Thursday, December 9, 2010

அடிமையாக்க ஆசைப்படாதே..........

நான் படித்து என் மனதில் நின்ற ஒரு சிறு நினைவை தங்களிடம் பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு. நீங்களும் படித்து தெரிந்து கொள்ளுங்கள்....


ஜார்ஜ் வாஷிங்டன் அமெரிக்காவின் முதல் ஜனாதிபதி. அவர் தலைமையில் அமெரிக்காவில் போர் நடந்து கொண்டிருந்த சமயம். பத்துப் பதினைந்து போர் வீரர்கள் ஓர் உத்திரத்தைப் படாத பாடுபட்டு நகர்த்திக் கொண்டிருந்தார்கள். அவர்கள் குழுவின் தலைவன் குதிரையில் அமர்ந்தபடி அவர்களை அதட்டி உருட்டி வேலை வாங்கிக் கொண்டிருந்தான். அவர்கள் ஒரு குறிப்பிட்ட உயரத்திற்கு அந்த உத்திரத்தை நகர்த்த முடியாதபடி அதிகச் சிரமப்பட்டார்கள். வேகமாக அதட்டினான் அந்தக் குழுவின் தலைவன்.

அப்போது அங்கு குதிரையில் வந்த வீரன் ஒருவன் தலைவனைப் பார்த்து, “அவர்கள் இவ்வளவு கஷ்டப்படுகிறார்களே… நீயும் அவர்களோடு சோர்ந்து அதை நகர்த்தக் கூடாதா?” என்று கேட்டான். குழுத்தலைவன், “நான் யார் தெரியுமா? அவர்களின் தலைவன்… அவர்களோடு சமமாக வேலை செய்ய முடியுமா?” என்று உறுமினான்.

குதிரையில் வந்தவன் இறங்கி, வீரர்களுக்கு உதவி, உத்தரத்தை நகர்த்தி அதன் இடத்தில் வைத்து விட்டுப் பிறகு தனது குதிரையில் ஏறி அமர்ந்தான். அந்தக் குழுவின் தலைவனைப் பார்த்து, “இனி இப்படிக் கடினமாக வேலை ஏதாவது இருந்தால் எனக்குச் சொல்லி அனுப்புங்கள். அவசியம் நான் வந்து உதவுகிறேன்” என்று உரக்கச் சொன்னான்.

நீ யார்? உனக்கு எப்படிச் சொல்லி அனுப்புவது? உன் இருப்பிடம் எது? என்று அலட்சியமாகக் குழுத்தலைவன் கேட்டான். “நானா… ஜார்ஜ் வாஷிங்டன். உங்களின் தலைமைத் தளபதி” என்று அழுத்தமாகக் கூறி விட்டுக் குதிரையைத் தூண்டிச் சிட்டாய் பறந்தார் ஜார்ஜ் வாஷிங்டன்.

தனியாய் இரு!
தலைவனாய் இரு!!
அடிமையாகாதே! அடிமையாக்காதே!!

மறக்காம உங்க கருத்தை சொல்லிட்டு போங்க..

4 comments:

  1. :) எங்களோடு சரிசமமாக அமர்ந்து சரக்கடிக்கும் எங்கள் கால் செண்டர் டீம் லீடரை இந்த லிஸ்டில் சேர்த்துக் கொள்ளலாம் தானே...

    ReplyDelete
  2. Ha Ha Ha Prabahakaran Sir Super....

    ReplyDelete
  3. //philosophy prabhakaran said...

    oh neenga sarakku adippeengala?

    ReplyDelete