Friday, September 10, 2010

தொழில்நுட்ப வளர்ச்சி..............

bluefairy க்கு நன்றி........



தொழில்நுட்ப வளர்ச்சி இன்று தேவை தானா?

பட்டி மன்றம் நடக்கிறது என் வீட்டுக்கருகில் .........
ஜன்னல் ஓரம் நின்று வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன்........

இரு பக்கத்தில் இருந்தும் வெடி குண்டு தாக்குதலாய் கருத்து தோட்டாக்கள் சீறி பாய்ந்து கொண்டிருக்கிறது...............

ஒருவர்: இன்று கணிப்பொறி இல்லாத இடமே இல்லை...........

எதிராளி: அதனால் தான் இன்று மனைவிடம் பேச்சு வார்த்தை கூட வீடியோகாமில் நடக்கிறது.........

அவர்: டீவீ இருந்தால் இப்போது உலகமே உங்கள் வீட்டில் தான்...........

எதிராளி: ஆனால் எங்கள் வீட்டில் இப்போது உலகமே டீவீ தான்...............

விடாமல் அங்கும் இங்குமாய் சரவெடிகள் வெடித்து சிதறியது.......
நடுவருக்கோ எங்கே சண்டையில் தான் முடியுமோ என்ற பீதி.........
ரெண்டுமே ஹை பீ.பி கேஸ் என்று மக்களுக்குள் ஒரே சலசலப்பு...........
இருவரும் ஒருவரை ஒருவர் எதிர்த்து கத்திக்கொண்டிருந்தனர்.........

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..................
மயான அமைதி.............
ஒளி பெருக்கி நின்றது............
யவரோ சொன்னார் .........கரண்ட் போச்சு............

எல்லா மனதிலும் ஒரே சிந்தனை "தொழில்நுட்ப வளர்ச்சி தேவை இல்லை" என்று...........

ஆனால் எனக்கோ இப்போது அவர்கள் எப்படி வீடு போய் சேர்வார்கள் கரண்ட்டும் இல்லாமல் டார்சும் இல்லாமல் இந்த தொழில்நுட்ப வளர்ச்சி இல்லாமல் என்ற ஏளனம்.........

பதிவு பிடித்திருந்தால் மறக்காமல் ஒட்டு போடவும்........

No comments:

Post a Comment