சிறிய மற்றும் நடுத்தர நிலையில் இயங்கும் நிறுவனங்களின் தகவல் தொழில் நுட்பம் மற்றும் தொலைதொடர்புக்கான செலவினப் பாதியாகக் குறைத்திடும் வகையில் பல்வேறு ஆன்லைன் வசதிகளை மைக்ரோசாப்ட் நிறுவனம் அண்மையில் அறிமுகப்படுத் தியுள்ளது. இந்த சேவைகளை இரண்டு மாதத்திற்கு
இலவசமாகப் பெற்றுப் பயன்படுத்திப் பார்த்துப் பின் தேவை எனில் கட்டணம் செலுத்திப் பெறலாம். வர்த்தக ரீதியில் இவை வரும் அக்டோபர் மாதம் முதல் கிடைக்கும். வர்த்தக நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்கள், அலுவலர்கள், தனி உரிமம் பெற்று இயங்குபவர்கள் ஆகியோரை 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு தங்கள் வர்த்தக தொடர்பான அலுவல்களை குறைந்த செலவில் மேற்கொள்ளும் வகையில் இந்த வசதிகள் தரப்படுகின்றன. இதனால் நிர்வாக மற்றும் உற்பத்தி செலவுகள் குறைந்து நிறுவனத்தின் செயல்திறன் கூடும். இமெயில் போக்குவரத்து, டிஜிட்டல் நெட்வொர்க், எக்சேஞ் ஆன்லைன், ஆபீஸ் ஷேர் பாய்ண்ட் ஆன்லைன், வீடியோ கான்பரன்சிங், ஆபீஸ் லைவ் மீட்டிங், எம்.எஸ். ஆபீஸ் கம்யூனிகேஷன்ஸ் ஆன்லைன் எனப் பல வசதிகள் தரப்படுகின்றன. ஒரு நிறுவனம் இவை அனைத்தையும் மொத்தமாகக் கேட்டு கட்டணம் செலுத்தி வாங்க வேண்டும் என்பதில்லை. தேவைப்படும் வசதிகளை மட்டும் பெறலாம். பயன்படுத்தும் வசதிகளுக்கு மட்டும் கட்டணம் செலுத்தும் வசதியும் உண்டு. தேர்ந்தெடுக்கப்பட்ட சாப்ட்வேர் அப்ளிகேஷன்களை எப்போதும் வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம். இவற்றைப் பெற்றுப் பயன்படுத்துகையில் தேவைப்படும் ஆலோசனைகளையும் உதவியையும் மைக்ரோசாப்ட் எந்நேரமும் வழங்குகிறது. இந்த திட்டத்தினைத் தற்காலிகமாக இலவசமாகப் பெற நீங்கள் அணுக வேண்டிய தள முகவரி: www.microsoft.com/india/onlineservices.
இந்த முகவரிக்குள் முதலில் லாக் இன் செய்திடவும். பின் உங்கள் நாடு என்ற பட்டியலில் இந்தியா என்பதைட்தேர்ந் தெடுத்துப் பின் உங்கள் லைவ் மெயில் ஐ.டி.யைத் தரவும். அடுத்து எந்த எந்த சேவைகள் வேண்டும் என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின் உங்களுக்கு எந்த எந்த சர்வீஸ் தரப்படுகிறது என்று அறிவிப்பு கிடைக்கும். அதன் பின் அவற்றைப் பயன்படுத்தலாம்.
இனிமேல் ஆண்ட்ராய்ட்
கூகுளின் ஸ்மார்ட் போனுக்கான ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைத் தங்கள் போன்களில் கொண்டுவர முன்னணி மொபைல் தயாரிப்பாளர்கள் முன்வந்துள் ளனர். எச்.டி.சி., சாம்சங், எல்.ஜி., மற்றும் மோட்டாரோலா ஆகிய நிறுவனங்கள் நகரங்களில் வாழும் இளைஞர்களை முன்னிறுத்தி ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் போன்களைக் கொண்டு வர இருக்கின்றன. மத்திய மற்றும் உயர் ரக போன் வரிசையில் இவை கிடைக்கும். எச்.டி.சி. நிறுவனம் தன் முதல் ஆண்ட்ராய்ட் போனை இந்தியாவிற்குக் கொண்டு வந்துள்ளது. சாம்சங் கேலக்ஸி என்ற பெயரில் முதல் ஆண்ட்ராய்ட் போனை அடுத்த மாதம் கொண்டு வர இருக்கிறது. எல்.ஜி. மற்றும் மோட்டாரோலா நிறுவனங்களின் போன்கள் டிசம்பரில் இங்கு கிடைக்கும்.
இது குறித்து கூகுள் இந்தியா இயக்குநர் கூறுகையில் உலக அளவில் 47 நிறுவனங்கள் ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் போன்களைத் தயாரிக்க ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன என்று கூறினார். வரும் டிசம்பரில் பன்னாட்டளவில் 15 முதல் 20 மாடல்கள் ஆண்ட்ராய்ட் சிஸ்டத்துடன் வரும். ஆண்ட்ராய் இன்டர்நெட் பிரவுசிங் மற்றும் டச் ஸ்கிரீன் பிரிவில் பல புதுமையான வசதிகளைத் தரும் சிஸ்டமாகும். தற்போது சிம்பியன் மற்றும் விண்டோஸ் மொபைல் சிஸ்டங்கள் மார்க்கட்டில் பயன்படுத்தப்படும் மொபைல் போன்களில் இயங்குகின்றன.
அடுத்ததாக ஆண்ட்ராய்ட் பெரிய அளவில் இடம் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக மொபைல் பயன்படுத்துபவர்கள் தங்கள் போன்களில் எந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்குகிறது என்று பார்ப்பதில்லை. அவர்களுக்கு நவீன புதிய ஆச்சரியப்படத்தக்க வகையில் வசதிகள் தரப்பட வேண்டும்; அவ்வளவுதான். இதனை ஆண்ட்ராயட் அவர்களின் எதிர்பார்ப்புக்கும் மேலாக நிறைவேற்றும் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர். மேலும் ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைப் பயன்படுத்த எந்த உரிமைத் தொகையையும் செலுத்த வேண்டியதில்லை என்பதால் மொபைல் போன்களின் விலை குறைய அதிக வாய்ப்புகள் உள்ளன. தற்போது எச்.டி.சியின் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன் ரூ.30,000க்கும் சாம்சங் ரூ. 29,000க்கும் விற்பனையாகின்றன. இன்னும் குறைவாக ரூ.10,000 முதல் ரூ.15,000 வரைக்குள்ளாக போன்கள் வெளியானால் தான் மார்க்கட்டைப் பிடிக்க முடியும்.
விண்டோஸ் 7ல் எக்ஸ்பி மோட்
விண்டோஸ் எக்ஸ்பியின் தீவிர ரசிகர்களை இணைத்தால் ஒரு நாடே உருவாக்கலாம். அந்த அளவிற்கு எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஒன்றே போதும் என இருப்பவர்கள் கோடிக்கணக்கானோர். அதனாலேயே விண்டோஸ் விஸ்டா, எக்ஸ்பி பிரபலமான அளவிற்கு உயரவில்லை. இப்போது விண்டோஸ் 7 வர இருக்கிறது. மைக்ரோசாப்ட் அண்மையில் விண்டோஸ் எக்ஸ்பி ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தியைச் சொல்லி உள்ளது.விண்டோஸ் 7 தொகுப்பில் விண்டோஸ் எக்ஸ்பி மோட் வசதி தரப்படும். இதன் மூலம் விண்டோஸ் எக்ஸ்பியில் இயங்கி விண்டோஸ் 7ல் இயங்க மறுக்கும் புரோகிராம் ஒன்றினை விண்டோஸ் எக்ஸ்பி மோட் பெற்று இயக்க முடியும். இதன் மூலம் மக்களை விண்டோஸ் எக்ஸ்பியிலிருந்து விலகி விண்டோஸ் 7 தொகுப்பிற்கு வரச்சொல்கிறது மைக்ரோசாப்ட்.
ஆனால் இதில் ஒரு கெட்ட செய்தியையும் தந்துள்ளது. இந்த விண்டோஸ் எக்ஸ்பி மோட் விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் அனைத்து பதிப்புகளிலும் கிடைக்காது. புரபஷனல் மற்றும் அல்டிமேட் பதிப்புகளில் மட்டுமே கிடைக்கும். எனவே அதிகமானோர் வழக்கமாகப் பயன்படுத்தும் ஹோம் எடிஷன்களில் இது இருக்காது. மைக்ரோசாப்ட் இதனைக் கருத்தில் கொண்டு அனைத்து பதிப்புகளிலும் தரும் என்று எதிர்பார்க்கலாம்.
படைப்பு பிடித்திருந்தால் தங்கள் கருத்துக்களை கூறவும். நன்றி
படைப்பு பிடித்திருந்தால் தங்கள் கருத்துக்களை கூறவும். நன்றி
No comments:
Post a Comment