Tuesday, September 14, 2010

தேவையற்ற அழைப்புகளை தடுக்க விரைவில் புதிய விதிமுறைகள்: ட்ராய்



ஐதரபாத்: தேவையற்ற வியாபார அழைப்புகளை தடுக்க விரைவில் புதிய விதிமுறைகளை அறிமுகப் படுத்தப் போவதாக தகவல் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) அறிவித்துள்ளது.

நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, ஒரு முக்கியமான கூட்டத்தில் இருந்த போது அவரது அலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது. பிரணாப் முகர்ஜி அழைப்பை ஏற்று பேசியவுடன், 'உங்களுக்கு கடன் வேண்டுமா?' என்று ஏதோ ஒரு வங்கியில் இருந்து கேட்டுள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து இதை போன்ற வியாபார அழைப்புகளை தடுக்க தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ராசா உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டார்.

தற்போது, இதைப் போன்ற வியாபார அழைப்புகளை தடுக்க புதிய விதிமுறைகளை விரைவில் அறிமுகப் படுத்தப் போவதாக ட்ராய் அறிவித்துள்ளது.

இது குறித்து நேற்று (செப்.6) ஐதரபாத்தில் செய்தியாளர்களிடம், ட்ராய் தலைவர் டாக்டர். ஜே.எஸ்.ஷர்மா கூறுகையில், "தேவையற்ற அழைப்புகளையும், குறுஞ்செய்திகளையும் (SMS) தடுப்பது குறித்து ஆலோசனை நடத்தியுள்ளோம். இதற்கான விதிமுறைகளை இறுதி செய்யும் நிலையில் உள்ளோம். இந்த மாத இறுதிக்குள் புதிய விதிமுறைகளை அறிமுகப் படுத்துவோம்." என்றார்.

1 comment:

  1. பல நாட்களாய் சொல்லிகொண்டு இருக்கிறார்கள். பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்

    ReplyDelete