Wednesday, September 15, 2010

பிளாக்பெரியை தொடர்ந்து கூகுளுக்கும் நோட்டீஸ்: மத்திய அரசு முடிவு




புதுதில்லி: பிளாக்பெரியைத் தொடர்ந்து கூகுள் மற்றும் ஸ்கைப் நிறுவனங்ளுக்கும் நோட்டீஸ் அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

பிளாக்பெரி தொலைபேசிகள் மூலமாக அனுப்பப் படும் குறுஞ்செய்திகள் மற்றும் மின்னஞ்சல்களை மூன்றாவது நபர் யாரும் கண்காணிக்க முடியாது. இதை பயன் படுத்தி தீவிரவாதிகள் நாச வேலைகளில் ஈடுபடக் கூடும் என்பதால், அந்த கைபேசிகளை தடை செய்ய மத்திய அரசு முடிவு செய்திருந்தது.

ஆனால், பிளாக்பெரி கைபேசிகளில் இருந்து அனுப்பப் படும் தகவல்களை மத்திய அரசு கண்காணிக்க ஏதுவாக இந்தியாவில் சர்வர் அமைக்கப் படும் என அந்நிறுவனம் அண்மையில் அறிவித்தது. இதனையடுத்து, பிளாக்பெரி கைபேசிகளை தடை செய்ய அரசு நிர்ணயித்திருந்த கால கெடு 2 மாதங்களுக்கு நீட்டிக்கப் பட்டது.

இந்நிலையில், கூகுள் மற்றும் ஸ்கைப் நிறுவனங்களுக்கும், இந்தியாவில் சர்வர் அமைக்க கோரி நோட்டீஸ் அனுப்பப் படும் என உள்துறை செயலர் ஜி.கே.பிள்ளை தெரிவித்துள்ளார். ஆனால், எப்பொழுது நோட்டீஸ் அனுப்பப் படும் என்பதை அவர் கூறவில்லை.

படைப்பு பிடித்திருந்தால் தவறாமல் ஒட்டு போட்டு தங்கள் அன்பை தெரிய படுத்தவும்.

No comments:

Post a Comment