Wednesday, September 1, 2010
Wi-Fi வலைப்பின்னல்களின் தகவல்களை விரிவாக பெற – WirelessNetView
சமிப காலத்தில் கம்பியில்லா கணினி வலைப்பின்னல் மூலம்
இணைய தளம் மற்றும் அருகில் உள்ள கணினியுடன்
தகவல்களை பரிமாற்றிகொள்ள உதவுகிறது.
ஆனால் அருகில் ஒன்றுக்கு மேற்பட்ட கம்பியில்லா
கணினி வலைப்பின்னல் இருக்கிறது. நம் விண்டோஸ்சில்
இருக்கும் Wi-Fi receiver ரை இயக்கியதும் அருகில் இருக்கும்
அனைத்து வலைப்பின்னல்களையும் காட்டும். சில மறைக்கபட்ட
வலைப்பின்னல்களை மட்டும் காட்டாது. ஆனால்
திரட்டிய வலைப்பின்னல்களின் விவரம் குறைவாகதான்
இருக்கும்.
WirelessNetView எனப்படும் சிறய அளவிலான இலவச மென்பொருள்
முழு தகவல்களை திரட்ட உதவும். இது விண்டோஸ்சில் இயங்க
கூடியது, உங்கள் அருகில் இருக்கும் வலைப்பின்னல்களின் ஒலிபரப்பு
அலைவரிசையை கண்டறிந்து தகவல்களை அளிக்க கூடியது.
அந்த அலைவரிசை தகவல்களை அட்டவணைப் பட்டியலாக அளிக்கும்.
குறிப்பிட்ட அலைவரிசையை நீங்கள் Double Click செய்தஉடன் தனியாக
ஒரு Window திறக்கும் அதில் அந்த வலைப்பின்னலின் பலவித
தகவல்களை அளிக்கும்.
இது உங்களுக்கு சிறந்த வலைப்பின்னலை தேர்தெடுக்க உதவும்.
இந்த சிறிய மென்பொருளை இணையத்தில் இருந்து எடுக்க
இங்கு Click செய்யவும் -> WirelessNetView
மறக்காம உங்க ஓட்ட குத்திட்டு போங்க.. கள்ள ஓட்டு வேண்டாம்..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment