Sunday, December 26, 2010

அனைவரிடமும் இதை தெரிவியுங்கள். நண்பர்களுக்கு அவசியம் பார்வார்ட் செய்யவும்....

அனைவருக்கும் எனது வணக்கம்,

இன்று நான் என்ன சொல்ல போகிறேன் என்றால், எனக்கு நேற்று நடந்த ஒரு சம்பவத்தை தங்களிடம் கூறுகிறேன். கவனமாக கேளுங்கள்.

நேற்று மாலை பொழுதில் எனது அப்பா என்னிடம் ஒரு பேப்பர் கொடுத்தார். இல்லை இல்லை ஒரு பத்திரிகை கொடுத்தார். அதாவது அவரிடம் யாரோ ஒருவர் இதை கொடுத்துவிட்டு சென்றதாக கூறி என்னிடம் கொடுத்தார். அதை நான் பிரித்து படித்த போது எனக்கு ஒரு பக்கம் நகைச்சுவையாகவும் அதே சமயம் ஒரு பக்கம் சிரிப்பதா அல்லது சும்மா இருப்பதா அல்லது ஒன்றும் கூறாமல் இருக்கவும் முடியவில்லை. சும்மா இருந்தாலும் வம்பு வருவது போல் இருந்தது. யோசித்தேன், இதை உங்களிடம் கூறலாமே என்று நினைத்து இந்த பதிவை எழுதுகிறேன். அந்த பேப்பரில் இருந்ததை தங்களிடம் கூறுகிறேன்.

அதில் என்ன இருந்ததென்றால் ஒரு சாமியை பற்றி இருந்தது. அது பொள்ளாச்சி ஆணை மலை மாசாணி அம்மன் பற்றி இருந்தது.

அதாவது, அதை அப்படியே போடுகிறேன் நீங்களே படியுங்கள்.

அதிசயம் ஆனால் உண்மை.
பொள்ளாச்சி, ஆனைமலை மாசாணி அம்மனின் கலியுக மகிமைக் கட்சிகள்.

பரம பக்தர்களே!
ஆனைமலையில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு மாசாணி அம்மன் திருக்கோவிலில் ஒரு அற்புதம் நடந்தது. ஒரு நாள் பூசாரி பூஜை செய்து கொண்டிருந்தபோது ஒரு பாம்பு வந்தது. அதை கண்டு பூசாரி பயப்பட்டார். அது ஒரு பிராமண அவதாரம் எடுத்து தர்மத்தை யார் கெடுக்கிறார்களோ அவர்களை அழிப்பேன். யாரவது என்னுடைய பெயரில் 1000 பத்திரிகை அச்சிட்டு வெளியிடுகிறார்களோ அவர்கள் நினைத்ததை 22 நாட்களில் தீர்த்து வைப்பேன். ஆனால் இப்பத்திரிகை இன்று நாளை என கழித்தால் அதிக கஷ்டத்தை கொடுப்பேன் என்று அந்த நாகதேவதை விஷயத்தை கூறி பின்புறமாக 2 அடி தூரம் கடந்து மாயமாக மறைந்தது.

இந்த விஷயத்தை கேட்டு சங்கராபுரத்தில் ஒருவர் 1500 நோட்டீஸ் அச்சிட்டதால் லாட்டரி சீட்டில் 60 லட்சம் பரிசு கிடைத்தது. விழுப்புரத்தில் ஒருவர் 877 நோட்டீஸ் அச்சிட்டு வெளியிட்டதால் 21 நாட்களில் தங்க புதையல் கிடைத்தது. இதைபோல் ஒருவர் அத்திரிக்கை வெளியிடலாம் என நினைத்தபோது அவருக்கு அரசாங்க வேலைக்கு ஆர்டர் வந்தது. பிறகு அவர் 100 நோட்டீஸ் அச்சிட்டு வெளியிட்டால். ஆனால் அதை படித்த ஒருவர் பொய் என்று கேலி செய்து பத்திரிக்கையை கிழித்து போட்டார். அதனால் அவருடைய மகன் இறந்துவிட்டார்.

கள்ளக்குறிச்சியில் பாபு என்பவர் பத்திரிக்கை படித்துவிட்டு ஒரு மாதம் காலம் தாமதம் ஆனதால் வியாபாரத்தில் பெரும் நஷ்டம் அடைந்தார். பிறகு அவருடைய மனைவி மரணமடைந்தார். மேலும் புதூர் என்ற ஊரில் நான்கு நபர்கள் சேர்ந்து 2500 பத்திரிக்கை வெளியிட்டார்கள். அவர்களுக்கு லாட்டரியில் ரூ.4 லட்சம் கிடைத்தது. இந்த விஷயத்தை கேட்ட மளிகைக்கடைக்காரர் 1500 பத்திரிக்கை வெளியிட்டார். அவருக்கு லாட்டரியில் ரூ.4 லட்சம் கிடைத்தது. பிறகு அங்காளம்மன் கோவிலை கட்டினார்.

இந்த பத்திரிக்கையை 15 நாட்களுக்குள் அச்சிட்டு வெளியிட்டால் நினைத்த காரியம் நடக்கும். இதை வாசித்த பிறகு பிறருக்கு கொடுங்கள். அருள்மிகு மாசாணி அம்மன் தவறாமல் அவருடைய மகிமையை காட்டுவார்.


என்று இவ்வாறு அந்த பத்திரிக்கையில் இருந்தது. நான் என்ன செய்ய.?

நல்லவேளை எனக்கு இப்போது ஒன்றும் இல்லை. ஏன் என்றால் நான் இங்கே மற்றவரிடம் அதாவது உங்களிடம் தெரிவித்து விட்டேன். எனக்கு நன்மை வந்தால் தங்களிடம் தெரிவிக்கின்றேன்.

இதை வெளியிடாமல் போய்விட்டால் ஏதாவது வந்து விட போகிறது என்பதற்காக நான் தங்களிடம் கூறி விட்டேன். இது போல் உங்களுக்கும் ஏதாவது வந்தால் நீங்கள் முடிவு செய்து கொள்ளுங்கள். இனி நீங்களாச்சி அதுவாச்சி.. வரட்டுமா. ஆனால் எனக்கு இது கொஞ்சம் நகைச்சுவையாகதான் இருக்கிறது. அப்போ பயம்.?


படிச்சீங்கல்ல ஏதாவது சொல்லிட்டு போறது.

12 comments:

 1. இப்படியெல்லம் வரும்னு தெரிஞ்சுதான் நான் கீழே இருந்து மேலே படித்தேன் நான்கு வரிக்குமேல் படிக்கவில்லை.

  இதெல்லாம் அவரவர் நம்பிக்கைதான்...!!

  ReplyDelete
 2. நீங்க இத்தெல்லாம் நம்புறீங்களா.??? ஆச்சர்யம்.. இது அந்த கோவிலை பிரபலபடுத்த கையாளப்படும் யுக்தி என்பது புரியவில்லையா.??? இதை யாராவது அதீத கடவுள் பக்தி மூட நம்பிக்கை கொண்டவர் படித்து மேல் கூறியவாறு செய்ய அவரின் தற்போதைய சூழ்நிலை ஒத்துபோகாவிடில் அது அவருக்கு மனுளைச்சலை ஏற்படுத்தி அது அவரின் உடம்புக்கு கேடு விளைவிக்கும் என்பதை அறியாதவரா நீங்கள்..?? இப்பதிவு கண்டனத்திற்குரியது...

  ReplyDelete
 3. This comment has been removed by the author.

  ReplyDelete
 4. //ஜெகதீஸ்வரன்.இரா said...

  ஹலோ எனக்கு இதில் எல்லாம் நம்பிக்கை கிடையாது நண்பா... இது போல் மற்றவருக்கும் வரலாம் என்பதை தெரிவிக்கத்தான் நான் தெரிவித்தேன். ஆகவே உஷாராக இருக்கவும்.

  ReplyDelete
 5. //தம்பி கூர்மதியன் said...

  ஹய்யோ.. எனக்கு இதன் மேல் எல்லாம் எனக்கு நம்பிக்கை கிடையாது . ஜஸ்ட் எனக்கு வந்த இந்த தகவலை உங்களுக்கு தெரிவித்தேன் . நீங்கள் இதை தவறாக எண்ண வேண்டாம் . எனக்கு பயம் கிடையாது. ஜஸ்ட் நகைச்சுவைக்காக தான் நான் பயம் என்று கூறினேன். ஆகவே நண்பர் பொருத்தருள வேண்டும். k

  ReplyDelete
 6. //அது ஒரு பிராமண அவதாரம் எடுத்து தர்மத்தை யார் கெடுக்கிறார்களோ அவர்களை அழிப்பேன்//

  ஷங்கர் அந்நியன் படத்திக்கான ஒன்லைன் கதையை இங்கிருந்து தான் சுட்டு இருப்பார்னு நினைக்கிறேன்

  ReplyDelete
 7. எங்க ஊர்லையும் இந்த பேப்பர் ரொம்ப பாபுலரா இருந்துச்சு....

  என்னன்னு சொல்றது?

  ReplyDelete
 8. // கோவி.கண்ணன் said...

  oh neenga inga irundhu cinema ku poiteengala......
  eppadiyellam yosikkiraaingayaa

  ReplyDelete
 9. //ஆமினா said...

  appadiyaa.. idhai aen enkita munnadiye sollala..

  ReplyDelete
 10. சொல்வதற்கு ஒன்றும் இல்லை.. இதுபோல் எத்தனையோ பார்த்தாயிற்று.. எம் தளத்திற்கான இணைப்பை கொடுத்துள்ளமை மிக்க நன்றி!

  ReplyDelete
 11. உங்களுக்கு அவார்ட் கொடுத்திருக்கிறேன். பெற்றுக்கொள்ளுங்கள். நன்றி!!
  http://mabdulkhader.blogspot.com/2010/12/blog-post_26.html

  ReplyDelete
 12. rasa and kanimozhi get 1.76lakhs crors after print this 1000 copies. belive.

  by
  karunanidhi

  ReplyDelete