Wednesday, December 22, 2010
தம்பி இன்னொரு ஆப்பாயில் சொல்லேன்...!
பல நாளைக்கு அப்புறம் ஆபாயில் சாப்பிடலான்னு ஒரு ஆசை. இத நான் முன்னாடியே சொல்லிறேன். நான் எது ஆசபட்டாலும் அது எனக்கு உடனே கிடைக்காது அது ரொம்ப சாதாரண பொருளா இருந்தாலும் சரி. எங்க ஏரியால இருக்க ஒரு ஹோட்டலுக்கு போனேன்..
முன்னாடியே மாஸ்டருக்கு பக்கதுல முட்டையெல்லாம் இருக்கானு செக் பண்ணி கிட்டு உள்ள நுழைஞ்சேன்...அது ரொம்ப பெரிய ஹோட்டல் கிடையாது ஆனா அந்த ஏரியால ரொம்ப பிரபலம். உள்ளார நுழைஞ்ச உடனே ஒரு ஆம்பிலேட் , நாலு புரோட்டா, ரெண்டு சாப்பாடு பார்சல், இங்க கொஞ்சம் சாம்பார் ஊத்துங்க என பல திசையில இருந்து குரல்கள்.
ஒரு ஓரத்துல உக்கார இடம் கிடைச்சது. நாலு புரோட்டா ஒரு ஆபாயில் சொல்லிட்டு மதியம் கரண்டு இருக்காது என்ன படத்துக்கு போலன்னு யோசிச்சுக்கிட்டு இருக்கும் போது புரோட்டா வைக்கும் சத்தம் என் யோசனையா கலச்சிருச்சு.
புரோட்டவ சாப்பிட்டு முடிக்கும் முன்னரே ஆபாயில் வந்துருச்சு. எனக்கு கொடுத்த இலை ரொம்ப சின்னது. ஆபாயில வைக்க இடம் இல்லாததால புரோட்டவ ஓரமா நகர்துரதுக்கு முன்னாடியே அவசர அவசரமா தட்டுல இருக்குற ஆபாயில எடுத்து என் இலையில வச்சாரு ஒரு நாப்பது வயது மதிக்க தக்க சர்வர்(பாவம் அவருக்கு என்ன அவசரமோ).ஆபாயில் வைக்கும் போது லேசா உடைஞ்சிருச்சு.
அவரால ஒன்னும் சொல்ல முடியல திருப்பி எடுதுட்டும் போக முடியாது என்ன செய்யுறதுன்னு தெரியாம மாஸ்டர் ஒரு முட்ட பொரியல் ரெடியான்னு கேட்டுகிட்டே அந்த இடத்த விட்டு நகர்ந்துட்டாறு. எனக்கு சரியான கோவம்.அவரையே கோவமா பாக்குற மாதிரி ஒரு பில்ட் அப் கொடுத்தேன். சரி லேசாதான உடைஞ்சிருக்கு அப்படியே எடுத்து சாப்பிடலன்னு எடுக்குறேன் முழுசா உடைஞ்சிருச்சு அப்படியும் சாப்பிட்டரலானு ட்ரை பண்ணுறேன் முடியல...
எனக்கு எதிரே இருந்தவன் இதுதான் முதல் தடவயானு கேக்குற மாதிரு லேசா ஒரு சிரிப்பு சிரிச்சான்.இருக்குற கோவத்துக்கு அப்படியே ஒடஞ்ச ஆபாயில எடுத்து அவன் மூஞ்சியில அடிச்சுரலாம் போல தோனுச்சு..கோவத்த வெளிகாட்டமா லேசா சிரிச்சுட்டு அப்படியே இலைய மூடிட்டேன். கை கழுவும் போது எதிரே ஒரு கண்ணாடி. லேசா களஞ்ச முடியை சரி பண்ணிகிட்டு இருக்கும்போது என்னையும் அறியாம ஒரு சிரிப்பு..
ஆமாங்க நம்ப பிரெண்டுங்க கூட்டத்துல யாராவது அசிங்க பட்டா ஒரு சிரிப்பு வருமே அந்த சிரிப்புதான். அப்பதாங்க நான் எல்லாருக்கும் சொல்லுற ஒரு வார்த்த நினைவுக்கு வந்தது "வாழ்கையே ஒரு அட்ஜஸ்ட்மென்ட் தாங்க!" நாலு தடவ நகைச்சுவையாக எனக்குள்ளேயே சொல்லிகிட்டேன்! உண்மையிலே சொல்லுறேன் என்னிடம் இருந்த கோவம் எல்லா போயிருச்சு. பில்லு கொடுக்கும் போது சர்வர் நாலு புரோட்டா மாட்டும் தான் சொன்னாரு அப்புறம் நானே ஒரு ஆபாயில் சேர்த்து சொல்லி காசு கொடுத்துட்டு வெளியில வரும்போது எனக்குள்ள ஒரு சந்தோசம்..பெருசா எதையோ யாருக்கோ தியாகம் பண்ணுன மாதிரி...
நீங்களும் ட்ரை பண்ணுங்க உங்கள யாராவது கொவபடுத்தும் போதும், ஆசைப்பட்டது கிடைக்காத போதும் நாலு தடவ "வாழ்கையே ஒரு அட்ஜஸ்ட்மென்ட் தாங்க!" சொல்லிபாருங்க. நீங்க பெருசா எதையோ விட்டு கொடுத்த மாதிரி உங்களுக்கு ஒரு திருப்தி கிடைக்கும்.அப்படி கிடைக்கலேனா வேற வழியே இல்லை இன்னொரு ஆபாயில் சொல்லித்தான் ஆகணும்
Subscribe to:
Post Comments (Atom)
சூப்பருங்க!!
ReplyDeleteஇதுக்காக தான் நான் ஆபாயில் சாப்பிடுறதே இல்ல ;(
அடக் கொடுமையே ஒரு ஆப்பாயிளுக்குள்ள இவளவு இருக்க . அப்பாயில் கேன்ஸல்
ReplyDelete