Friday, December 10, 2010

புகை பிடிக்காதீர்கள்...

நான் சந்தித்த ஒரு நிகழ்ச்சியைதங்களிடம் பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு. படித்துவிட்டு விளக்கத்தை தெரிந்து கொள்ளவும்..

ஒரு புகை(த்த)ச்சல் பயணம் .....



புகைத்தப்படி கிளம்பியது ....
எங்களூர் பேருந்து ....
நிறை மாதமாய்
எங்களை சுமந்தபடி......

டிரைவரும்
தன் பங்குக்கு
புகை விட்ட படி ......

கவனம் தேவை.....
வளைவுகளில் முந்தாதீர்கள் .....
அறிக்கைகளை பார்த்ததும் ....
உற்சாகத்தோடு வேகம் எடுக்கிறது
எங்கள் வண்டி ........

அனாயசமாய் வளைகிறது
ஸ்டீரிங் .......
ஒரு கையில் .......

மற்றொரு கையோ .....
வாயிற்கும் கையிக்குமான
போராட்டத்தில் ......

உயிர் விட்டது
கையில் இருந்த பீடி துண்டு .....
இப்போதோ இரு கையும்
இந்த வேலையில் இறங்க ....
உயிர் பயத்தில் நாங்கள் .....

இறங்கும் போதோ
உயிர் பிழைத்த
உற்சாகம் ...


"புகை பிடிக்காதீர்கள்"
படிகளில் எழுதி இருப்பது
பயணிகளுக்கு தான் போல ......

தங்களின்
மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கபடுகின்றன... கருத்துக்களை மறக்காமல் சொல்லிவிட்டு செல்லவும்...

3 comments:

  1. அரசாங்கமே சட்டத்தை மதிக்காத அவலம்: சட்டம் உண்டு - புகையிலை பொருட்கள் மீது எச்சரிக்கை படம் இல்லை

    http://arulgreen.blogspot.com/2010/12/blog-post.html

    ReplyDelete
  2. நிறைய பாவி மக்கா இப்படி தான் இருக்கனுங்க..
    என்ன சார் பண்றது...
    நல்ல பதிவு.. தொடரட்டும்..

    ReplyDelete
  3. //கவனம் தேவை.....
    வளைவுகளில் முந்தாதீர்கள் .....
    அறிக்கைகளை பார்த்ததும் ....
    உற்சாகத்தோடு வேகம் எடுக்கிறது
    எங்கள் வண்டி ........//

    ம்ம்
    இன்றைய நிலையை அழகா சொன்னீங்க

    ReplyDelete