Tuesday, September 28, 2010

நம் கற்பனையின் வலிமைக்கு எல்லையே இல்லையா ........!?

தயவு செய்து மெதுவாக கீழே செல்லுங்கள்..... மற்றும் கற்பனையின் புகைப்படத்தை பாருங்கள். கற்பனை எவ்வளவு பெரிதென்று.






















































































































பார்த்தீர்களா ..! எப்படி இருக்கின்றது
கற்பனைக்கு எல்லையே கிடையாது...
நில்லுங்கள் நில்லுங்கள் அப்படியே கற்பனையோடு ஒரு ஓட்ட போட்டுட்டு போங்க... ஹா ஹா...

சிறப்பு வசதிகளுடன் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 9



இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9ன் சோதனைப் பதிப்பு சென்ற வாரம் வெளியானது. இது சோதனைப் பதிப்பாக இருந்தாலும், முழுமையான ஒரு புதிய பதிப்பாக, புது அவதாரம் எடுத்து வந்துள்ளது. மக்களிடையே எப்படியும் இதனை நிலை நிறுத்த வேண்டும் என்ற இலக்குடன் மைக்ரோசாப்ட் இந்த பதிப்பினை வெளியிட்டுள்ளது. மொஸில்லா மற்றும் குரோம் பிரவுசர்களிடம் தான் இழந்த இடத்தை மீண்டும் பெற, நிறைய முயற்சிகளை எடுத்து, அவற்றில் வெற்றியும் பெற்றுள்ளது. ஏறத்தாழ ஓராண்டுக்கு முன் மைக்ரோசாப்ட் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9க்கான அறிவிப்பை வெளியிட்டது. 2010 மார்ச் மாதத்திற்குப் பின் டெவலப்பர்களுக்கான நான்கு முன் சோதனைப் பதிப்புகள் வெளியிடப்பட்டன. கம்ப்யூட்டர் மற்றும் இணையப் பயன்பாடு முற்றிலும் மாறி வருகிறது. கம்ப்யூட்டர் செயல்பாடு இணையத்தில் தான் அதிகம் மேற்கொள்ளப்படுகிறது. அப்ளிகேஷன் சாப்ட்வேர்கள் இணையத்திலேயே பயன்பாட்டிற்குக் கிடைக்கின்றன. எனவே பிரவுசர் தொகுப்பினையும் ஒரு அப்ளிகேஷன் சாப்ட்வேர் போல, மைக்ரோசாப்ட் தந்துள்ளது.
ஹார்ட்வேர் சாதனங்களின் முழுமையான திறனைப் பயன்படுத்தும் வகையில் இந்த பிரவுசர் உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன் கூடுதல் திறனுடன் உருவாக்கப்பட்ட, சக்ரா என அழைக்கப்படும் ஜாவா ஸ்கிரிப்ட் இன்ஜின் தரப்பட்டு, இயக்கப்படுகிறது. புதியதாக வந்துள்ள இணையத் தொழில் நுட்பமான எச்.டி.எம்.எல். 5 மற்றும் சி.எஸ்.எஸ்.3 யினை முழுமையாக இந்த பதிப்பு பயன்படுத்துகிறது. இதனால், இந்த பிரவுசரில் வழக்கத்திற்கு மாறான வசதிகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்ப அம்சங்கள் கிடைக்கின்றன. அவற்றை இங்கு காணலாம்.
டைட்டில் பாரில் வழக்கமாக இருக்கும் இலச்சினை இல்லை. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தான் என்று காட்டும் e என்ற எழுத்தோ அல்லது டெக்ஸ்ட்டோ இல்லை. பிரவுசரைத் திறந்தவுடன் காட்டப்படும் இன்டர்பேஸ் மெனு சங்கதிகள் எதுவும் இல்லை. அனைத்தும் மறைத்து வைக்கப் பட்டுள்ளன. மேலே வலது மூலையில் உள்ள சர்ச் பார், கமாண்ட் பார் மற்றும் பேவரிட்ஸ் பார் ஆகியன மறைக்கப் பட்டுள்ளன. கீழாக உள்ள ஸ்டேட்டஸ் பாரும் இல்லை. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8 வெளியிட்ட பின், இயக்கப்பட்ட வாடிக்கையாளர்களின் கருத்து கேட்பு இயக்கம் (Customer Experience Improvement Program) மூலம் பெறப்பட்ட பல லட்சக்கணக்கான பின்னூட்டுக்களின் அடிப்படையில், இந்த புதிய பதிப்பு 9 அமைக்கப்பட்டு வெளியாகியுள்ளது. பல மெனு பார்கள் மறைக்கப்பட்டுள்ளன. ஆல்ட் கீ பயன்படுத்துவதன் மூலமே பேஜ், சேப்டி டூல்ஸ் மற்றும் ஹெல்ப் போன்ற மெனுக்கள் கிடைக்கின்றன. அடுத்ததாக பேவரிட்ஸ் மெனு. இதனை 18% பேர் மட்டுமே பயன்படுத்தி வந்தனர். இதில் போல்டர்களை உருவாக்கியவர்கள் 1% பேர் மட்டுமே. எனவே இவை ஓரங்கட்டப்பட்டுள்ளன.மேலாக உள்ள ரெப்ரெஷ் மற்றும் ஸ்டாப் பட்டன்களும் வண்ணத்தில் இல்லாமல், கிரே கலரில் பட்டும் படாமல் காட்டப்படுகின்றன. வலதுபுறம் மேலாக, ஹோம் பேஜ், பேவரிட்ஸ் மற்றும் டூல்ஸ் ஆகியவற்றிற்கான பட்டன்களும் வண்ணமிழந்து காட்டப்படுகின்றன.இணையப் பக்கங்களைத் திறந்தால், அவற்றிற்கான டேப்கள் மிகச் சிறியதாக அமைக்கப்படுகின்றன. அட்ரஸ் பாருக்கு வலது புறமாக வரிசையாகக் கிடைக்கின்றன. டேப்களில் குரூப் அமைப்பது அப்படியே தொடர்கிறது. அதாவது ஒரு லிங்க்கில் கண்ட்ரோல் + கிளிக் செய்கையில், அந்த தளம் அதே வண்ணத்தில் குரூப்பாகத் திறக்கப்படுவது, இந்த பிரவுசரிலும் கிடைக்கிறது.
ஏதேனும் பிரச்னைக்குரிய சிக்கலைச் சந்திக்கையில், முன்பு போல எழுந்து வரும் பாப் அப் கட்டங்களில் பிழைச் செய்திகள் தரப்படுவதில்லை. அதற்குப் பதிலாக, விண்டோவின் கீழாக, பிரச்னைக்கான பட்டன்கள் காட்டப்படுகின்றன. இணையப் பக்க வேலையை முடித்துக் கொண்டு, அல்லது நேரம் கிடைக்கும்போது நாம் அதனைப் பார்க்கலாம். கோப்புகளை தரவிறக்கம் செய்திடுகையிலும், இதே முறை பின்பற்றப்படுகிறது.
டேப்களைப் பிரித்து எடுத்து நாம் விரும்பும் இடத்தில் வைத்துக் கொண்டு செயல்படலாம். அதிக எண்ணிக்கையில் இணைய தளங்களைத் திறக்கையில், நாம் அடிக்கடி திறந்து பார்க்க விரும்பும் தளங்களுக்கான டேப்களைத் தனியே வைத்து இயக்கலாம்.
இந்த புதிய பதிப்பில், சர்ச்பாக்ஸ் மற்றும் அட்ரஸ் பார் இணைக்கப்பட்டு பிரைவேட் ஒன் பாக்ஸ் (Private Onebox) என்ற பெயருடன் தரப்பட்டுள்ளது. இதில் இயக்கப்படும் தேடுதல் தளம் எதிர்பார்த்தபடி பிங் ஆக உள்ளது. அட்ரஸ் பாரில், இணைய முகவரியை அமைக்கும்போதே, இந்த தளம் தேடித் தரும் முடிவுகளை, உங்களுடைய ஹிஸ்டரியுடன் இணைத்து பார்த்து, அட்ரஸ் பாரில் நீங்கள் பார்க்க விரும்பும் தளம் இதுதான் எனக் காட்டுகிறது.
இந்த பிரவுசரில் மிகச் சிறப்பான ஒரு அம்சம் இதன் Pinned Shortcuts வசதி. இதன் மூலம் உங்களுக்குப் பிடித்த, அடிக்கடி பயன்படுத்தும் தளத்தினை ஒரு அப்ளிகேஷன் போல அமைத்துக் கொள்ளலாம். அட்ரஸ் பாரிலிருந்து, அந்த தளத்தின் ஐகானை இழுத்து வந்து, கம்ப்யூட்டரின் டாஸ்க் பாரில் போட்டு வைக்கலாம். அடுத்து இந்த தளம் செல்ல வேண்டும் என எண்ணினால், இந்த ஐகானில், அப்ளிகேஷனைத் திறப்பது போல, கிளிக் செய்திடலாம். இன்டர்நெட் எக்ஸ்புளோரர் திறக்கப்பட்டு, இந்த தளம் காட்டப்படும். இதனால், உங்கள் வேர்ட், பேஜ்மேக்கர், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் போன்றவற்றின் ஐகான்களுடன், இந்த தளத்தின் ஐகானும், ஒரு அப்ளிகேஷன் சாப்ட்வேர் போல இடம் பெற்றிருக்கும். இது ஏறத்தாழ குரோம் பிரவுசரில் உள்ள அப்ளிகேஷன் ஷார்ட் கட் போலச் செயல்படுகிறது. ஆனால் குரோம் பிரவுசரில் இது போல தளங்களைத் திறக்கையில், அதில் டேப்கள் எதுவும் காட்டப்படாது. இதனால், மற்ற தளங்களை அந்த விண்டோவில் திறக்க முடியாது. இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் திறக்கலாம். ஆனால், இன்னொரு சிக்கல் உள்ளது. இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் பதியப்பட்டுள்ள ஆட் ஆன் தொகுப்புகள், பின் (Pin) செய்யப்பட்ட தளங்களில் இயங்காது. இதில் இணைய தளம் ஒன்றைத் திறக்க முயற்சிக்கையில், காலியான பக்கம் ஒன்று காட்டப்படாமல், அந்த டேப்பில் நாம் ஏற்கனவே பார்த்த தளங்களின் சிறிய படங்கள் காட்டப் படுகின்றன. கூடுதலாக, திரையின் கீழாக, ஒரு நீள பார் காட்டப்படுகிறது. இதன் நீளம், நீங்கள் எத்தனை முறை ஒரு தளத்தைப் பார்த்திருக்கிறீர்கள் என்பதற்கேற்ப அமைகிறது. பிரவுசரின் மேலாக இடது பக்கம், நீங்கள் எந்த தளத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறீர்களோ, அதன் ஐகான் காட்டப்படுகிறது.
இதன் முந்தைய பதிப்பு 8 உடன் ஒப்பிடுகையில், இதில் பல புதிய பாதுகாப்பு வளையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த பிரவுசரின் இன்னொரு சிறப்பு அம்சம், இதன் வேகம். இணையப் பக்கங்கள் வேகமாக இறங்குகின்றன. மற்ற பிரவுசர்களுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது சற்று சிரமமாக உள்ளது. பயர்பாக்ஸைக் காட்டிலும் 21% வேகமாகவும், குரோம் பிரவுசரைக் காட்டிலும் 29% குறைவான வேகத்திலும் இயங்குகிறது. சபாரி மற்றும் ஆப்பராவின் வேகத்தை இந்த பிரவுசர் இன்னும் அடைய இயலவில்லை. முழுமையான தொகுப்பில் இதன் வேகம் இன்னும் அதிகரிக்கலாம். எனவே, வேகத்தைக் காரணம் காட்டி, இன்டர்நெட் எக்ஸ்புளோரரை இனி ஒதுக்கத் தேவையில்லை.
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9ஐ, விண்டோஸ் 7 மற்றும் விஸ்டா + சர்வீஸ் பேக் 2 உடன் இன்ஸ்டால் செய்து பயன்படுத்தலாம். பல காரணங்களுக்காக விண்டோஸ் எக்ஸ்பியில் இது இயங்காது. நீங்கள் எக்ஸ்பி உள்ள கம்ப்யூட்டரில் இருந்தவாறு இதனை டவுண்லோட் செய்திட முயன்றால், உங்கள் கம்ப்யூட்டருக்கும் இதற்கும் ஒத்துப் போகாது (“you won’t be able to install Internet Explorer 9 unless you upgrade to a more recent version of Windows.”) என்ற செய்தி தரப்பட்டு, தரவிறக்கம் செய்வது தொடங்காது. ஆட் ஆன் தொகுப்புகளைப் பொறுத்தவரை, இந்த பிரவுசர் ஒரு புதிய வசதியைக் கொண்டுள்ளது. பொதுவாக இந்த தொகுப்புகள் பிரவுசர் இயங்கும் வேகத்தைக் கட்டுப்படுத்தும். எனவே ஆட் ஆன் தொகுப்புகளை இணைத்துப் பயன்படுத்துவதை இந்த பிரவுசர் உணர்ந்தவுடன், திரையின் கீழாக ஒரு அறிவிப்பு நீள் கட்டம் ஒன்றைத் திறக்கிறது. அதில் ரைட் கிளிக் செய்தால், எந்த ஆட் ஆன் தொகுப்பு இயக்கத்தில் உள்ளது என்றும், அது எந்த அளவிற்கு பிரவுசரின் வேகத்தை மட்டுப்படுத்துகிறது என்றும், அதனைத் தயாரித்து வழங்கிய நிறுவனம் எது என்றும் காட்டுகிறது. இவற்றை அறிந்தவுடன், அங்கேயே எந்த ஒரு ஆட் ஆன் தொகுப்பின் இயக்கத்தினையும் முடக்கலாம். மீண்டும் அவை வேண்டும் என்றால், டூல்ஸ்(Tools) ஐகான் கிளிக் செய்து, மேனேஜ் ஆட் ஆன் (Manage Add on) தேர்ந்தெடுத்து, அதில் நீங்கள் மீண்டும் இயக்க விரும்பும் ஆட் ஆன் தொகுப்பில் சென்று இயக்குவதற்கு Enable என்பதனை கிளிக் செய்திடலாம்.
இந்த வசதியை மற்ற பிரவுசர்கள், குறிப்பாக ஆயிரக்கணக்கில் ஆட் ஆன் தொகுப்பினைக் கொண்டுள்ள, மொஸில்லாவின் பயர்பாக்ஸ் இனி வருங்காலத்தில் மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கலாம். இந்த பிரவுசரில் டவுண்லோட் செய்யப்படும் தளங்களுக்கான வடிகட்டி (Smartscreen Filter) மேம்படுத்தப்பட்டுள்ளது. ஒரு பைலை டவுண்லோட் செய்திட முயற்சிக்கையில், எத்தனை பேர் இதனை டவுண்லோட் செய்துள்ளனர், அவர்களுக்கு இது பயனுள்ளதாக இருந்துள்ளதா, குறைவான டவுண்லோட் எனில், ஏதேனும் கெடுதல் விளைவிக்கும் தன்மை உடையதா? என்று சோதனை செய்து, அவ்வாறு இருப்பின் எச்சரிக்கை அளிக்கிறது. இது சோதனைத் தொகுப்புதான். எனவே குறைகள் இருக்கலாம். விண்டோஸ் 7 பயன்படுத்துபவர்கள், இப்போதைக்கு இதனை ஒரு பேக் அப் பிரவுசராகப் பயன்படுத்திப் பார்க்கலாம். இந்த பிரவுசர் தொகுப்பை இலவசமாகப் பெற இங்கே என்ற முகவரியில் உள்ள இணைய தளம் செல்லவும். இந்த தளம் தான் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரின் இணைய தளமாகும். 32 பிட் மற்றும் 64 பிட் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் பயன்படுத்த எனத் தனித் தனி பிரவுசர்கள் தரப்படுகின்றன.

Monday, September 27, 2010

அத்தனைக்கும் ஆசைப்படு...!

நாயை பற்றிய ஒரு கதை. ஒரு நாய் தன்னால் மிகவும் வேகமாக ஓட முடியும் என்று எப்போது பார்த்தாலும் பெருமை பேசிக் கொண்டிருந்தது. ஒரு நாள் முயலை துரத்திக் கொண்டு ஓடிய அந்த நாயால் முயலைப் பிடிக்க முடியவில்லை. மற்ற நாய்கள் அதைப்பார்த்து கேலி செய்தன. ஆனால் அந்த நாய் இவ்வாறு சொல்லியது…..

“ஒரு விஷயத்தை நீங்கள் மறந்து விட்டீர்கள். முயல் தன்னுடைய உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடியது. ஆனால் நான் வேடிக்கைக்காகத்தான் அதை விரட்டிக் கொண்டு ஓடினேன்”. முயலைப் பிடிப்பது எனக்கு ஒரு முக்கியமான விஷயமாக தோன்றவில்லை.

ஆனால் முயலைப் பொறுத்தவரையில் இது வாழ்வா! சாவா!! என்றதொரு போராட்டம். நாயை விட கடுமையாக முயற்சித்தது. வாழ்க்கை அதற்கு மிகவும் முக்கியமான விஷயம். ஒரே வார்த்தையில் மிகவும் சுருக்கமாகச் சொல்லிவிடலாம் வாழ வேண்டும் என்றதொரு “ஆசை”.

மிகச் சிறந்த சிந்தனையாளர்களுள் ஒருவரான வில்லியம் ஜேம்ஸ் இதனை கீழ்கண்டவாறு கூறுகிறார். “விளைவைப் பற்றி நீங்கள் போதுமான அக்கறை காட்டினால் அநேகமாக நிச்சயமாக நீங்கள் அதைப் பெற்று விடுவீர்கள். நல்லவராக இருக்க விரும்பினால் நல்லவராக இருப்பீர்கள். நீங்கள் அடைய வேண்டிய விஷயங்களை உண்மையாகவே அடைய ஆசைப்பட வேண்டும் என்பது மட்டும் தான் முக்கியம்”.

“ஒரு விஷயம் உங்களுக்கு எவ்வளவு முக்கியமானதாக இருக்கிறதோ அந்த அளவுக்குத்தான் நீங்கள் செய்கின்ற முயற்சியின் உத்வேகமும் இருக்கும்”.

நீங்கள் விரும்புவதை அடைவதற்கு ஒரு இரகசியம் இருக்கிறது:

நீங்கள் போதுமான அக்கறைகாட்ட வேண்டும்

மெய்யாகவே விரும்ப வேண்டும்

ஆசை இருக்க வேண்டும். உங்கள் ஆழ்மனதில் இந்த ஆசை கொழுந்துவிட்டு எரிய வேண்டும் உங்கள் எண்ணங்களின் மீதும் செயல்களின் மீதும் அதற்குப் பெரிய பாதிப்பு இருக்க வேண்டும்
மேலும் அதை அடைந்தே தீர வேண்டும் என்பது உங்கள் நெஞ்சத்தில் நீங்காத இடம் பெற வேண்டும்
அந்த அளவுக்கு அது உங்களுக்கு உங்களது வாழ்க்கையில் முக்கியமானதாக இருக்க வேண்டும்.

“அத்தனைக்கும் ஆசைப்படு
நன்றி.

Saturday, September 25, 2010

பிளாக்கர்ஸ் வரைந்தல் வேலைவாய்ப்பு


வேலைவாய்ப்புக்கான வாசலாகி விட்ட வலைப்பதிவுகள்



இணைய தளங்களின் அபரிமிதமான வளர்ச்சியாலும், விளம்பர வருவாய் ஈட்டுவதற்காகவும் வாசகர்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்யுமாறு இலவச வலைப்பதிவுத் தளங்களை பல இணையதள நிறுவனங்கள் உருவாக்கி அது இன்று மிகப்பெரிய ஒரு ஊடகமாகவே வளர்ந்து நிற்கிறது.

பிளாக்குகள் என்று அழைக்கப்படும் வலைப்பதிவுத் தளங்கள் என்றாலே சிலருக்கு எரிச்சல் ஏற்படலாம். வெட்டியாகபொழுது போக்கும் நபர்களே வலைப்பதிவுகளில் எழுதுவார்கள் என்று கருதும் போக்கும் உள்ளது.
மாறாக வலைப்பதிவுத் தளங்களில் ஒரு விவகாரம் குறித்த கருத்துப் பகிர்வுகள் ஆரோக்கியமானதே என்று கருதும் போக்கும் உள்ளது. இவையெல்லாம் நாம் அறிந்ததே.

பிளாக்குகளை பொறுத்தவரை நாம் அறியாத பகுதி ஒன்றும் உள்ளது. அதாவது தங்களது வலைப்பதிவு தளங்கள் மூலம் வேலைவாய்ப்பு பெறுபவர்கள் எண்ணிக்கையும் தற்போது அதிகரித்து வருகிறது.

நாம் சாதரணமாக உருவாக்கும் பயோ-டேட்டா வெறும் ஒரு எழுத்து வடிவமாகவே உள்ளது. அதன் மூலம் உங்கள் ஆளுமைகள், எண்ணங்கள், சிந்தனைகள் ஆகியவற்றை ஒருவர் அறிய முடியாது.

ஆனால் வலைப்பதிவில் உங்கள் குரல் உலகம் முழுவதும் கேட்கிறது. உங்களின் அரிய குணங்கள், ஒரு பிரச்சினையை அணுகும் விதம், உங்கள் பணித்திறன் ஆகியவை உங்கள் வலைப்பதிவு மூலம் தெரிய வரும்போது, நல்ல வேலைக்கான சந்தர்ப்பங்களையும் அது உருவாக்கி விடுகிறது.

வலைப்பதிவுதான் தற்போது புது வடிவ பயோ-டேட்டா என்று கூறுகின்றனர் சில மேலை நாட்டு வலைப்பதிவாளர்கள்.

நிறுவனங்களும், வேலைவாய்ப்பு ஆலோசனை நிறுவனங்களும் தற்போது தேடல் எந்திரம் மூலம் பிளாக்குகளுக்கு வலை விரிக்கிறது. வலைப்பதிவுகள் ஒருவர் குணாதிசயத்தின் சாராம்சத்தை வெளிப்படுத்துகிறது.

மேலும் ஒருவரது சிந்தனைகள் வெளிப்படும் வலைத்தளத்திலிருந்து ஒரு நிறுவனத்தின் பணிப் பண்பாட்டிற்கு அந்த நபர் சிறந்தவரா இல்லையா என்று கண்டு கொள்ளலாம் என்று ஒரு மேலை நாட்டு வேலைவாய்ப்பு ஆலோசனை நிறுவனம் தெரிவித்துள்ளது.

அந்த நிறுவனம் சமீபமாக இரண்டு நபர்களை அவர்களது வலைப்பதிவுத் தளங்களை பார்த்தே பணித் தேர்வு செய்துள்ளது.

வேலை வாய்ப்பின் சிறந்த கருவியாக மாறும் வலைப்பதிவுத் தளங்கள் உங்களுக்கு பொருத்தமான நிறுவனத்தையும் அடையாளம் காட்டக்கூடியது. அதனால் வலைப்பதிவை நன்றாக பராமரிப்பது அவசியம். அனாவசியமான சச்சரவுகளையும் அக்கப்போர் பேச்சுக்களையும் பதிவு செய்வதை தவிர்த்து. ஆரோக்கியமான விஷயங்களை எழுதினால் வேலை வாய்ப்புக்கான ஒரு வாசலாகவே அது அமையும்.

தற்போது வேலைக்காகவே பிளாக் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பழக்கம் ஆங்காங்கே பெருகத் தொடங்கியுள்ளன.

படைப்பு பிடித்திருந்தால் தங்களின் கருத்துக்களை பகிருங்கள்.....

அடுத்த பிற‌வி பற்றி ஜோதிடத்தில் அறிய முடியுமா?


ஜோதிட சாஸ்திரத்தைப் பார்க்கும் போது முப்பிறவி, இப்பிறவி, மறுபிறவி என்ற அனைத்தையும் அறியமுடியும். அதில் எந்த மாற்றமும் இல்லை.

அதாவது லக்னாதிபதி யாருடன் சேர்ந்திருக்கிறார், யாருடைய பார்வை பெற்றிருக்கிறார் என்பதை வைத்து அவர் முற்பிறப்பில் என்னவாக இருந்திருப்பார், இந்த பிறவியில் அவரது செயல் எவ்வாறு இருக்கும் என்பதை அறிய முடியும்.

மேலும், ஏழேழு ஜென்மம் என்பதும் உண்டு. அணு ஜென்மம், கிரி ஜென்மம், புனர் ஜென்மம் என்பதும் உண்டு. லக்னாதிபதியை வைத்து ஜாதகருடைய மறுபிறவிகளை அறியலாம்.

12ம் இடம் மோட்சத்திற்குரிய இடம். மோட்சக்காரகன் கேது. பொதுவாக 12ம் இடத்தில் கேது இருந்தால் அவர்களுக்கு மறுபிறவி இல்லை. மோட்ச ஸ்தானத்தில் மோட்சக்காரகன் இருந்தால் மறுபிறவிக் கடலை நீந்தி மோட்சத்தை அடைவார்கள் என்று சொல்லப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் 12வது இடத்தில் கேது இருந்தாலோ அல்லது 12க்குரியவன் 12ம் இடத்திலேயே இருந்தாலும் மறுபிறவி இல்லை என்று கொள்ளலாம்.

5ம் இடம் பூர்வ புண்ணியஸ்தானம் என்று சொல்லப்படுகிறது. இதனால் 5ம் இடத்தை வைத்தும் முப்பிறவி, அடுத்த பிறவியைப் பற்றி அறியலாம்.

அதாவது லக்னாதிபதி எந்த கிரகத்தில் இருக்கிறது, லக்னாதிபதியை எந்த கிரகம் பார்க்கிறது, லக்னாதிபதியின் பார்வை எந்த கிரகத்தின் மீது இருக்கிறது என்பதை கணித்தால் அவர்களது முற்பிறப்பு, இப்பிறப்பு, மறுபிறப்பு பற்றி கணித்துவிடலாம். இந்தப் பிறவியில் ஒருவர் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதை முற்பிறவியை வைத்து அறிந்து கொள்ளலாம்.

ஆபத்தான இணையதளம்


இணையதளங்களை பயன்படுத்தும் போது வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிக்க Anti-virus மென்பொருட்கள் பல இருந்தாலும், அவற்றை அனைவரும் பயன்படுத்துவது இல்லை.

வைரஸ் ஒழிப்பு மென்பொருட்களைப் பயன்படுத்தும் பலரும் அதனை அவ்வப்போது மேம்படுத்தாமல் பழைய பதிப்பையே உபயோகித்து வருவதால், வைரஸ் தாக்குதல்கள் அடிக்கடி ஏற்படத்தான் செய்கிறது.

இது இப்படி இருக்க, அதிக ஆபத்தான இணையதளங்கள் எவை என்று மெக்கஃபீ (McAfee) நிறுவனம் சமீபத்தில் ஆய்வு நடத்தியது. இதில் ஹாங்காங், சீனா ஆகிய நாடுகளை சேர்ந்த இணையங்கள் முன்னணியில் உள்ளன.

.hk (ஹாங்காங்) மற்றும் .cn (சீனா) என்ற டொமைன் பெயருடைய இணையதளங்கள் முறையே 19.2 மற்றும் 11.8 சதவீதம் ஆபத்தானவை என மெக்கஃபீ கண்டறிந்துள்ளது.

இதற்கு அடுத்தபடியாக .info எனப்படும் தகவல் இணையதளங்களில் 11.7 சதவீதம் ஆபத்தானவை எனத் தெரியவந்துள்ளது.

இதில் சீனா மற்றும் ஹாங்காங் இணையங்களை பயன்படுத்துபவர்களுக்கு சம்பந்தப்பட்ட மொழி தெரிந்திருக்க வேண்டும். ஆனால் .info எனப்படும் தகவல் இணையதளங்களுக்கு மொழி ஒரு தடையாக இல்லாததால், இதனை பலரும் பயன்படுத்துகின்றனர். இதனால் ஏராளமான இணைய பார்வையாளர்கள் பாதிக்கப்படுவதாக இத்துறை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

உலகளவில் அதிகம் பயன்பாட்டில் உள்ள .com இணையதளங்களில் 5 சதவீதம் மட்டுமே ஆபத்தானவை என்பது ஆறுதலான விஷயம்.

Thursday, September 23, 2010

அந்த நாலு வயதுக் குழந்தை....!



அது ஒரு நாலு வயதுக் குழந்தை. ஆசை ஆசயாய் அந்தக் குழந்தையை அலங்காரம் செய்து பள்ளிக்கூடம் அனுப்பினாள் அம்மா. அந்தக் குழந்தைக்கு கொஞ்சம் காது மந்தம். ‘டாமி’ என்பது குழந்தையின் செல்லப் பெயர். மனம் நிறைய கனவுகளுடன் அந்தக் குழந்தையைப் பள்ளிக்கு அனுப்பிய தாயாருக்கு நெஞ்சு நிறைய சோகங்களை பரிசளித்தார் ஓர் ஆசிரியை. மூன்று மாதம் பள்ளிக்கூடம் சென்று வந்த அந்தக் குழந்தையின் சட்டைப்பையில் ஒரு காகிதத்தை திணித்து அனுப்பியிருந்தார் ஆசிரியை. “படிப்பதற்கு இலாயக்கற்ற முட்டாள் உங்கள் டாமி. இவனை இனிமேல் பள்ளிக்கு அனுப்பித் தொந்தரவு செய்ய வேண்டாம்” என்று அதில் எழுதியிருந்தது. குழந்தையை வாரி அணைத்துக் கொண்டு அந்தத் தாய் சொன்னாள், “என் மகன் அறிவாளி. நானே படிக்க வைப்பேன். அறிவாளி ஆக்குவேன்” என்று ஆவேசமாக அறிவித்தாள். “படிக்கலாயக்கில்லை” என்று முத்திரை குத்தப்பட்ட அந்த பையனைப் பற்றி, அவன் கண்டுபிடிப்புகள் பற்றி இன்றைக்குக் கூடப் பிள்ளைகள் படித்துக் கொண்டே இருக்கிறார்கள். அந்த முட்டாள் டாமிதான் 1093 கண்டுபிடிப்புகள் நிகழ்த்திய தாமஸ் ஆல்வா எடிசன். பள்ளிக்கூடம் போகாத பையனைப் பற்றி பள்ளிக்கூடம் பள்ளிக்கூடமாக இன்று பாடம் நடக்கிறது போதுமா? சாதாரண மனிதர்களே அசாதாரணர்கள்.
எடிசனுடைய அறுபத்து ஏழாவது வயதில் அவருக்கு நேர்ந்த விபத்து தாங்கக்கூடியதே அல்ல. பாடுபட்டு அவர் உருவாக்கிய பல லட்சம் பொறுமான அவரது ஆய்வுக்கூடம், தொழிற்சாலை பற்றி எரிந்தது. இன்ஷீரன்ஸ் தொகையோ அதிகம் வராது. பற்றி எரியும் தொழிற்கூடத்தைப் பார்த்து எடிசன் சொன்னார். “நல்லது. என் தவறுகள் யாவும் எரிந்து போயின. என் பிழைகள் யாவும் கருகிவிட்டன. இந்த அழிவிலும் ஒரு நன்மை இருக்கிறது. கடவுளுக்கு நன்றி. இனி ஒரு புதிய தொடக்கம் உண்டு” என்றார். இந்த தீ விபத்து நடந்த மூன்றே வாரத்தில் அவர் ‘போனோகிராப்’ என்பதைக் கண்டுபிடித்தார்

Tuesday, September 21, 2010

மைக்ரோசாப்ட் வழங்கும் புதிய ஆன்லைன் சேவைகள்



சிறிய மற்றும் நடுத்தர நிலையில் இயங்கும் நிறுவனங்களின் தகவல் தொழில் நுட்பம் மற்றும் தொலைதொடர்புக்கான செலவினப் பாதியாகக் குறைத்திடும் வகையில் பல்வேறு ஆன்லைன் வசதிகளை மைக்ரோசாப்ட் நிறுவனம் அண்மையில் அறிமுகப்படுத் தியுள்ளது. இந்த சேவைகளை இரண்டு மாதத்திற்கு
இலவசமாகப் பெற்றுப் பயன்படுத்திப் பார்த்துப் பின் தேவை எனில் கட்டணம் செலுத்திப் பெறலாம். வர்த்தக ரீதியில் இவை வரும் அக்டோபர் மாதம் முதல் கிடைக்கும். வர்த்தக நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்கள், அலுவலர்கள், தனி உரிமம் பெற்று இயங்குபவர்கள் ஆகியோரை 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு தங்கள் வர்த்தக தொடர்பான அலுவல்களை குறைந்த செலவில் மேற்கொள்ளும் வகையில் இந்த வசதிகள் தரப்படுகின்றன. இதனால் நிர்வாக மற்றும் உற்பத்தி செலவுகள் குறைந்து நிறுவனத்தின் செயல்திறன் கூடும். இமெயில் போக்குவரத்து, டிஜிட்டல் நெட்வொர்க், எக்சேஞ் ஆன்லைன், ஆபீஸ் ஷேர் பாய்ண்ட் ஆன்லைன், வீடியோ கான்பரன்சிங், ஆபீஸ் லைவ் மீட்டிங், எம்.எஸ். ஆபீஸ் கம்யூனிகேஷன்ஸ் ஆன்லைன் எனப் பல வசதிகள் தரப்படுகின்றன. ஒரு நிறுவனம் இவை அனைத்தையும் மொத்தமாகக் கேட்டு கட்டணம் செலுத்தி வாங்க வேண்டும் என்பதில்லை. தேவைப்படும் வசதிகளை மட்டும் பெறலாம். பயன்படுத்தும் வசதிகளுக்கு மட்டும் கட்டணம் செலுத்தும் வசதியும் உண்டு. தேர்ந்தெடுக்கப்பட்ட சாப்ட்வேர் அப்ளிகேஷன்களை எப்போதும் வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம். இவற்றைப் பெற்றுப் பயன்படுத்துகையில் தேவைப்படும் ஆலோசனைகளையும் உதவியையும் மைக்ரோசாப்ட் எந்நேரமும் வழங்குகிறது. இந்த திட்டத்தினைத் தற்காலிகமாக இலவசமாகப் பெற நீங்கள் அணுக வேண்டிய தள முகவரி: www.microsoft.com/india/onlineservices.

இந்த முகவரிக்குள் முதலில் லாக் இன் செய்திடவும். பின் உங்கள் நாடு என்ற பட்டியலில் இந்தியா என்பதைட்தேர்ந் தெடுத்துப் பின் உங்கள் லைவ் மெயில் ஐ.டி.யைத் தரவும். அடுத்து எந்த எந்த சேவைகள் வேண்டும் என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின் உங்களுக்கு எந்த எந்த சர்வீஸ் தரப்படுகிறது என்று அறிவிப்பு கிடைக்கும். அதன் பின் அவற்றைப் பயன்படுத்தலாம்.

இனிமேல் ஆண்ட்ராய்ட்

கூகுளின் ஸ்மார்ட் போனுக்கான ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைத் தங்கள் போன்களில் கொண்டுவர முன்னணி மொபைல் தயாரிப்பாளர்கள் முன்வந்துள் ளனர். எச்.டி.சி., சாம்சங், எல்.ஜி., மற்றும் மோட்டாரோலா ஆகிய நிறுவனங்கள் நகரங்களில் வாழும் இளைஞர்களை முன்னிறுத்தி ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் போன்களைக் கொண்டு வர இருக்கின்றன. மத்திய மற்றும் உயர் ரக போன் வரிசையில் இவை கிடைக்கும். எச்.டி.சி. நிறுவனம் தன் முதல் ஆண்ட்ராய்ட் போனை இந்தியாவிற்குக் கொண்டு வந்துள்ளது. சாம்சங் கேலக்ஸி என்ற பெயரில் முதல் ஆண்ட்ராய்ட் போனை அடுத்த மாதம் கொண்டு வர இருக்கிறது. எல்.ஜி. மற்றும் மோட்டாரோலா நிறுவனங்களின் போன்கள் டிசம்பரில் இங்கு கிடைக்கும்.

இது குறித்து கூகுள் இந்தியா இயக்குநர் கூறுகையில் உலக அளவில் 47 நிறுவனங்கள் ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் போன்களைத் தயாரிக்க ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன என்று கூறினார். வரும் டிசம்பரில் பன்னாட்டளவில் 15 முதல் 20 மாடல்கள் ஆண்ட்ராய்ட் சிஸ்டத்துடன் வரும். ஆண்ட்ராய் இன்டர்நெட் பிரவுசிங் மற்றும் டச் ஸ்கிரீன் பிரிவில் பல புதுமையான வசதிகளைத் தரும் சிஸ்டமாகும். தற்போது சிம்பியன் மற்றும் விண்டோஸ் மொபைல் சிஸ்டங்கள் மார்க்கட்டில் பயன்படுத்தப்படும் மொபைல் போன்களில் இயங்குகின்றன.

அடுத்ததாக ஆண்ட்ராய்ட் பெரிய அளவில் இடம் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக மொபைல் பயன்படுத்துபவர்கள் தங்கள் போன்களில் எந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்குகிறது என்று பார்ப்பதில்லை. அவர்களுக்கு நவீன புதிய ஆச்சரியப்படத்தக்க வகையில் வசதிகள் தரப்பட வேண்டும்; அவ்வளவுதான். இதனை ஆண்ட்ராயட் அவர்களின் எதிர்பார்ப்புக்கும் மேலாக நிறைவேற்றும் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர். மேலும் ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைப் பயன்படுத்த எந்த உரிமைத் தொகையையும் செலுத்த வேண்டியதில்லை என்பதால் மொபைல் போன்களின் விலை குறைய அதிக வாய்ப்புகள் உள்ளன. தற்போது எச்.டி.சியின் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன் ரூ.30,000க்கும் சாம்சங் ரூ. 29,000க்கும் விற்பனையாகின்றன. இன்னும் குறைவாக ரூ.10,000 முதல் ரூ.15,000 வரைக்குள்ளாக போன்கள் வெளியானால் தான் மார்க்கட்டைப் பிடிக்க முடியும்.

விண்டோஸ் 7ல் எக்ஸ்பி மோட்

விண்டோஸ் எக்ஸ்பியின் தீவிர ரசிகர்களை இணைத்தால் ஒரு நாடே உருவாக்கலாம். அந்த அளவிற்கு எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஒன்றே போதும் என இருப்பவர்கள் கோடிக்கணக்கானோர். அதனாலேயே விண்டோஸ் விஸ்டா, எக்ஸ்பி பிரபலமான அளவிற்கு உயரவில்லை. இப்போது விண்டோஸ் 7 வர இருக்கிறது. மைக்ரோசாப்ட் அண்மையில் விண்டோஸ் எக்ஸ்பி ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தியைச் சொல்லி உள்ளது.விண்டோஸ் 7 தொகுப்பில் விண்டோஸ் எக்ஸ்பி மோட் வசதி தரப்படும். இதன் மூலம் விண்டோஸ் எக்ஸ்பியில் இயங்கி விண்டோஸ் 7ல் இயங்க மறுக்கும் புரோகிராம் ஒன்றினை விண்டோஸ் எக்ஸ்பி மோட் பெற்று இயக்க முடியும். இதன் மூலம் மக்களை விண்டோஸ் எக்ஸ்பியிலிருந்து விலகி விண்டோஸ் 7 தொகுப்பிற்கு வரச்சொல்கிறது மைக்ரோசாப்ட்.

ஆனால் இதில் ஒரு கெட்ட செய்தியையும் தந்துள்ளது. இந்த விண்டோஸ் எக்ஸ்பி மோட் விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் அனைத்து பதிப்புகளிலும் கிடைக்காது. புரபஷனல் மற்றும் அல்டிமேட் பதிப்புகளில் மட்டுமே கிடைக்கும். எனவே அதிகமானோர் வழக்கமாகப் பயன்படுத்தும் ஹோம் எடிஷன்களில் இது இருக்காது. மைக்ரோசாப்ட் இதனைக் கருத்தில் கொண்டு அனைத்து பதிப்புகளிலும் தரும் என்று எதிர்பார்க்கலாம்.

படைப்பு பிடித்திருந்தால் தங்கள் கருத்துக்களை கூறவும். நன்றி

Sunday, September 19, 2010

யாஹுவுடன் கை குலுக்கியது மைக்ரோசாப்ட்


பல மாதங்களாக நீடித்து வந்த இழுபறி நிலையை மைக்ரோசாப்ட் மற்றும் யாஹூ நிறுவனங்கள் ஒரு பத்தாண்டு ஒப்பந்தத்தினைப் போட்டு முடிவிற்குக் கொண்டு வந்துள்ளன. தேடல் இஞ்சின் தொழில் நுட்பத்திலும் அதனைச் சார்ந்த விளம்பர வர்த்தகத்திலும் கூகுள் கொண்டிருக்கும் முதல் இடத்தை அசைத்துப் பார்ப்பதற்காகவே இந்த ஒப்பந்தம் இருக்குமோ என்ற எண்ணம் இணைய
உலகில் அனைவருக்கும் எழுந்துள்ளது.

தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ள ஒப்பந்தப்படி மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பிங் சர்ச் இஞ்சினைத் தன் தளத்தில் யாஹூ பயன்படுத்திக் கொள்ளும். அத்துடன் விளம்பர இட விற்பனையை உலக அளவில் மேற்கொள்ளும் உரிமையை யாஹூ மட்டுமே பெறுகிறது.

யாஹூ நிறுவனம், அதன் பயனாளர்கள் மற்றும் இணைய வர்த்தகச் சந்தை ஆகிய அனைத்திற்கும் பல பயன்களை இந்த ஒப்பந்தம் தரும் என்று யாஹூ நிறுவன தலைவர் அறிவித்துள்ளார். மைக்ரோசாப்ட் நிறுவனத்தலைவர் பால் ஸ்டீமர் இது குறித்து கருத்து தெரிவிக்கையில் இரு நிறுவனங்களும் வெற்றி அடையும் ஒரு இனிய ஒப்பந்தம் இது என்று குறிப்பிட்டார்.

மைக்ரோசாப்ட் நிறுவனம் யாஹூ நிறுவனத்தின் சர்ச் இஞ்சின் தொழில் நுட்பத்தினைப் பத்து ஆண்டுகளுக்குப் பயன்படுத்த தனி உரிமையினைப் பெறுகிறது. இதனைத் தன் தளங்களில் இயங்கி வரும் சர்ச் இஞ்சின் தொழில் நுட்பத்துடன் ஒருங்கிணைத்து பயன்படுத்தும். 18 மாதங்களுக்கு முன்புதான் யாஹூவை எடுத்துக் கொள்ள மைக்ரோசாப்ட் தன் முதல் அஸ்திரத்தை வீசியது. பிப்ரவரி 1, 2008 அன்று 4,460 கோடி டாலருக்கு விலை பேசியது. இது யாஹூவைப் பெரிய அளவில் உலுக்கியது. அதன் தலைவர் இடத்தில் புதிய ஒருவர் பொறுப்பேற்றார். மூன்று புதிய இயக்குநர்கள் நியமிக்கப்பட்டனர்.

இருப்பினும் திரை மறைவில் இந்த இரு நிறுவனங்களும் தொடர்ந்து உறவாடிக் கொண்டு தான் இருந்தன என்று பலரும் பேசிக் கொண்டிருந்தனர். எல்லாம் எதற்காக? இணையத் தொழில் நுட்பத்தில் மாபெரும் சக்தியாக உருவெடுத்துள்ள கூகுள் நிறுவனத்தை அதன் இடத்திலிருந்து இறக்கத்தான் இந்த ஏற்பாடுகள். தற்போது வந்த ஒப்பந்த அறிவிப்பு இதனை உறுதிப்படுத்தியுள்ளது. இதுவரை தனி ஒரு சர்ச் இஞ்சின் நிறுவனமாக இயங்கி வந்த யாஹூ அந்த அடையாளத்தினை இந்த ஒப்பந்தம் மூலம் முறித்துக் கொண்டுவிட்டது.

மைக்ரோசாப்ட் முதலில் அறிவித்த பங்கு முதலீட்டினை ஜெர்ரி யாங் காட்டமாக மறுத்துத் தன் நிறுவனத்தைக் காப்பாற்ற அதி தீவிர முயற்சிகள் எடுத்தார். இதனைத் தொடர்ந்து அடுத்து பங்குகளைக் கொண்டிருந்த கார்ல் தன் பக்கத்திற்கு மூன்று இயக்குநர் இடங்களைப் பிடித்தார். தாக்குப் பிடிக்க முடியாத ஜெர்ரி யாங் தலைவர் பதவிலியிருந்து இறங்க கேரல் பார்ட்ஸ் யாஹூவின் தலைமை நிர்வாக அதிகாரியானார்.

ஒரு பெண்ணுக்குரிய நிதானம் மற்றும் வேகத்துடன் சிந்திக்கத் தொடங்கி கேரல் பல நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கினார். தொடர்ந்து பேச்சு வார்த்தை நடந்து கொண்டே இருந்தது. இதற்கு வலுவான காரணமும் இருந்தது. மைக்ரோசாப்ட் நிறுவனத்திடம் தேவையான பணமும் இருந்தது; தேவைகளும் இருந்தன. இந்த பிரிவில் உயரச் செல்ல ஆசையும் இருந்தது. யாஹூ ஏற்கனவே உயரத்தில் இருந்ததால் அதனைப் பிடிக்க மைக்ரோசாப்ட் திட்டமிட்டது. அதே நேரத்தில் யாஹூ தன் செலவுகளைக் குறைக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருந்தது. வெளியிலிருந்து சர்ச் இஞ்சின் தொழில் நுட்பத்தினைப் பெற்றால் ஆண்டுக்கு 50 கோடி டாலர் மிச்சம் பிடிக்க முடியும் என்று பார்ட்ஸ் கருதினார். இன்றைய ஒப்பந்தம் குறித்துப் பேசுகையில் அனைவரும் இந்த பணம் மிச்சமாவதனையே குறிப்பிட்டனர்.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பிங் சர்ச் இஞ்சின் தொழில் நுட்பத்தின் திறனும் தன்மையும் உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது. எனவே இது யாஹூ நிறுவனத்திற்கு பெரிய உறுதுணையாக இருக்கும். இப்போதைய ஒப்பந்தம் யாஹூவின் பணிக் கலாச்சாரத்தில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். கடந்த 18 மாதங்களாகத் தன் சர்ச் இஞ்சின் தொழில் நுட்பத்தில் மாற்றங்களை ஏற்படுத்தி முன்னேற்றப் பாதையினைப் பார்க்க உழைத்துக் கொண்டிருந்த யாஹூ திடீரென இன்னொரு நிறுவனம் அமைத்த தொழில் நுட்பத்தினைத் தழுவிக் கொண்டுள்ளது.

இந்த ஒப்பந்தம் இரண்டு நிறுவனங்களுக்குமே ஒரு புதிய பாதையைக் காட்டியுள்ளன. ஒவ்வொரு மாதமும் தன் தளத்தில் வந்து தேடும் 30 கோடி வாடிக்கையாளர்களுக்குத் தொடர்ந்து சேவை அளித்துத் தக்க வைக்க வேண்டிய நிலையில் யாஹூ உள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விளம்பரங்களையும் விற் பனை செய்திடும் உரிமை யாஹூவிற்குப் பெரிய அளவில் கை கொடுக் கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

படைப்பு பிடித்திருந்தால் மறக்காம ஒட்டு போடுங்க......

Friday, September 17, 2010

Wi-Fi தொழில்நுட்பம் ஏற்படுத்தியுள்ள அச்சுறுத்தல்கள்!

"ஒயர்லெஸ் ஃபிடெலிடி" என்ற தொழில் நுட்பம்தான் Wi-Fi தொழில் நுட்பம் என்றுஅழைக்கப்படுகிறது. லோக்கல் ஏரியா நெட்வொர்க் (LAN)) என்று அழைக்கப்படும்நெட்வொர்க்குகளின் ஒரு சில வகைகள் Wi-Fi தொழில் நுட்பம் என்றுஅழைக்கப்படுகிறது. அதாவது நெட்வொர்க்குகளுக்கும், கணினி, இணையதளஇணைப்புகளுக்குமான கம்பிவட தொழில் நுட்பத்திற்கு அடுத்தகட்டமாக இந்தகம்பியற்ற இணைப்புத் தொழில்நுட்பம் தற்போது வெகு வேகமாகபரவலாகிவருகிறது.

முறையான பாதுகாப்பு, தடுப்பு ஏற்பாடுகள் இல்லையெனில், Wi-Fi நெட்வொர்க்கை யார் வேண்டுமானாலும் அனுமதியின்றி பயன்படுத்தி எந்தவிதமான நாசவேளைகளிலும் ஈடுபடலாம் என்பதே தற்போது எழுந்துள்ள அச்சம்.

இந்தியா தற்போது தகவல் தொடர்பியலில் புரட்சியை எதிகொண்டு வருகிறது. மிகப்பெரிய செல்பேசி சந்தையாக இந்தியா வளர்ந்து வரும் நிலையில் இந்ததொழில் நுட்பமும் இந்தியாவில் அதிக வளர்ச்சியை பெறும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய வர்த்தகத் துறைகளில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள், இதனால் மக்கள்வாழ்முறைகளில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவற்றால் கணினிகள், லேப்டாப்கள், அடுத்த தலைமுறை அதி தொழில் நுட்ப ஸ்மார்ட் ஃபோன்கள் மற்றும்பிற கைவழி பயன்பாட்டு மின்னணுக் கருவிகளின் தேவை கணிசமாக பெருகிவருகிறது. இதனுடன் சேர்ந்து 24 மணி நேர இணைப்புச் சேவை, பரவலானவிரிவலை (பேண்ட்வித்) ஆகியவற்றிற்குமான தேவைகளும் கூடி வருகிறது.

இந்த மாற்றங்களுக்கு ஈடுகொடுக்ககூடிய ஒரு தொழில் நுட்பமான Wi-Fi தொழில்நுட்பம் தற்போது இந்திய கார்ப்பரேட் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், வீடுகள் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்கள் ஆகியவற்றில்விரும்பத்தகுந்த ஒரு இணைப்புத் தொழில்நுட்பமாக அசுர வளர்ச்சி கண்டுள்ளது.



இந்த தொழில் நுட்பத்தை உருவாக்கிய Wi-Fi அலையன்ஸ் நிறுவனத்தின்கணிப்பின்படி தற்போது Wi-Fi தொழில் நுட்பத்திற்கான இந்திய சந்தை 270 மில்லியன் டாலர்கள். 2011-12ஆம் ஆண்டுவாக்கில் இது 900 மில்லியன் டாலர்கள்சந்தையாக வளர்ச்சியடையும்.

ஆனால்... இந்த தொழில் நுட்பம் பல பாதுகாப்பு கவலைகளையும், அச்சுறுத்தல்களையும் அளிக்க துவங்கியுள்ளது. சமீபத்தில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு குறித்து விசாரணை மேற்கொள்கையில், பாதுகாப்பு நிறுவனங்கள், இதற்கு காரணமான ஒரு மின்னஞ்சலை கண்டுபிடித்துள்ளது. அதனை பின்பற்றிச்செல்கையில் கென் ஹேவுட் என்ற அமெரிக்க குடிமகனின் கணினிக்குஇட்டுச் சென்றுள்ளது.


அதாவது அந்த அமெரிக்கக் குடிமகனின் கணினி ஹேக் செய்யப்பட்டு அதன்வழியாக இந்த மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வந்தாலும், இந்த தொழில் நுட்பம்நம்மிடையே சில கேள்விகளையும் சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ளது.


அதாவது சரியாக கண்காணிக்கவில்லையெனில், Wi-Fi நெட்வொர்க்கில் உள்ளகுறைபாடுகளினால் ஹேக்கர்கள் எந்த ஒரு கணினி நெட்வொர்க்கிலும் புகுந்துநாச வேலைகளில் ஈடுபடமுடியும். இதனால் இதன் பயனாளர்களுக்குவிழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டிய கட்டாயம் பிறந்துள்ளது .


இதற்காக, வெள்ளை அறிக்கை ஒன்றையும் மஹிந்திரா ஸ்பெசல் சர்வீசஸ்குழுமம் (MSSG) வெளியிட்டுள்ளது. அதன் முக்கிய அம்சங்களைப் பார்ப்போம்: "சிறப்பான பாதுகாப்பு செயல்முறைகள் - Wi-Fi -யின் அபாயங்கள் என்று arஅந்தவெள்ளை அறிக்கை தலைப்பிடப்பட்டுள்ளது.

Wi-Fi தொழில் நுட்பத்தினால் இணையதளம் உள்ளிட்ட இணைப்புகளில்நடந்துள்ள புரட்சிகள் கார்ப்பரேட் நிறுவனங்கள் முதல் வீடுகள் வரை அதன் மீது ஈர்ப்பை அதிகரித்துள்ளது. அதன் பயனும், திறனும் மற்ற கம்பிவட இணைப்பு நெட்வொர்க்குகளை விட அதிகமானது. ஆனால் இது எவ்வளவு பயனுள்ளதோ அந்த அளவிற்கு பாதுகாப்பு அபாயங்கள் நிறைந்தது. எனவே இந்த குறிப்புகள் சிறந்த தடுப்பு உத்திகளை மேற்கொள்ள பயனுள்ளதாக அமையும்.

கம்பியற்ற இணைப்பு உங்கள் நெட்வொர்க்கை அடைய ஒரு பின்வாசல் வழி!

ஒயர்லெஸ் ஆக்சஸ் கார்டுகளின் மூலம் இயங்கும் லேப் டாப்கள், தானியங்கி இணைப்பு அமைப்புகள் ஆகியவை தற்போது பெருகி வருகிறது. அதாவது ஒயர்லெஸ் இணைப்பு பெற்றுள்ளவர்கள் தகவல்களை வான்வழியாக அனுப்புவதால், அதனை ஹேக் செய்வது சுலபம், அதாவது யார்வேன்டுமானாலும் அதனை பார்க்க முடியும். இதானல் ஹேக்கர்கள் எங்கிருந்தபடி வேண்டுமானாலும் நிறுவனங்களின் நெட்வொர்க்குகள் மட்டுமல்லாது ஒரு நாட்டின் பாதுகாப்பை தீர்மானிக்கும் ராணுவ சம்பந்தமான விஷயங்களையும் தகவல்களையும் வெளியிலிருந்தே அணுக முடியும்.


என்ன தவறு ஏற்பட முடியும்?

எதேச்சையாக அணுகுதல், அதாவது இதில் ஒரு பயனாளர் அடுத்ததாக உள்ளஒரு நிறுவனத்தின் ஊடுருவும் ஒயர்லெஸ் நெட்வொர்க் மூலம் ஒயர்லெஸ்அணுகல் புள்ளியைக் கைப்பற்றி அங்கிருந்து தகவல்களை திருடி என்னவேண்டுமானாலும் செய்யலாம்.

கெட்ட நோக்கத்துடன் அணுகுதல், இதில், ஹேக்கர்கள் ஒரு பொய்யானஅணுகல் இடங்களிலிருந்து தாங்கள் உருவாக்கிய ஒயர்லெஸ் கருவிகள் மூலம்எந்த ஒரு நெட்வொர்க்கையும் ஆட்கொண்டு, அதன் வழி செல்லும் தகவல்களைதிருடுவது.


தற்காலிக நெட்வொர்க்குகள், இதில் ஒயர்லெஸ் கணினிகளுக்கிடையே இணைப்பை ஏற்படுத்துவது, அதாவது ஒயர்லெஸ் அணுகல் இடம் என்ற ஒன்றுஇல்லாமலேயே.

உங்கள் ஒயர்லெஸ் அணுகல் புள்ளி ஒரு குறிப்பிட்ட பகுதியை பரவலாகக்கொண்டு இயங்குவதால் நீங்கள் ஒயர் மூலம் அனுப்பும் செய்திகள் மற்றும்கார்ப்பரேட் தரவுகளை (datas) தொலைதூரத்திலிருந்தே அணுக முடிவது.

இதனைத் தடுக்க உடனடியாக செய்ய வேண்டியது என்ன?

* ஒயர்லெஸ் கருவி அட்மினிஸ்ட்ரேட்டர் தான்தோன்றி கடவுச்சொல்லைஉடனடியாக மாற்றவும். உதாரணமாக ரீ செட் 123 அல்லது அது போன்ற பிறபொதுவான கடவுச்சொல் தானாகவே உங்கள் கணினியில் இருந்தால் அதனைஉடனடியாக மாற்றி வேறு கடவுச்சொல்லை வைக்கவும்.

* உங்கள் ஒயர்லெஸ் கருவி பயன்படுத்தக்கூடிய WPA/WEP பாதுகாப்புகுறியேற்றங்களை எப்போதும் இயக்கத்தில் வைத்திருக்கவும்.

* பயனில் இல்லாத போது Wi-Fi மீடியாவின் இயக்கத்தை நிறுத்தி வைப்பது நல்லது. அல்லது பிளக்கை பிடிங்கி வைப்பதும் சிறந்தது.


* MAC முகவரி வடிக்கட்டி அமைப்பை ஏற்படுத்தி அதிகாரபூர்வ கருவிகளுக்குமட்டுமே இணைப்பை அனுமதிக்கவும்.

* தானாகவே உள்ள சர்வீஸ் செட் ஐடென்டிஃபையர் (எஸ்.எஸ்.ஐ.டி.)ஐ உடனடியாகமாற்றவும்.


* தேவையில்லை என்றால் எஸ்.எஸ்.ஐ.டி. ஒலிபரப்புகளை நிறுத்தி விடுங்கள்.

* திறந்த Wi-Fi நெட்வொர்க்குகளை தானாகவே இணைக்கும் அமைப்பின்இயக்கத்தை நிறுத்தி வைக்கவேண்டும்.


* உங்கள் ஒயர்லெஸ் பாதைகள் அனைத்திலும் ஃப்யர்வால்களை (Firewalls) உருவாக்கவும்.


* உங்கள் வளாகத்தின் மையப்பகுதியில் உங்கள் ஒயர்லெஸ் அணுகள் இடத்தைவையுங்கள். சுவற்றிலோ மூலைகளிலோ வைத்தால் கசிவுகள் ஏற்படும்.


இந்த குறிப்புகள், தனிப்பட்ட பயனர்களுக்கு ஓரளவிற்கு பொருந்தகூடியது. நிறுவனஙளும், அமைப்புகளும் இதனை பரந்துபட்ட அளவில்மேற்கொள்ளவேண்டியிருக்கும். ஒரே படித்தான பாதுகாப்பு முறைகளை இவைகடைபிடிக்க வேண்டும்.

என்ன தொழில் நுட்பத்தை கண்டுபிடித்தாலும், அதனை உடைத்து உள் நுழையும்தொழில் நுட்பத்தை இந்த தொழில் நுட்பங்களிலிருந்தே கண்டுபிடித்துவிடமுடிகிறது என்பதே இதன் மையப் பிரச்சனை. என்று தணியும் இந்தவலைப்பின்னல் பாதுகாப்பு தாகம்?


பதிவு பிடித்திருந்தால் மறக்காம ஒட்டு போட்டுட்டு போங்க

Wednesday, September 15, 2010

பிளாக்பெரியை தொடர்ந்து கூகுளுக்கும் நோட்டீஸ்: மத்திய அரசு முடிவு




புதுதில்லி: பிளாக்பெரியைத் தொடர்ந்து கூகுள் மற்றும் ஸ்கைப் நிறுவனங்ளுக்கும் நோட்டீஸ் அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

பிளாக்பெரி தொலைபேசிகள் மூலமாக அனுப்பப் படும் குறுஞ்செய்திகள் மற்றும் மின்னஞ்சல்களை மூன்றாவது நபர் யாரும் கண்காணிக்க முடியாது. இதை பயன் படுத்தி தீவிரவாதிகள் நாச வேலைகளில் ஈடுபடக் கூடும் என்பதால், அந்த கைபேசிகளை தடை செய்ய மத்திய அரசு முடிவு செய்திருந்தது.

ஆனால், பிளாக்பெரி கைபேசிகளில் இருந்து அனுப்பப் படும் தகவல்களை மத்திய அரசு கண்காணிக்க ஏதுவாக இந்தியாவில் சர்வர் அமைக்கப் படும் என அந்நிறுவனம் அண்மையில் அறிவித்தது. இதனையடுத்து, பிளாக்பெரி கைபேசிகளை தடை செய்ய அரசு நிர்ணயித்திருந்த கால கெடு 2 மாதங்களுக்கு நீட்டிக்கப் பட்டது.

இந்நிலையில், கூகுள் மற்றும் ஸ்கைப் நிறுவனங்களுக்கும், இந்தியாவில் சர்வர் அமைக்க கோரி நோட்டீஸ் அனுப்பப் படும் என உள்துறை செயலர் ஜி.கே.பிள்ளை தெரிவித்துள்ளார். ஆனால், எப்பொழுது நோட்டீஸ் அனுப்பப் படும் என்பதை அவர் கூறவில்லை.

படைப்பு பிடித்திருந்தால் தவறாமல் ஒட்டு போட்டு தங்கள் அன்பை தெரிய படுத்தவும்.

Tuesday, September 14, 2010

தேவையற்ற அழைப்புகளை தடுக்க விரைவில் புதிய விதிமுறைகள்: ட்ராய்



ஐதரபாத்: தேவையற்ற வியாபார அழைப்புகளை தடுக்க விரைவில் புதிய விதிமுறைகளை அறிமுகப் படுத்தப் போவதாக தகவல் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) அறிவித்துள்ளது.

நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, ஒரு முக்கியமான கூட்டத்தில் இருந்த போது அவரது அலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது. பிரணாப் முகர்ஜி அழைப்பை ஏற்று பேசியவுடன், 'உங்களுக்கு கடன் வேண்டுமா?' என்று ஏதோ ஒரு வங்கியில் இருந்து கேட்டுள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து இதை போன்ற வியாபார அழைப்புகளை தடுக்க தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ராசா உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டார்.

தற்போது, இதைப் போன்ற வியாபார அழைப்புகளை தடுக்க புதிய விதிமுறைகளை விரைவில் அறிமுகப் படுத்தப் போவதாக ட்ராய் அறிவித்துள்ளது.

இது குறித்து நேற்று (செப்.6) ஐதரபாத்தில் செய்தியாளர்களிடம், ட்ராய் தலைவர் டாக்டர். ஜே.எஸ்.ஷர்மா கூறுகையில், "தேவையற்ற அழைப்புகளையும், குறுஞ்செய்திகளையும் (SMS) தடுப்பது குறித்து ஆலோசனை நடத்தியுள்ளோம். இதற்கான விதிமுறைகளை இறுதி செய்யும் நிலையில் உள்ளோம். இந்த மாத இறுதிக்குள் புதிய விதிமுறைகளை அறிமுகப் படுத்துவோம்." என்றார்.

Saturday, September 11, 2010

நெருப்பு நரி உலாவி தரும் பனோரமா டேப் மேனேஜர்

வர இருக்கும் பயர்பாக்ஸ் பிரவுசர் தொகுப்பு 4ன், நான்காவது சோதனைத் தொகுப்பு வெளியாகியுள்ளது. இதில் பிரவுசரில் உள்ள டேப்களைக் கையாள்வதற்கு பனோரமா என்னும் டேப் நிர்வாக வசதி தரப்பட்டுள்ளது இதன் ஒரு சிறப்பாகும். இதன் மூலம் டேப்களில் உள்ள தளங்களைச் சிறிய காட்சிகளாகக் கண்டு, அவற்றை எளிதாகப் பயனாளர்கள் கையாள முடியும். இப்போதைய நிலையில் பயர்பாக்ஸ் பிரவுசரில், அதிகமான எண்ணிக்கையில் டேப்கள் திறக்கப்படுகையில், எதில் எந்த தளம் உள்ளது என்ற குழப்பம் நமக்கு ஏற்படுகிறது. ஒரு தளத்தின் தொடர்பு தளங்கள் திறக்கப்படுகையில், அவை டேப் அளவில் ஒன்றாகவே தெரிகின்றன. இந்த சிக்கலைத் தீர்க்க, அவற்றைக் காட்சித் தோற்றமாக இந்த புதிய வசதி காட்டுகிறது. டேப்கள் இப்போது மேக் கம்ப்யூட்டர் சிஸ்டத்தில் உள்ள எக்ஸ்போஸ் (Expose) போலக் காட்சி அளிக்கின்றன. முன்பு இந்த வசதி டேப் கேண்டி (Tab Candy) என அழைக்கப்பட்டது. மிக அதிகமான எண்ணிக்கையில் பல்வேறு தளங்களை, டேப்கள் மூலம் பயன்படுத்துபவர்களுக்கு இந்த வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
தளங்களை குழுவாகவும் பிரித்து இணைத்து வைத்துப் பயன்படுத்தலாம். ஒவ்வொரு டேப்பும் ஒரு சிறிய படமாகக் காட்சி அளிக்கிறது. இவற்றைக் குழுவாக ஒரு சிறிய சதுரத்தில் அடைக்கலாம். இந்த சதுரங்களையும் அவற்றில் உள்ள டேப்களையும் மாற்றிக் கொள்ளலாம். இந்த காட்சித் தோற்றத்தின் மூலம் எந்த தளம் எந்த டேப்பில் திறக்கப்பட்டுள்ளது என்பதனைத் தெளிவாக அறிந்து கொள்ளலாம். பனோரமா தோற்றத்தினை, வலது மேல் மூலையில் உள்ள பட்டனை அழுத்திப் பெறலாம். இது “Feedback”பட்டனுக்குச் சற்று மேலாகத் தரப்பட்டுள்ளது. இந்த வசதி இப்போது ஆப்பரா பிரவுசரில் கிடைக்கிறது. தற்போது பிரவுசர் தொகுப்பு களுக்கிடையே ஏற்பட்டுள்ள போட்டியினால், பயர்பாக்ஸ் பிரவுசரில் இந்த வசதி சற்று மேம்படுத்தலுடன் தரப்பட்டுள்ளது. அடுத்த வசதி Firefox Sync இது முன்பு Weave என அழைக்கப்பட்டு வந்தது. இதன் மூலம் உங்களுடைய பாஸ்வேர்ட், புக் மார்க், ஹிஸ்டரி, படிவத்திற்கான தகவல்கள், திறக்கப்பட்டுள்ள டேப்கள், மற்றும் இவை உள்ள பட்டைகள், இணைக்கப்படும் ஐபோன் போன்ற சாதனங்கள் குறித்த தகவல் குறிப்புகளை, ஒருங்கிணைத்துப் பெறலாம். இந்த வசதி ஏற்கனவே ஓர் ஆட் ஆன் தொகுப்பு மூலம் தரப்பட்டு வந்தது. இதனைப் பலரும் விரும்பிப் பயன்படுத்தியதாலும், அதிகப் பயன் கொண்டதாக இருந்ததாலும், மொஸில்லா இதனை, பயர்பாக்ஸ் தொகுப்பின் ஓர் அங்கமாகத் தற்போது தந்துள்ளது. ஆனால் இந்த வசதியினைப் பயன்படுத்த, உங்களுக்கு Firefox Sync அக்கவுண்ட் ஒன்று வேண்டும். அப்போது தான், உங்கள் தகவல்கள் அனைத்தையும், எங்கிருந்து வேண்டுமானாலும் நீங்கள் பயன்படுத்த முடியும். இது தற்போது அதிகம் பேசப்பட்டு வரும் கிளவுட் கம்ப்யூட்டிங் போலச் செயல்படும் வசதி ஆகும். இது குறித்த மேலதிகத் தகவல்களுக்கு http://www.mozilla.com/firefox/sync/ என்ற முகவரியில் உள்ள தளத்தினைப் பார்க்கவும்.
இணைய உலாவிப் பதிப்புகள் அனைத்துமே, தற்போது கண்களையும் மனதையும் கவர்ந்திழுக்கும் வண்ணம் அமைக்கப்படுகின்றன. அதற்கேற்ற வகையில், ராம் மெமரி, கிராபிக்ஸ் கார்டு திறன் மற்றும் இணைந்த, இயைந்த சாதனங்கள் கிடைக்கின்றன. பயர்பாக்ஸ் சோதனைத் தொகுப்பு 4ன் இந்த வசதிகள் இவற்றை அடிப்படையாகக் கொண்டே அமைக்கப்பட்டிருக்கின்றன. நீங்களும் இதனை இன்ஸ்டால் செய்து பயன்படுத்திப் பார்த்து மகிழலாம். உங்கள் கருத்தினை எங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
இந்த தொகுப்பினை click here என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து இலவசமாக டவுண்லோட் செய்திடலாம். இந்த தொகுப்பு உலகின் 35 மொழிகளில் கிடைக்கிறது.

Friday, September 10, 2010

உஷாரய்யா உஷாரு: நெருப்பு நரி உலாவி தரும் பனோரமா டேப் மேனேஜர்

உஷாரய்யா உஷாரு: நெருப்பு நரி உலாவி தரும் பனோரமா டேப் மேனேஜர்: "வர இருக்கும் பயர்பாக்ஸ் பிரவுசர் தொகுப்பு 4ன், நான்காவது சோதனைத் தொகுப்பு வெளியாகியுள்ளது. இதில் பிரவுசரில் உள்ள டேப்களைக் கையாள்வதற்கு ..."

நெருப்பு நரி உலாவி தரும் பனோரமா டேப் மேனேஜர்




வர இருக்கும் பயர்பாக்ஸ் பிரவுசர் தொகுப்பு 4ன், நான்காவது சோதனைத் தொகுப்பு வெளியாகியுள்ளது. இதில் பிரவுசரில் உள்ள டேப்களைக் கையாள்வதற்கு பனோரமா என்னும் டேப் நிர்வாக வசதி தரப்பட்டுள்ளது இதன் ஒரு சிறப்பாகும். இதன் மூலம் டேப்களில் உள்ள தளங்களைச் சிறிய காட்சிகளாகக் கண்டு, அவற்றை எளிதாகப் பயனாளர்கள் கையாள முடியும். இப்போதைய நிலையில் பயர்பாக்ஸ் பிரவுசரில், அதிகமான எண்ணிக்கையில் டேப்கள் திறக்கப்படுகையில், எதில் எந்த தளம் உள்ளது என்ற குழப்பம் நமக்கு ஏற்படுகிறது. ஒரு தளத்தின் தொடர்பு தளங்கள் திறக்கப்படுகையில், அவை டேப் அளவில் ஒன்றாகவே தெரிகின்றன. இந்த சிக்கலைத் தீர்க்க, அவற்றைக் காட்சித் தோற்றமாக இந்த புதிய வசதி காட்டுகிறது. டேப்கள் இப்போது மேக் கம்ப்யூட்டர் சிஸ்டத்தில் உள்ள எக்ஸ்போஸ் (Expose) போலக் காட்சி அளிக்கின்றன. முன்பு இந்த வசதி டேப் கேண்டி (Tab Candy) என அழைக்கப்பட்டது. மிக அதிகமான எண்ணிக்கையில் பல்வேறு தளங்களை, டேப்கள் மூலம் பயன்படுத்துபவர்களுக்கு இந்த வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
தளங்களை குழுவாகவும் பிரித்து இணைத்து வைத்துப் பயன்படுத்தலாம். ஒவ்வொரு டேப்பும் ஒரு சிறிய படமாகக் காட்சி அளிக்கிறது. இவற்றைக் குழுவாக ஒரு சிறிய சதுரத்தில் அடைக்கலாம். இந்த சதுரங்களையும் அவற்றில் உள்ள டேப்களையும் மாற்றிக் கொள்ளலாம். இந்த காட்சித் தோற்றத்தின் மூலம் எந்த தளம் எந்த டேப்பில் திறக்கப்பட்டுள்ளது என்பதனைத் தெளிவாக அறிந்து கொள்ளலாம். பனோரமா தோற்றத்தினை, வலது மேல் மூலையில் உள்ள பட்டனை அழுத்திப் பெறலாம். இது “Feedback”பட்டனுக்குச் சற்று மேலாகத் தரப்பட்டுள்ளது. இந்த வசதி இப்போது ஆப்பரா பிரவுசரில் கிடைக்கிறது. தற்போது பிரவுசர் தொகுப்பு களுக்கிடையே ஏற்பட்டுள்ள போட்டியினால், பயர்பாக்ஸ் பிரவுசரில் இந்த வசதி சற்று மேம்படுத்தலுடன் தரப்பட்டுள்ளது. அடுத்த வசதி Firefox Sync இது முன்பு Weave என அழைக்கப்பட்டு வந்தது. இதன் மூலம் உங்களுடைய பாஸ்வேர்ட், புக் மார்க், ஹிஸ்டரி, படிவத்திற்கான தகவல்கள், திறக்கப்பட்டுள்ள டேப்கள், மற்றும் இவை உள்ள பட்டைகள், இணைக்கப்படும் ஐபோன் போன்ற சாதனங்கள் குறித்த தகவல் குறிப்புகளை, ஒருங்கிணைத்துப் பெறலாம். இந்த வசதி ஏற்கனவே ஓர் ஆட் ஆன் தொகுப்பு மூலம் தரப்பட்டு வந்தது. இதனைப் பலரும் விரும்பிப் பயன்படுத்தியதாலும், அதிகப் பயன் கொண்டதாக இருந்ததாலும், மொஸில்லா இதனை, பயர்பாக்ஸ் தொகுப்பின் ஓர் அங்கமாகத் தற்போது தந்துள்ளது. ஆனால் இந்த வசதியினைப் பயன்படுத்த, உங்களுக்கு Firefox Sync அக்கவுண்ட் ஒன்று வேண்டும். அப்போது தான், உங்கள் தகவல்கள் அனைத்தையும், எங்கிருந்து வேண்டுமானாலும் நீங்கள் பயன்படுத்த முடியும். இது தற்போது அதிகம் பேசப்பட்டு வரும் கிளவுட் கம்ப்யூட்டிங் போலச் செயல்படும் வசதி ஆகும். இது குறித்த மேலதிகத் தகவல்களுக்கு http://www.mozilla.com/firefox/sync/ என்ற முகவரியில் உள்ள தளத்தினைப் பார்க்கவும்.
இணைய உலாவிப் பதிப்புகள் அனைத்துமே, தற்போது கண்களையும் மனதையும் கவர்ந்திழுக்கும் வண்ணம் அமைக்கப்படுகின்றன. அதற்கேற்ற வகையில், ராம் மெமரி, கிராபிக்ஸ் கார்டு திறன் மற்றும் இணைந்த, இயைந்த சாதனங்கள் கிடைக்கின்றன. பயர்பாக்ஸ் சோதனைத் தொகுப்பு 4ன் இந்த வசதிகள் இவற்றை அடிப்படையாகக் கொண்டே அமைக்கப்பட்டிருக்கின்றன. நீங்களும் இதனை இன்ஸ்டால் செய்து பயன்படுத்திப் பார்த்து மகிழலாம். உங்கள் கருத்தினை எங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
இந்த தொகுப்பினை click here என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து இலவசமாக டவுண்லோட் செய்திடலாம். இந்த தொகுப்பு உலகின் 35 மொழிகளில் கிடைக்கிறது.