேட்டா.
காணுங்கள்.

பெயர்: மு.க. அழகிரி

நாடாளுமன்ற உறுப்பினர்

தொகுதி: மதுரை

அவை: மக்களவை

தேர்தல்: 2009 இந்திய பொது தேர்தல்

இருப்பிடம்: மதுரை

இந்திய அமைச்சரவை

அமைச்சர்: உரம் மற்றும் இரசயானத் துறை அமைச்சர்

அரசியல் கட்சி: தி.மு.க.

கட்சி பொறுப்பு: தென் மண்டல அமைப்பு செயலாளர்.

பிறந்தது: ஜனவரி 30,1950 சென்னை, தமிழ்நாடு.

வாழ்க்கை துணைவி: காந்தி

பிள்ளைகள்: தயாநிதி, அஞ்சு, வானிலா...

---------------------------------------------------------------------------------------------


தற்போதைக்கு எனக்கு இவ்ளோதான் தெரியும். தெரிந்தால் மற்றதையும் சொல்கிறேன்.. இவரின் சொத்து மதிப்பு தெரிந்தால் கண்டிப்பாக பதிவுகளில் சொல்கிறேன்.

கருத்துக்கள் இருந்தால் சொல்லி விட்டு செல்லுங்களேன்.

Wednesday, December 1, 2010

அவருக்கு எப்போ டிக்கட்!!

சினிமாவில் வசனம் எழுதி தன் ஆரம்பகாலத்தை துவங்கிய திரு மு.க.மிகவும் சாதுர்யம் மிக்கவர்.
நான்கு நியதிகளை அவர் நன்கு புரிந்துகொண்டார்.


1.தமிழ் நாட்டில் புகைந்து கொண்டிருந்த பார்ப்பன துவேஷம்.இதை திரு.ஈ.வே.ரா பயன் படுத்த
தொடங்கிய தருணம்.இதில் உள்ள potential ஐ, இதை போர்வையாக பயன் படுத்தினால்,இமயமலையை
கூட மறைத்து விடலாம் எனும் உண்மையை மு.க புரிந்துகொண்டார்.


2.செய்வதை விட பேசுவதே அதிக பலன் தரும் எனவும் புரிந்துகொண்டார்.எனவே நல்லதையே பேசி கெடுதலையே செய்தால் யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள் எனவும் அறிந்து கொண்டார்.


3 மனித மனதில் அன்பை வளர்ப்பதை விட துவேஷத்தை வளர்ப்பது லகுவானது; பிரித்தாளுவது மிகவும்
சிறந்த முறை என்பதை பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடமிருந்து கற்று கொண்டார்.


4. பணத்தால் வாங்க முடியாதது இவ்வுலகில் எதுவும் இல்லை என்பதையும் புரிந்து கொண்டார்.


இவ்வளவுக்கும் மேல் கடவுள் அருள் அவருக்கு பரிபூரணமாக இருந்தது.

1.அண்ணாவின் அகால மறைவு

2. இந்திரா காங்கிரசின் தோற்றம்

3.காமராஜின் மறைவு

4.MGR இன் தான் மலையாளி என்கிற அநாவசியமான தாழ்வு மனப்பான்மை

5.MGR இன் மறைவு

6.Jaya வின் முதிர்ச்சியற்ற,அகம்பாவம் நிறைந்த மனோபாங்கு(நினைத்து பாருங்கள்... மு.க, சோனியாவிற்கும் நண்பர்,அத்வானிக்கும் நண்பர்.
ஜெயா இருவருக்கும் எதிரி!!)

7.இரண்டு முறை கிடைத்த ஆட்சி பொறுப்பை ஜெயா முழுவதும் வீணடித்து மக்கள் வெறுப்பை
சம்பாதித்துக்கொண்டது.


அப்போ நம்ம இக்கட்டு எல்லாம் எப்போ விலகும்?


அவருக்கு எப்போ டிக்கட் கிடைக்குதோ அப்போதான்!!


கருணாநிதி குடும்பத்தின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?


தெருக்கோடியில் இருந்து இந்தியக் கோடீஸ்வரராக மாறிய கருணாநிதி
கருணாநிதியின் தனக்கு தானே எழுதிக் கொண்ட நெஞ்சுக்கு நீதி புத்தகத்தில் பக்கம் 80 ல் கூறியிருப்பதை பார்க்கலாம்.


*1944 ம் ஆண்டு எனக்கும், பத்மாவதிக்கும் திருமணம் நடைபெற்றது. ஓராண்டு காலம் வரையில் வாழ்க்கையின் சுவைபடலம் பேரானந்தமாகத்தான் போய்க் கொண்டிருந்தது. எனக்கு நிரந்தர வேலை எதுவும் இல்லை.

இதனால், மனஅமைதி குறைய தலைப்பட்டது. இப்படியே வேலை இல்லாமல் திரிந்து கொண்டிருந்தால், வாழும் காலம் எப்படி போய் முடிவது? என்ற கேள்விகள் எல்லா பக்கங்களிலிருந்தும் கிளம்பின. ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் வேலை தேடி அலைந்தேன். வாழ்வதற்கு என்ன வழி என்று தீவிரமாக யோசிக்க தொடங்கினேன். அதன் விளைவு நாடக நடிகனாக ஆனேன்.
இவ்வாறு தனது புத்தகத்தில் எழுதியிருக்கிறார் கருணாநிதி.


பக்கம் 81,82 ல்..............
*விழுப்புரத்தில் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்தோம். அங்கு அறைகுறையாக உணவு கிடைக்கும். குளிப்பது என்பது அங்கு மிகவும் பெரிய பிரச்சனை. நாங்கள் குடியிருந்த இடத்திலிருந்து குளிக்க வேண்டுமென்றால், 1 கிமீட்டர் தூரமாவது செல்ல வேண்டும். வயலுக்கு தண்ணீர் பாய்ச்சப்படும் இடங்களில் தான் எங்களது குளியல். அந்த குழாய் தான் எங்களுக்கு குற்றால அருவி. குடிநீர் எல்லாம். குளித்து விட்டு வீட்டுக்கு கிளம்புவோம். கடுமையான வெயில் கொளுத்தும். சிறிய துண்டை இடையில் கட்டிக் கொண்டு, துவைத்த சட்டையை தோளில் உலரப் போட்டுக் கொண்டு சவுக்கார சோப்பினால் வெண்மையாக மாற்றப்பட்ட வேட்டியை, இரு கைகளாலும் தலைக்கு மேலே குடை போல பிடித்துக் கொண்டு அதனை உலர வைத்தவாறு வீட்டிற்கு வந்து உலர்ந்த பின் அவற்றை அணிந்து கொண்டு பிற்பகல் உணவிற்கு தவமிருப்போம்.


இதற்கடுத்து, 92,93 ம் பக்கங்களில்................
* பெரியாரின் ஈரோட்டு குடியரசு பத்திரிகை அலுவலகத்தில் துணை ஆசிரியராக பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. மாதம் சம்பளம் 40 ரூபாய். அதிலும் பிற்பகலும், இரவும் பெரியார் வீட்டில் சாப்பிடுவதற்காக இருபது ரூபாய் பிடித்துக் கொள்வார்கள். காலை, மாலை சிற்றுண்டிக்காக மாதம் 10 ரூபாய் போய் விடும். எனது இதர செலவுகள் ஐந்து ரூபாய். மீதம் 5 ரூபாயை தான் என்னை நம்பி அண்டி வந்த அருமை மனைவி பதமாவதிக்கு மாதந்தோறும் திருவாரூக்கு மணியார்டர் செய்வேன்.


பக்கம் 92,93 ல்..............................
* பெரிய அளவில் வைத்திய உதவிகளை எனது தந்தையாருக்கு செய்ய வசதியான நிலையில் குடும்பம் இல்லை. என் தந்தை இறந்து விட்டார்.


இப்படி கருணாநிதி எழுதிவைத்துள்ளார்.
இன்றைக்கு கருணாநிதி குடும்பத்தின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?


1.கருணாநிதியின் கோபாலபுரம் வீடு
2. முரசொலி மாறனின் வீடு-கோபாலபுரம்
3. கிருஷ்ணன் கோவில் அருகில்-உறவினர்களின் வீடு
4. முரசொலி செல்வம், செல்வி வீடு- கோபாலபுரம் ( கருணாநிதியால் கொடுக்கப்பட்டது)
5. மு.க.முத்து வீடு-கோபாலபுரம்
6. ஸ்வர்ணம் வீடு- கோபாலபுரம்
7. அமிர்தம் வீடு- கோபாலபுரம்
8. எழிலரசி வீடு ( முரசொலி செல்வத்தின் மகள்) -கோபாலபுரம்
9.ஆலிவர் சாலையில் ராஜாத்தி அம்மாள் வீடு
10. மு.க.ஸ்டாலின் வீடு- வேளச்சேரி
11. உதயாநிதி பொழுது போக்கு வீடு- ஸ்னோபவுலிங்- நுங்கம்பாக்கம்
12. உதயநிதி தீம்பார்க்- (மாமல்லபுரம் அருகில்)
13. பில்லியர்ட்ஸ் மையம் ( வேளச்சேரி)
14. கலாநிதி மாறன் வீடு (அடையாறு போட்கிளப் ரோடு)
15. தயாநிதி மாறன் வீடு
16. டிஸ்கோ- குவாலிட்டி இன் அருணா, அமைந்தகரை
17. கொட்டி வாக்கத்தில் மாறனின் பண்ணை வீடு
18. டிஸ்கோ- எத்திராஜ் காலேஜ் எதிரில்
19. டெலிபோன் எக்சேஞ்ச் கட்டிடம் -நீலாங்கரை
20. எம்.எஸ் இன்டஸ்ட்ரீஸ்- ராமச்சந்திரா மருத்துவக்கல்லூரி போரூர் அருகில்
21. முரசொலி கட்டிடம்- அண்ணாசாலை
22. சுமங்கலி கேபிள் கட்டிடம்- கோடம்பாக்கம் மேம்பாலம்
23. ராஜா அண்ணாமலை புரம் எம். ஆர்.சி நகரில் சன் தொலைக்காட்சிக்காக 32 கிரவுண்ட் நிலம்
25. சன்டிவியின் புதிய அப்-லிங்க் ஸ்டேசன்( கோடம்பாக்கம்)- மாதவன் நாயர் காலணி
26. இந்தியா சிமெண்ட்ஸ் பங்கு, சிமிண்ட் விலையை உயர்த்துவதற்காக
27. கோரமண்டல் சிமிண்ட் ஏற்படுத்தப்பட்டது
28. கூன் ஹுண்டாய்- அம்பத்தூர்- அண்ணாநகர்-அண்ணாசாலை
29. அந்தமான் தீவின் நிலங்கள்
30.அஸ்ஸாம் மாநிலத்தில் டீ, காபி தோட்டங்கள்
31. அம்பானியின் உரத்தொழிற்சாலையில் பங்கு
32. மேற்குவங்காளத்தில் தோல் தொழிற்சாலை
33. ஸ்டெர்லிங் சிவசங்கரனுடன் கூட்டு தொழில்
34. ஆந்திரா பார்டர் சிமெண்ட் ஏற்படுத்தப்பட்டது
35. பெண்டோபர் நிறுவனத்துடன் கூட்டு
36. கேரளாவில் மாமன், மாப்பிள்ளை நிறுவனத்துடன் காப்பி, மற்றும் ரப்பர் தோட்டங்கள்
37. செல்வம் வீடு
38. முக.ஸ்டாலின் சொத்துக்கள்
39. கருணாநிதி சொத்துக்கள்- திருவாரூர், காட்டூர், திருகுவளை.
40.முக.அழகிரி- மதுரை, திண்டுக்கல், கொடைக்கானல், மேலூர் சொத்துக்கள், மதுரை நகரின் வீடியே பார்லர்கள், கடைகள், ஸ்கேன் சென்டர்கள் உள்ளிட்ட பண்ணை வீடுகள்
41. செல்வம் வீடு-பெங்களுர்
42. உதயா டிவி இணைப்பு- பெங்களூர்
43. பூங்சி டிரஸ்ஸஸ்- பீட்டர்ஸ் சாலை
44.முக.தமிழரசன்- ரெயின்போ பிரிண்டர்ஸ், இந்திரா கார்டன்- சென்னை பீட்டர்ஸ் சாலை.
45. முக.தமிழரசன்- அந்தியூரில் உள்ள சொத்துக்கள்
46. தலைப்பாக்கடடு பிரியாணி சென்டர்- தி.நகர், ஜி.என்.செட்டி சாலை, சென்னை.
47. கோவையில் உள்ள டிபார்ட்மெண்டல் ஸ்டோர்
48. மல்லிகா மாறனின் உறவினர்களின் பெயரில் கும்பகோணம், மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் சென்னையில் சொத்துக்கள்.
49 .additional properties after semmuzi coimbatore farm house
50. broke bond land in coimbatore (given to rental for RMKV silks)
extra extra extra extra


இங்கு அழகிரி, கனிமொழியின் சொத்துக்கள் சேர்க்கப்படவில்லை.
திருவாரூரில் இருந்து கட்டிய வேட்டியும், தோளில் போட்ட துண்டுடன் , சென்னை நகருக்கு கள்ள ரயில் ஏறிவந்த கருணாநிதி குடும்பம் இன்று இந்திய பணக்காரர்கள் பட்டியலில்.


அது மட்டுமல்லாமல் .ராசாவின் சொத்து மதிப்பு சேர்க்க வில்லை. உங்களுக்கே தெரியுமே. அதான் அந்த ஜி ஸ்பெக்ட்ரம் மூலம் கிடைத்தவருமானமே இவ்வளவு என்றால் மீதி மற்றவை.?


வாழ்க தமிழ்நாடு. வாழ்க வந்தாரை வாழழழழழழ வைக்கும் தமிழ்மக்கள்


நன்றி இந்த விஷயத்தை எனக்கு பார்வார்ட் மெயில் அனுப்பிய எனது அண்ணாவுக்கு...


கருத்துக்கள் இருந்தால் தெரிவித்து விட்டு செல்லவும். அதோடு ஒரு வோட்டையும் போட்டுட்டு போங்க....