அவன்: பொண்ணு கிளி மாதிரி இருப்பான்னு சொன்னதை நம்பி கல்யாணம் பண்ணிட்டது தப்பாப் போச்சு.
இவன்: ஏன்?
அவன்: சொன்னதையே திருப்பித் திருப்பிச் சொல்லிக்கிட்டிருக்கா!
------------------------------------------------------------------------
எமன்: சித்திரகுப்தா, என்ன அங்கே ஒரே சப்தமாக இருக்கிறது?
சித்திரகுப்தன்: புதிதாக வந்தவர்களை சீனியர்கள் ராகிங் செய்து கொண்டிருக்கிறாகள் ப்ரபோ!
------------------------------------------------------------------------
அவர்: எப்ப பார்த்தாலும் மரத்துமேல ஏறி உட்காந்துக்குறாரே, அவர் யாரு?
இவர்: அவர்தாங்க தொகுதியோட 'கிளை'ச் செயலாளர்.
------------------------------------------------------------------------
திருச்சி ரயில் நிலையத்தில் நண்பரை வழியனுப்ப நின்று கொண்டிருந்தேன். அது தானா வழியாகப் போகும் ரயில். ரயில் புறப்படும் நேரத்துக்குத் தமிழர் ஒருவர் ஓடி வந்து நண்பரிடம் “சார், இந்த ரயில் தானா போகுமா?” என்று கேட்டார். உடனே நண்பர் “இல்லைங்க, யாராவது ஓட்டினால்தான் போகும்” என்று ஒரு போடு போட்டாரே பார்க்கலாம்.
------------------------------------------------------------------------
அப்பா: அப்பா சொன்னா கேட்கணும் இல்லாட்டி நீ உருப்படவே மாட்டே.
மகன்: அதை இப்போ நினைச்சு என்ன பிரயோஜனம். தாத்தா செல்லும்போது நீங்கள் கேட்டிருக்கணும்.
------------------------------------------------------------------------
நீதிபதி: (தூக்கு தண்டனைக் கைதியிடம்) சாகறதுக்கு முன்னாடி உனக்குக் கடைசி ஆசை ஏதாவது இருந்தா சொல்லுப்பா?
கைதி: மகாத்மா காந்தியை ஒரே ஒரு முறை நேர்ல பாத்துட்டு நான் சாகணும் எசமான்.
------------------------------------------------------------------------
ராமு, உன்னை வைரஸ் கிருமியோட படத்தை வரைஞ்சிட்டு வரச் சொன்னேனே, ஏன் நோட்ல வரைஞ்சிகிட்டு வல்ல...?
டீச்சர், நான் வரைஞ்சிருக்கேன். ஆனா, நீங்க மைக்ராஸ்கோப்புல பாத்தாதான் அது தெரியும்.
------------------------------------------------------------------------
வக்கீல்: போஸ்ட் மார்ட்டம் ஆபரேஷன் செய்வதற்கு முன்னால் நாடியைச் சோதித்தீர்களா?
சாட்சி: இல்லை
வக்கில்: ரத்த அழுத்தம்?
சாட்சி: இல்லை
வக்கீல்: இருதயத்துடிப்பு?
சாட்சி: இல்லை.
வக்கீல்: அப்படியென்றால் அந்த ஆள் உயிருடன் இருந்திருப்பதற்கு வாய்ப்பு இருந்திருக்கலாம் இல்லையா?
சாட்சி: இல்லை. ஏனென்றால் அவனது மூளை ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில் எடுத்து வைக்கப்பட்டிருந்தது.
வக்கீல்: இருந்தாலும் உயிர் பிரியாமல் இருக்கலாம் இல்லையா?
சாட்சி: (சலிப்படைந்து) இருந்தாலும் இருக்கலாம் எங்கேயாவது கோர்ட்டில் உங்களைப்போல வக்கீலாக.
------------------------------------------------------------------------
வக்கீல்: உங்கள் பிறந்ததேதி என்ன?
சாட்சி: ஜூலை 15
வக்கீல்: எந்த வருஷம்?
சாட்சி: எல்லா வருஷமும்
------------------------------------------------------------------------
வாடிக்கையாளர்: (தொலைபேசியில்) ஹலோ, பேப்பர் தோசை இருக்குங்களா?"
ஓட்டல்காரர்: இருக்குதே.
வாடிக்கையாளர்: அப்ப 408-991-4950-க்கு அதை ஃபேக்ஸ் பண்ணிடுங்க..."
------------------------------------------------------------------------
"டாக்டர், பையன் லட்டை முழுங்கிட்டான். ஆபரேஷன் பண்ணியாவது வெளியில எடுத்திடுங்க."
"லட்டுக்கு ஏன் இந்தப் பயம் பயப்படறீங்க?"
"ஐயோ அது வேட்பாளர் தந்த லட்டு. உள்ளே வைர மோதிரம் வெச்சிருக்காறாம்."
------------------------------------------------------------------------
ஒருவன்: சூரியனா, டெல்லியா, எது அதிக தூரம்?
மற்றவன்: உன் கண்ணுக்கு டெல்லி தெரியுதா?
------------------------------------------------------------------------
என்னங்க "இன்றைய கூட்டு"ன்னு தலைப்பு எழுதி இருக்கீங்க. கீழே என்ன கூட்டுன்னு எழுதலே. இது என்ன ஓட்டல்?
இது ஓட்டல் இல்ல. கட்சி அலுவலகம். இன்னிக்கு எந்த கட்சியோட கூட்டணில இருக்கோம்னு எங்களுக்குத் தெரிஞ்ச உடனே எழுதி வைக்கறோம்.
------------------------------------------------------------------------
அப்படியே சிரிச்சிக்கிட்டே ஒரு ஓட்ட குத்துங்க.........
HA HA
ReplyDeleteMany are new, good jokes.
ReplyDelete