ஹாய் நண்பர்களே,
இந்த பதிவில் என் நண்பருடன் இன்று நடந்த ஒரு நிகழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பிகிறேன்.
சமீபத்தில் என்னுடைய நண்பர் என்னிடம் அவருடைய டெல் லேப்டாப்பில் window xp இயங்கு தளம் போட்டு தருமாறு கேட்டு கொண்டார். அவரிடம் Dell N5010 மாடல் வகை லேப்டாப் வைத்திருந்தார். அந்த லேப்டாப் வாங்கி சில நாட்கள்தான் ஆகி இருக்கின்றன. அதில் ஏற்கெனவே விற்பனையளர்கள் windows 7 இயங்கு தளம் இன்ஸ்டால் செய்து கொடுத்திருந்தனர்.
அதனால் அவர் லேபடோப் வாங்கிய தேதியில் இருந்து விண்டோஸ் 7 இயங்கு தளத்தையே உபயோகபடுத்தி வந்தார். ஆனால் சில சாப்ட்வேர்கள் இயங்க மறுத்தன. ஏன் என்றால் அந்த வகையான சாப்ட்வேர்கள் விண்டோஸ் xp இல் மட்டுமே இயங்க கூடியன.
அவருக்கு தேவையான நிறைய சாப்ட்வேர்கள் விண்டோஸ் 7 ல் இயங்க மறுத்தன. ஆதலால் அவர் என்னிடம் விண்டோஸ் xp இயங்குதளம் போட்டு தருமாறு வேண்டி கொண்டார். நான் டெல் லேப்டாப்பை பற்றி எதையும் தெரிந்து கொள்ளாமல் நானும் அவருக்கு விண்டோஸ் xp போட்டு கொடுத்தேன்.
பிறகுதான் எனக்கு தெரிந்தது அதில் மிகபெரிய பிரச்னை உள்ளது என்று. அது என்னவென்றால் டெல் லேப்டாப்பில் விண்டோஸ் xp இயங்குதளம் இன்ஸ்டால் செய்தால் அதற்கான டிரைவர்ஸ் எதுவுமே ஆன்லைனில் இல்லை. அது மட்டும் இல்லாம அவரிடம் இருந்த டிரைவர் CD யிலும் விண்டோஸ் xp க்கான டிரைவர்ஸ் பைல்கள் எதுவுமே இல்லை. அப்படியே அதில் இருந்த விண்டோஸ் 7 க்கான பைல்களையும் கிளிக் செய்து பார்த்து விட்டேன். இன்ஸ்டால் ஆகவில்லை. அதாவது டெல் லேப்டாப் அதை சப்போர்ட் பண்ணவில்லை என்று பிறகுதான் தெரிந்து கொண்டேன்.
இது எனக்கும் என் நண்பருக்கும் மற்றும் நம்மைப்போல் டெல் லேப்டாப் வாங்கிய அனைவருக்கும் பிரச்சினையாக உள்ளது. நானும் ஒரு நாள் முழுக்க ஆன்லைனில் உட்கார்ந்து தேடி பார்த்து விட்டேன். விண்டோஸ் xp க்கான டிரைவர்ஸ் எதுவுமே கிடைக்கவில்லை. நானும் என் நண்பரிடம் அவ்வாறு அந்த இயங்குதளத்தை இன்ஸ்டால் செய்தால் டிரைவர்ஸ் இல்லாமல் எதையும் உபயோகிக்க முடியாது என்றும் இதையே உபயோகபடுத்துங்கள் என்று கூறி
மீண்டும் விண்டோஸ் 7 இயங்குதளத்தையே மீண்டும் போட்டு கொடுத்து விட்டேன். இதனால் என் நண்பர் சோகத்தோடு சென்று விட்டார்.
டெல் லேடோப்பில் விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் vista க்கு மட்டுமே டிரைவர்ஸ்கள் மட்டுமே ஆன்லைனில் உள்ளன. அது மட்டும் இல்லாமல் விண்டோஸ் xp இயங்குதளம் இன்ஸ்டால் செய்ய வேண்டாம் என்றும் அவ்வாறு இன்ஸ்டால் செய்தால் டிரைவர்ஸ் எதுவும் சப்போர்ட் செய்யாது என்று இருந்தது.
இதில் சென்று பாருங்கள் கிளிக். இந்த லேப்டாப்பை வாங்கியவர்கள் அனைரும் தங்களுடைய விண்டோஸ் க்கான குறையை கூறி உள்ளனர்.
ஆகவே நீங்களும் டெல் லேப்டாப்பில் இது போன்ற குறைகள் நிறைய இருப்பதால் சற்று யோசித்து விட்டு பிறகு வாங்குங்கள்.
பதிவு பிடித்திருந்தால் ஓட்டு போட்டு என்னை ஊக்கபடுத்தவும்.
அன்புடன்,
ரவி குமார்
Not only Dell, even HP, Compaq has the same problem.
ReplyDelete